ஓசிமாண்டியாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓசிமாண்டியாசு அல்லது ஓஸிமாண்டியாஸ் (Ozymandias) பெர்சி பைஷ் ஷெல்லி எழுதிய ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை. 1818ல் எழுதப்பட்ட சோனட் வகைக் கவிதையான இது, ஷெல்லியின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வெளியாகி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், பல கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இக்கவிதையை ஷெல்லி தன் நண்பரும் சக கவிஞருமான ஹோரேஸ் ஸ்மித்துடன் நடந்த ஒரு போட்டியின் காரணமாக எழுதினார். பண்டைய எகிப்தின் பேரரசர்களுள் ஒருவரான இரண்டாம் ராமேசசின் பெரும் சிலை ஒன்றின் தாக்கத்தினால் இக்கவிதை எழுதப்பட்டது. இதன் தனித்துவமான சொல்நடையும், காட்சியமைப்பும், கருத்தாழமும் ஆங்கிலக் கவிதையுலகில் இதற்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

கவிதை[தொகு]

ஆங்கில மூலம்

I met a traveller from an antique land
Who said: Two vast and trunkless legs of stone
Stand in the desert. Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown
And wrinkled lip, and sneer of cold command
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them and the heart that fed.
And on the pedestal these words appear:
"My name is Ozymandias, king of kings:
Look on my works, ye Mighty, and despair!"
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck, boundless and bare
The lone and level sands stretch far away.[1]

தமிழாக்கம்

பழந்தேசத்து பயணி ஒருவரை சந்திக்க நேர்ந்தது
அவர் சொன்னார்:
பாலைவனத்தில் உடலற்ற இரு பெரும் கால்கள் நிற்கின்றன
அருகில் மணலில் சிதைந்த முகமொன்றைக் கண்டேன்
சுருங்கிய இதழ்களில் என்னவொரு அலட்சியமான கம்பீரம்
வடித்த சிற்பி திறமைசாலி தான்
உயிரற்ற கல்லில் உணர்ச்சிகளை உயிர்ப்பித்திருக்கிறான்.
கால்கள் நின்ற பீடத்திலே எழுதியிருந்தது:
”என் பெயர் ஓசிமாண்டியாஸ்,
அரசர்களுக்கெல்லாம் அரசன்
நான் படைத்தவற்றைப் பார், ஆற்றாமை கொள்!”
கால்களையும், உடைந்த முகத்தையும் தவிர
சுற்றி வேறொன்றும் இல்லை..
தொடுவானம் வரை அழிவும் மணலும் தான் தெரிந்தன.

பின்புலம்[தொகு]

பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள இரண்டாம் ராமேசசின் சிலை

ஓசிமாண்டியாஸ், பண்டைய எகிப்தின் பேரரசர்களுள் ஒருவரான இரண்டாம் ராமேசசைக் குறிக்கும்.[2] ராமசேசின் ஆட்சிப் பெயரான உசெர்-மாட்-ரே செடெப்-என்-ரே (User-maat-re Setep-en-re) என்பதின் கிரேக்க எழுத்துப்பெயர்ப்பே ”ஓசிமாண்டியாஸ்”. ராமசேஸ் தனது பதவி காலத்தில் எகிப்தில் பல உன்னதமான கட்டிடங்களை எழுப்பினார். அவருடைய காலத்தில் அவருக்கு நிறுவப்பட்ட பெரும் சிலையொன்றின் பீடத்தில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்ததாக கிரேக்க வரலாற்றாளர் டியோடரஸ் சிகோலஸ் தனது பிபிளோதிகா ஹிஸ்டோரிக்கா நூலில் குறிப்பிட்டுள்ளார்:

நான் ஓசிமாண்டியாஸ், அரசர்களுக்கெல்லாம் அரசன். என் பெருமைகளை உணர வேண்டுமெனில் நான் படைத்தவற்றுள் ஏதேனும் ஒன்றை மிஞ்சப் பார். (King of Kings am I, Osymandias. If anyone would know how great I am and where I lie, let him surpass one of my works.)

[3]

இவ்வரிகளே, ஷெல்லியின் கவிதையில் சற்றே மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஷெல்லி வாழ்ந்த காலத்தில் ராமேசசின் மாபெரும் சிலையொன்று பிரித்தானிய அருங்காட்சியகத்துக்காக இத்தாலிய நாடுகாண் பயணி ஜியோவானி பெல்சோனி என்பவரால் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது.[4] முன்னர் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் இச்சிலையை ஐரோப்பாவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றிருந்தார். இதனால் இச்சிலை ஐரோப்பிய மக்களிடையே நன்கு அறியப்பட்டிருந்தது.[5] இது லண்டனுக்கு கொண்டுவரப்படும் செய்தியைக் கேள்விப்பட்ட ஷெல்லியும் அவரது நண்பர் ஹோரேஸ் ஸ்மித்தும் அதனைப் பற்றிய சோனட் ஒன்றை எழுதும் போட்டியில் இறங்கினர்.

