பேச்சு:கச்சாய் கடல் நீரேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடல்நீரேரி (fjord) என்ற சொல் இந்த இடத்தில் பொருத்தமற்றது என நினைக்கின்றேன். எனவே தலைப்பை மாற்றக் கோருகின்றேன்.--கலை (பேச்சு) 08:01, 5 செப்டெம்பர் 2012 (UTC)

கடல்நீரேரி என்ற சொல் பரவலாகத் தமிழில் பயன்பாட்டில் உள்ள சொல். இங்கு அது பொருத்தமாகவே உள்ளதாகப் படுகிறது. ஆனால் fjord என்ற சொல் ஸ்காந்திநேவியாவில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அங்கு வேறு அர்த்தத்தில் இது பயன்படுத்தப்பட்டிருக்கும். பனி நாடுகளில் மட்டுமே கடல்நீரேரி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்பது தவறாகும். fjord என்ற சொல்லுக்கு வேறு தமிழ்ச் சொல் கண்டுபிடிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:20, 5 செப்டெம்பர் 2012 (UTC)
தவிர, கடல்நீர் ஏரி என்றோ கடல்நீரேரி என்றோ கடனீரேரி என்றோதான் வர வேண்டுமென நினைக்கிறேன். கடல்+நீரேரி எனப் பிரித்து எழுதியிருப்பது சரியா தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 08:30, 5 செப்டெம்பர் 2012 (UTC)

நானும் இங்கே தலைப்பு மாற்றக் கோரிவிட்டுத்தான், மீண்டும் அதனை ஆராய்ந்து பார்த்தேன். அப்போது கடல்நீரேரி என்பது இந்த இடத்தில் சரியாகவே தோன்றியது. fjord என்ற சொல்லுக்கு வேறு தமிழ்ச் சொல் கண்டுபிடித்தால் நல்லது. அந்தக் கட்டுரையின் தலைப்பை மாற்றி விடலாம்.--கலை (பேச்சு) 08:59, 5 செப்டெம்பர் 2012 (UTC)

பேச்சு:கடனீரேரி கட்டுரையிலும் இந்தச் சொல்பற்றிய உரையாடல் நடந்துள்ளது. எனவே அதனையும் பார்த்து, உரையாடி ஒரு முடிவுக்கு வரலாம்.--கலை (பேச்சு) 09:04, 5 செப்டெம்பர் 2012 (UTC)

கச்சாய் கடல் நீரேரி ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த இடமாகும், யாழ்பாண வரலாற்றில் இது பல சிறப்பு அம்சங்களை குடுத்துள்ளதனால், இந்த தலைப்பு மாற்றவேண்டாம் என்று கருதுகிறேன். அதே வேளை கடல் நீரேரி என்று பிரித்து எழுதும் முறைதான் காணப்படுகிறது. பல இடங்களில் இதை பற்றிய ஆய்வு செய்த பின் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன், அதேவேளை இக் கடல் நீரேரி பல ஊர்களுக்கு எல்லைகளாக இருந்தாலும், இக் கடல் நீரேரியின் துறைமுகம் கச்சாயில் உள்ளதனால், கச்சாய் கடல் நீரேரி என்று அழைக்கப்படுகிறது. அதேவேளை யாழ் கடல் நீரேரி என்பது வேறு. அதன் துறைமுகமாக, கொழும்புத்துறை துறைமுகம் உள்ளது.--Sivam29 (பேச்சு) 10:41, 5 செப்டெம்பர் 2012 (UTC)

பிரித்து எழுதும்போது கடல்நீர் ஏரி என்றுதான் பிரிக்க வேண்டும் போல் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 10:46, 5 செப்டெம்பர் 2012 (UTC)

கலை வணக்கம். கூகிள் தேடுபொறியில் கடல் நீரேரி என்ற சொல்லை தேடும் பொழுது, பல இணையதளங்களில் இதே போன்றுதான் எழுதி இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கூறுவது போன்று கடல்நீர் எரி செர்த்தேழுதினால் அதற்கான இணைய பக்கங்களை காட்டவில்லை.--−முன்நிற்கும் கருத்து Sivam29 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இப்போதைக்கு தலைப்பை மாற்ற வேண்டாம். கடல் நீரேரி என்றே பொதுவாக யாழ்ப்பாணத்தில் எழுதப்படுகிறது. இவ்வாறு எழுதுவது தவறில்லை என்றும் எனக்குப் படுகிறது.--Kanags \உரையாடுக 11:08, 5 செப்டெம்பர் 2012 (UTC)
எனக்குப் பெரிய இடர் எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் கடல்நீர் நிறைந்துள்ள ஏரி என வரும்போது கடலும் நீரும் இணைந்து வர வேண்டும்போலத் தோன்றியது. மேலும் நீர் உள்ளதுதானே ஏரி என்பதால் நீரேரி எனத் தனியாக வருவதும் உறுத்துகிறது. அது இடப்பெயராக இருந்தால் நீங்கள் சொல்வது போலவே இருக்கட்டும், மாற்ற வேண்டியதில்லை. -- சுந்தர் \பேச்சு 11:51, 5 செப்டெம்பர் 2012 (UTC)

