கஞ்சி (வட இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A red drink in a cup
கஞ்சி

கஞ்சி (Kanji) என்பது ஒரு புளிக்கவைக்கப்பட்ட பானம் ஆகும்.[1] இது இந்தியத் துணைக் கண்டத்தில் உருவானது. ஹோலி பண்டிகைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

கஞ்சி தண்ணீர், மஞ்சள் முள்ளங்கி, பீட்ரூட், கடுகு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் மேல் பூந்தி தூவி பரிமாறலாம்.

ஊட்டச்சத்து, கஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. நலநுண்ணுயிரி பாக்டீரியாவின் பதினொரு விகாரங்கள் கஞ்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பீடியோகாக்கசு அசிடிலாக்டிசி என்ற விகாரம் அதிக வளர்ச்சித் திறனுடன் மரபணு ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2] இதிலிருந்து மாறுபட்ட பொருட்களைக் கொண்டு பானமாகத் தயாரிக்கப்படும் கஞ்சி இந்தியாவின் தென்மாநிலங்களில் பிரபலம்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சி_(வட_இந்தியா)&oldid=3790741" இலிருந்து மீள்விக்கப்பட்டது