ஓல்கா குரிலென்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓல்கா குரிலென்கோ
பிறப்புஓல்கா கான்ஸ்டான்டினோவ்னா குரிலென்கோ
14 நவம்பர் 1979 (1979-11-14) (அகவை 42)
பெர்டியன்ஸ்க், உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம் (இப்போது உக்ரைன்)
தொழில்நடிகை, வடிவழகி
வாழ்க்கை துணை
  • செட்ரிக் வான் மோல்
    (தி. 2000; ம.மு. 2004)
  • டாமியன் கேப்ரியல்
    (தி. 2006; ம.மு. 2007)

ஓல்கா கான்ஸ்டான்டினோவ்னா குரிலென்கோ (ஆங்கில மொழி: Olga Konstantinovna Kurylenko) (பிறப்பு: 14 நவம்பர் 1979) என்பவர் உக்ரேனிய - பிரான்சு நாட்டு நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.[1][2] இவர் தனது 13 வயதில் வடிவழகியாக அறிமுகமானார், அதை தொடர்ந்து தனது 16 வயதில் வடிவழகி தொழிலைத் தொடர பிரான்சு நாட்டிற்கு சென்றார்,[3] மற்றும் 2005 இல் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ஹிட்மேன் என்ற படத்தில் நிகா போரோனினாவாக நடித்ததற்காக அவர் ஒரு நடிகையாக வெற்றியைக் கண்டார். பின்னர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 2008 ஆம் ஆண்டு வெளியான குவாண்டம் ஆஃப் சோலஸ்[4] என்ற படத்திலும் டு தி ஒண்டெர் (2012), ஒபிலிவின் (2013), மொமெண்ட்டும் (2015), த ரூம் (2019) மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் விடோவ்[5][6] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்கா_குரிலென்கோ&oldid=3344317" இருந்து மீள்விக்கப்பட்டது