தனங்கிளப்பு
தோற்றம்
தனங்கிளப்பு[1] யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கில் உள்ள உப்பாறு கடலேரியால் மூன்று பக்கங்களும் சூழ அமைந்துள்ள இவ்வூரின் வடக்கில் நுணாவில், கோயிற்குடியிருப்பு என்னும் ஊர்களும், மேற்கில் மறவன்புலவும், மற்றப்பக்கங்களில் கடலேரியும் உள்ளன.[2] இவ்வூர் தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்கியுள்ளது.
இவ்வூர் கடலேரியால் முப்புறம் சூழப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால், மீன்பிடித்தொழிலும் இவ்வூரில் ஒரு முக்கியமான தொழிலாக உள்ளது. 2013 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இவ்வூரில் 42 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Maddakka'lappu / Batticaloa". TamilNet. March 19, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=28599.
- ↑ Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.
- ↑ Statistical Information of the Northern Province-2014, பக். 82.
உசாத்துணைகள்
[தொகு]- Statistical Information of the Northern Province-2014, Northern Provincial Council, Sri Lanka.
- Statistical Information 2010, Northern Provincial Council, Sri Lanka.