இச்சிலை கவிதையில் வர்ணிக்கப்பட்டிருக்கும் சிலை போன்று கால்கள் மட்டும் கொண்டதல்ல. மாறாக ராமேசசின் மார்பளவு உருவம் இதில் வடிக்கப்பட்டுள்ளது. ஷெல்லியின் கவிதை இச்சிலையைப் பற்றியானதல்ல, லக்சோர் நகரில் காணப்படும் ராமசேசின் மற்றொரு இடிந்த சிலையே இக்கவிதையின் காரணியென்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த இரண்டாவது சிலைக்கும் கவிதையில் வருணிக்கப்படிருக்கப்பட்டது போல தோற்றம் கிடையாது.[6] ஜனவரி 11, 1818ல் தி எக்சாமினர் என்ற இதழில் ஷெல்லியின் கவிதை வெளியானது. அதே இதழில் சில வாரங்கள் கழித்து பெப்ரவரி 1ம் தேதி ஸ்மித்தின் கவிதையும் வெளியானது.[7] ஸ்மித்தின் கவிதை பின்வருமாறு:

In Egypt's sandy silence, all alone,

Stands a gigantic Leg, which far off throws
The only shadow that the Desert knows:
"I am great OZYMANDIAS," saith the stone,
"The King of Kings; this mighty City shows
"The wonders of my hand." The City's gone,
Nought but the Leg remaining to disclose
The site of this forgotten Babylon.
We wonder, and some Hunter may express
Wonder like ours, when thro' the wilderness
Where London stood, holding the Wolf in chace,
He meets some fragments huge, and stops to guess
What powerful but unrecorded race
Once dwelt in that annihilated place.[8]

இரண்டும் ஒரே தலைப்பையும் கருப்பொருளையும் கொண்டிருந்தன; ஒரே நீதியைச் சொல்கின்றன. ஆனால் ஷெல்லியின் கவிதை மட்டும் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸ்மித்தின் கவிதை பொது நினைவிலிருந்து மெல்ல மறைந்து போனது. ஸ்மித், தனது பிற்காலக் கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதையின் தலைப்பை “ஓசிமாண்டியாஸ்” என்பதிலிருந்து On A Stupendous Leg of Granite, Discovered Standing by Itself in the Deserts of Egypt, with the Inscription Inserted Below என்று மாற்றிவிட்டார்.[9]

தாக்கம்[தொகு]

ஷெல்லி

ஓசிமாண்டியாஸ் சொல்லும் நீதி - எவ்வளவு பெரிய பேரரசாயினும் ஒரு நாள் அழிந்து போகும்; பலம் வாய்ந்த சர்வாதிகாரிகள் ஒரு நாள் உலக நினைவிலிருந்து மறைந்து போவர் என்பதே. இக்கருத்தினை ஷெல்லி அற்புதமான காட்சியமைப்பின் மூலமும் உரத்துப் படிக்க ஏற்ற மொழிநடையில் வெளிக் கொணர்ந்துள்ளார். இக்கவிதையின் வரிகள் பல புத்தகங்கள், புனைகதைகள், நிகழ்பட ஆட்டங்கள், செய்தித்தாள் பத்திகள் போன்ற வெகுஜன இலக்கியப் படைப்புகளில் பயனபடுத்தப்பட்டுள்ளன.[10] ஓசிமாண்டியாஸ் என்னும் பெயர் பல புனைவுப் படைப்புகளில், ஆணவம் அல்லது இறுமாப்பினால் அழிந்து போகும் பாத்திரங்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. வெளியாகி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், பல கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. ஷெல்லியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக இக்கவிதை கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Text of the poem from Shelley, Percy Bysshe (1819). Rosalind and Helen, a modern eclogue, with other poems.. London: C. and J. Ollier. இணையக் கணினி நூலக மையம்:1940490. http://books.google.com/?id=Zy0PYRAv4lsC.  and Shelley, Percy Bysshe (1826). Miscellaneous and posthumous poems of Percy Bysshe Shelley. London: W. Benbow. இணையக் கணினி நூலக மையம்:13349932. http://books.google.com/?id=MZY9AAAAYAAJ. . The two texts are identical except that in the earlier "desert" is spelled "desart".
  2. Luxor Temple: Head of Ramses the Great
  3. RPO Editors. "Percy Bysshe Shelley : Ozymandias". University of Toronto Department of English. University of Toronto Libraries, University of Toronto Press. Archived from the original on 2006-10-10. பார்க்கப்பட்ட நாள் 2006-09-18. {{cite web}}: |author= has generic name (help)
  4. "Colossal bust of Ramesses II, the 'Younger Memnon' பரணிடப்பட்டது 2011-05-22 at the வந்தவழி இயந்திரம், British Museum. Accessed 10-01-2008
  5. "Travelers from an antique land". பார்க்கப்பட்ட நாள் 18/07/07. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Edward Chaney, 'Egypt in England and America: The Cultural Memorials of Religion, Royalty and Revolution', in: Sites of Exchange: European Crossroads and Faultlines, eds. M. Ascari and A. Corrado (Rodopi, Amsterdam and New York,2006), 39-74.
  6. Lonely Planet 2008 guide to Egypt, 271
  7. The Examiner. Shelley's poem appeared on January 11 and Smith's on February 1.Treasury of English Sonnets. Ed. from the Original Sources with Notes and Illustrations, David M. Main
  8. Ozymandias – Smith
  9. Habing, B. "Ozymandias – Smith". PotW.org. பார்க்கப்பட்ட நாள் 2006-09-23. The iambic pentameter contains five 'feet' in a line. This gives the poem rhythm and pulse, and sometimes is the cause of rhyme.
  10. Reiman, Donald H; Powers, Sharon.B (1977). Shelley's Poetry and Prose. Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 0-393-09164-3. https://archive.org/details/shelleyspoetrypr00shel. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசிமாண்டியாசு&oldid=3594094" இலிருந்து மீள்விக்கப்பட்டது