//கடல்நீர் நிறைந்துள்ள ஏரி என வரும்போது கடலும் நீரும் இணைந்து வர வேண்டும்போலத் தோன்றியது. மேலும் நீர் உள்ளதுதானே ஏரி என்பதால் நீரேரி எனத் தனியாக வருவதும் உறுத்துகிறது.// இதையேதான் நானும் நினைத்துச் சொன்னேன். தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்காக இல்லை. மேலும், பேச்சு:கடனீரேரியிலும் கருத்துக்களைச் சொன்னால், அல்லது நல்ல தலைப்பு ஒன்றை யாராவது முன்மொழிந்தால், அந்த தலைப்பையும் மாற்றலாம்.--கலை (பேச்சு) 13:11, 5 செப்டெம்பர் 2012 (UTC)

நீர் நிலை அறிக்கை[தொகு]

 • குண்டு என்பது குறைந்த நீர் நிலை கொண்டா இடமான கேணி, கிணறு, குளம் போன்றவற்றின் நடுப்பகுதியில் ஆழமாக தாள்வமிடுவது குண்டு எனப்படும்.
 • கேணி எனப்படுவது நீர் தேவைக்காக பூமியில் அகலமான நிலப்பரப்பை கிண்டி அல்லது தோண்டி நீரைப்பெறுவது கேணி எனப்படும்
 • கிணறு என்பது சிறிய இடத்தில் சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ கல்லினால் கட்டப்பட்டு அதனுள் இருந்து நீரை எடுப்பது கிணறு எனப்படும்.
 • குளம் என்பது ஒரு குறிப்பிட்ட சிறிய நீர்பரப்பை சுற்றி மண் வரம்புகளால்/மன்மேடுகளால் கட்டி இருப்பது குளம்' எனப்படும்.
 • எரி என்பது ஒரு பெரிய நீர்ப்பரப்பை மண், அல்லது கல்லினால் கட்ப்டபட்ட அணைகலாலோ அல்லது பெரும் மலைகளுக்கிடையில் இருக்கும் பள்ளத்தாக்கில் நிறைந்திருக்கும் பெரிய நீர்பரப்பு ஏரி எனப்படும்.
 • கடல் நீரேரி என்பது பெரியதொரு உவர் நீர்ப்பரப்பு நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டு ஒரு சிறிய நீர்பாதை கடலுடம் இணைக்கப்பட்டால் அது கடல் நீரேரி எனப்படும்.
 • கடல் என்பது ஆழம் குறைந்த பெரிய நீர்பரப்பை கடல் எனப்படும்.
 • சமுத்திரம் என்பது ஆழம் கூடிய பெரிய நீர்ப்பரப்பை சமுத்திரன் எனப்படும்.
 • ஆழி என்பது ஆழமான பெரிய நீர்ப்பரப்பில் காணப்படும் ஆழமான பள்ளங்கள்,குழிகள்,குண்டுகள் ஆழி எனப்படும்.
 • களப்பு என்பது மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்டு ஒரு புறம கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய நீர்பரப்பு களப்பு எனப்படும்.
 • குடா என்பது மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்டு ஒருபுறம் கடலால் சூழப்பட்ட ஒரு பெரிய நீர்ப்பரப்பு குட எனப்படும்.--Sivam29 (பேச்சு) 14:21, 5 செப்டெம்பர் 2012 (UTC)
இவை தவிர ஊற்று (பாறைகளிடையேயோ நிலத்தில் இருந்தோ நீர் ஊறி வருவது), ஊருணி, கண்மாய் (ஏரி போன்றது, வேளாண் தேவைக்காக வடிகால்களைக் கொண்டது), கிடங்கு அ குட்டை (நீரைத் தேக்கி வைக்கும் பள்ளம், மாடுகளையும் குளிப்பாட்டுவர்), ஆறு, காட்டாறு, வாய்க்கால், கால்வாய், ஓடை, அருவி, சதுப்பு நிலத்தில் இருக்கும் நீர் (பெயர் நினைவில்லை) போன்ற இன்னும் பல சொற்கள் தமிழில் உள்ளன. எசுக்கிமோக்களுக்குப் பனி எப்படியோ நமக்கு நீர் அப்படி! -- சுந்தர் \பேச்சு 13:33, 6 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் சுந்தரம். நீங்கள் சொல்வது உண்மையில் சரியானவை ஆனால் அதற்கான சரியான விளக்கம் எனக்கு தெரியவில்லை என்பதனால் அவற்றை நான் இங்கு இடவில்லை, மற்ற விக்கி நண்பர்களுக்கு தெரிந்தால் கூறுவார்கள் என்று நினைக்கின்றேன்.--Sivam29 (பேச்சு) 13:42, 6 செப்டெம்பர் 2012 (UTC)

