ஒற்றைக்கோணம்
ஒற்றைக்கோணம் | |
---|---|
![]() வட்டம் ஒன்றில், ஒற்றைக்கோணம் என்பது ஒற்றை உச்சியுடனும், ஒரு 360-பாகை வில் விளிம்புடனும் கூடிய ஒரு பின்னல் அடுக்கு ஆகும். | |
வகை | ஒழுங்கு பல்கோணி |
விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 1 |
சிலாஃப்லி குறியீடு | {1} அல்லது h{2} |
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | ![]() ![]() ![]() ![]() |
சமச்சீர் குலம் | [ ], Cs |
இருமப் பல்கோணம் | Self-dual |
வடிவவியலில் ஒற்றைக்கோணம் (Monogon) என்பது ஒரு விளிம்புடனும், ஒரு உச்சியுடனும் கூடிய பல்கோணமாகும். இது சிலாப்லி குறியீடு {1}-ஐக் கொண்டுள்ளது.[1]
யூக்ளிடியன் வடிவவியலில்
[தொகு]யூக்ளிடியன் வடிவவியலில் ஒற்றைக்கோணம் என்பது ஒரு சிதைவு பல்கோணமாகும், ஏனெனில் அதன் இறுதிப்புள்ளிகள் எந்த யூக்ளிடியக் கோட்டுத் துண்டுகளையும் போலல்லாமல் ஒன்றி இணைந்திருக்க வேண்டும். யூக்ளிடிய வடிவவியலில் பல்கோணத்தின் பெரும்பாலான வரையறைகள் ஒற்றைக்கோணம் என்பதை ஏற்கவில்லை.
கோள வடிவியலில்
[தொகு]கோள வடிவியலில், ஒரு பெரு வட்டத்தில் (நிலநடுக் கோடு) உச்சியாக ஒரு ஒற்றைக்கோணத்தை உருவாக்க முடியும். இது ஒரு 360° விளிம்பையும் ஒரு உச்சியையும் பகிர்ந்து கொள்ளும் இரண்டு அரைக்கோள ஒற்றைக்கோண முகங்களுடன் {1,2} என்ற இருதளவுருவை உருவாக்குகிறது. அதன் இருமமான, ஒரு {2,1} என்ற ஓசோகெட்ரான் (hosohedron ), துருவங்களில் ஒரு 360° பிறை முகத்தையும், இரண்டு உச்சிகளுக்கிடையே ஒரு விளிம்பையும் கொண்ட இரண்டு காலெதிர்ப் புள்ளிகளைக் கொண்டுள்ளது.[1]
![]() ஒற்றைக்கோண இருதளவுரு, {1,2} |
![]() ஒற்றைக்கோண ஓசோகெட்ரான், {2,1} |
மேற்கோள்கள்
[தொகு]- Herbert Busemann, The geometry of geodesics. New York, Academic Press, 1955
- Coxeter, H.S.M; Regular Polytopes (third edition). Dover Publications Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-61480-8