கச்சாய் கடல் நீரேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கச்சாய் கடல் நீரேரி

கச்சாய் கடல் நீரேரி, இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம் தென்மராட்சியின் தென் திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல் நீரேரியாகும். இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு, ஆகிய ஊர்கள் உள்ளன. இக் கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது.

இக் கடல் நீரேரி சேத்துக்கடல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கடல் நீரேரியில் இருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ் கடல் நீரேரிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல் நீரேரியில் காணப்படுகின்றன. இங்கு கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள்.

ஈழப்போராட்ட வரலாறில்[தொகு]

யாழ்ப்பாணம் கண்டி ஏ 9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின் இக் கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்கு வரத்துப் பாதையாக அமைந்தது.

ஈழப்போராட்ட வரலாற்றில் இந்த கடல் நீரேரி பெரும் பங்கு வகித்ததேன்றே சொல்லலாம். 1990 இருந்து 1995 வரை யாழ்ப்பாணத்து மக்கள் தென்னிலங்கை செல்வது என்றால் இந்த கடல் நீரேரி வழியாகத்தான் பூநகரி என்னும் இடத்துக்கு சென்று அதில் இருந்து பரந்தன் வழியாக ஏ 9 நெடுஞ்சாலை அடைந்து அந்த பாதையின் ஊடாக தென்னிலங்கை செல்வார்கள்.

அதே வேளை இந்த கடல் நீரேரியில், இந்தக் காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் வாளினால் வெட்டியும், துப்பாக்கியினால் சுட்டும் கொல்லப் பட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆழம்[தொகு]

இக் கடல் நீரேரியின் அதிகூடிய ஆழம் நான்கு மீட்டர்கள். இப் பகுதி கிளாலி என்று அழைக்கப்படும். கச்சாய் பகுதியில் இருக்கும் இந்த கடல் நீரேரியின் ஆழம் பொதுவாக ஒரு மீட்டர் இருக்கும்.

கடல் போக்குவரத்துப்பாதை[தொகு]

கச்சாய் துறைமுகத்திலிருந்த நான்கு கி.மீட்டர் தென் கிழக்கு திசை, அதிலிருந்து நான்கு கி.மீட்டர் தெற்கு திசை, அதிலிருந்து சங்குப்பிட்டிஊடாக தென் மேற்கு திசை பதினெட்டு கி.மீட்டர் சென்றால் பாக்குநீரினையில் இணையலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சாய்_கடல்_நீரேரி&oldid=1835459" இருந்து மீள்விக்கப்பட்டது