அப்படியே இதனையும் எப்படி அழைக்கலாம் என்று சொல்லிவிடுங்கள் :). பனியாற்றுப் படிமங்கள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத் தாக்குகளில் கடல் நீரானது உட்புகுந்து இரு மருங்கும் நிலப்பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையாக அமைவது. அதாவது Fjord. தற்போது கடனீரேரி என்ற பெயரிலேயே அந்தக் கட்டுரை உள்ளது. அந்தப் பெயர் பொருத்தமற்று இருப்பதாக அனைவரும் நினைப்பதாலும், சொற் குழப்பத்தைத் தவிர்க்கவும் அதற்கு ஒரு சரியான பெயர் வைக்க வேண்டும். :) நானும் கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன். ஒருவரும் சொல்கின்றார்கள் இல்லை.--கலை (பேச்சு) 14:00, 6 செப்டெம்பர் 2012 (UTC)

கலை அம்மா வணக்கம். உங்களின் நிலைமை எனக்கு நன்றாக புரிகிறது, ஆனால் இன்றைய காலத்தில் பேச்சிலும், எழுத்திலும் பல விஷயங்கள் மாறு பட்டே இருக்கின்றன, அதே வேளை தலையங்கம் என்பது எப்போதும் பிரித்துத்தான் எழுத வேண்டும் என்று சிறு வயதில் படித்து இருக்கிறேன், அதே வேளை அதற்கான கட்டுரைகளுள் சேர்த்து எழுதலாம் என்று சொல்லி தந்தார்கள். ஆனால் இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் கூகிள் தேடு பொறியில் பெரும்பாலான சொல்கள் பிரித்தே எழுதப் பட்டுள்ளன. அதானால் விக்கியின் மூத்த நண்பர்கள்தான் இதற்கான சரியான தலையங்கத்தை எடுக முடியும் என்று நான் கருதுகிறேன். நன்றி.--Sivam29 (பேச்சு) 14:17, 6 செப்டெம்பர் 2012 (UTC)

இந்த கட்டுரையின் தலையங்கத்துக்கு விடை வந்துள்ளன, அவையாவன:

 • கவிதை இலக்கணம்:கடனீரேரி
 • யாப்பிலாக்கணம்: கடல்நீர் ஏரி
 • பேச்சு வழக்கு: கடல் நீர் எரி

கட்டுரைகளுக்கு வருவது யாப்பிலக்கணம் என்று அறியப்படுகிறது. --Sivam29 (பேச்சு) 18:49, 6 செப்டெம்பர் 2012 (UTC)

தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கின்றேன். நான் இந்தக் கட்டுரையின் தலைப்பை மாற்ற கேட்கவில்லை. ஏற்கனவே இருந்த கடனீரேரி என்ற கட்டுரையின் தலைப்பை மாற்றத்தான் கேட்கின்றேன். அந்த தலைப்பை மாற்ற வேண்டுமென ஏற்கனவே அந்தக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் பேசியிருக்கின்றோம். இதுவரை அந்தக் கட்டுரைக்கான சரியான தலைப்பு கிடைக்கவில்லை. அதைத்தான் கேட்டேன். ஒரு சின்ன வேண்டுகோள், அம்மா என்ற அடைமொழியெல்லாம் தயவுசெய்து வேண்டாமே. கலை என்று அழைத்தாலே போதுமானது. நன்றி.--கலை (பேச்சு) 20:58, 6 செப்டெம்பர் 2012 (UTC)
கலை, இது கடலை ஒட்டி உள்ள உயர்ந்த பாறை அல்லது மலையிடையே இடுக்கான இடத்தில் கடல்நீர் பாய்திருக்கும் ஏரி போன்றது என்பதால் கடனீர் இடுக்கேரி எனலாம். அல்லது சுருக்கமாக இடுக்கேரி எனலாம். இன்னொரு சொல் கணவாயேரி எனலாம். கணவாய் என்பது மலையிடையே உள்ள இடுக்கான பாதை. பியோர்டு என்றே கூடக் கூறலாம். --செல்வா (பேச்சு) 16:40, 7 செப்டெம்பர் 2012 (UTC)

நீர்நிலைகள்[தொகு]

"குளங்குட்டை" என பேச்சு வழக்கில் பயன்படும் சொல்லை கேள்விப்பட்டுள்ளீர்களா? இதில் குட்டை என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும்; சில நேரங்களில் நீர் தேங்கியிருக்கும் ஓரிடத்தைக் குறிக்கவும் பயன்படும்.

கிளிநொச்சி, முல்லத்தீவு போன்ற தமிழர் பகுதிகளில் சில ஊர்களின் பெயர்கள் "புளியம்பொக்கனை", "ஊரேழு பொக்கனை", "அம்பலவன் பொக்கனை" என அமையும் பெயர்களின் பின்னொட்டாக வரும் பொக்கனை என்பதும் நீர்நிலைகளை குறிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். இருப்பினும் "பொக்கனை" எனும் பெயருள்ள இடங்களில் எல்லாம் நீர்நிலைகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. மேலும் இப்படத்தைப் பார்க்கவும். [1] தமிழ்நாட்டில் இப்பெயர் அல்லது சொல் வழக்கில் உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும். −முன்நிற்கும் கருத்து 219.77.138.138 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தலைப்பு[தொகு]

யாழ்ப்பாண நீரேரி அல்லது யாழ்ப்பாணக் கடல் நீரேரி என்று இருக்க வேண்டும் என கருதுகிறேன். --Anton (பேச்சு) 12:49, 15 ஏப்ரல் 2013 (UTC)

ஆங்கில விக்கியில் jaffna lagoon என்று இருக்கிறது. எனவே தமிழில் யாழ்ப்பாண நீரேரி என்று இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எது வழக்கத்தில் உள்ள சொல் என்று தெரியவில்லை. --Natkeeran (பேச்சு) 22:46, 2 நவம்பர் 2013 (UTC)
யாழ்ப்பாணக் கடல் நீரேரி அல்லது யாழ் கடல் நீரேரி வழக்கத்தில் உள்ள சொல். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:34, 3 நவம்பர் 2013 (UTC)
அன்ரன் சொல்வது சரி என்றே நம்புகிறேன். இணையத்தில் தேடும் போதும் அவ்வாறே உள்ளது. மயூரநாதனுக்குத் தெரிந்திருக்கும்.--Kanags \உரையாடுக 07:40, 3 நவம்பர் 2013 (UTC)

இந்தத் தலைப்பு மாற்றமும், இந்தக் கட்டுரையை Jaffna lagoon இற்கு இணைப்புக் கொடுத்ததும் சரியா எனத் தெரியவில்லை. கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரு தடவை முழுமையாகப் பார்த்தால், அது யாழ் கடல்நீரேரியின் முழுப் பரிமாணத்தையும் தருவதாக இல்லை. விளக்கங்கள் அனைத்தும் கச்சாய் கடல்நீரேரியைக் குறிப்பதாகவே உள்ளது. அத்துடன் கட்டுரையின் உள்ளே, இக் கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது. இக் கடல் நீரேரி சேத்துக்கடல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கடல் நீரேரியில் இருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ் கடல் நீரேரிக்குச் செல்லலாம். என்றும் உள்ளது. அவ்வாறாயின் கச்சாய் கடல்நீரேரி வேறு, யாழ் கடல்நீரேரி வேறு என்பதாகத்தானே அர்த்தம்.

மேலும் உரையாடலில் ஒரு இடத்தில் கீழ் வருமாறு உள்ளது. அதேவேளை இக் கடல் நீரேரி பல ஊர்களுக்கு எல்லைகளாக இருந்தாலும், இக் கடல் நீரேரியின் துறைமுகம் கச்சாயில் உள்ளதனால், கச்சாய் கடல் நீரேரி என்று அழைக்கப்படுகிறது. அதேவேளை யாழ் கடல் நீரேரி என்பது வேறு. அதன் துறைமுகமாக, கொழும்புத்துறை துறைமுகம் உள்ளது.--Sivam29 (பேச்சு) 10:41, 5 செப்டெம்பர் 2012 (UTC)

எனக்கு இவைபற்றி முழுமையாகத் தெரியாது. ஆனாலும், இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. யாழ்ப்பாணக் கடல் நீரேரி என்ற தலைப்பே இருப்பதானால், அங்கேயுள்ள உள்ளடக்கத்தையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும்.--கலை (பேச்சு) 14:22, 3 நவம்பர் 2013 (UTC)

யாழ்ப்பாணக் கடல் நீரேரி என்பதற்கு புதுக் கட்டுரை உருவாக்க வேண்டும். இதனை Jaffna Lagoon என்ற ஆங்கிலக் கட்டுரையுடன் தொடர்புபடுத்த முடியாது. மேலும் இக்கட்டுரைக்கு சான்றுகள் எதுவும் இல்லை. தொண்டமானாறு கடல் நீரேரி பற்றியும் ஓர் பதிவு குறிப்பிடுகிறது. பார்க்க: http://www.kalaikesari.com/article.php?nid=52 --Anton·٠•●♥Talk♥●•٠· 14:53, 3 நவம்பர் 2013 (UTC)