ஒமுவாமுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒமுவாமுவா
ʻOumuamua
விண்மீனிடைப் பொருள் ஒமுவாமுவா சூரியக் குடும்பத்தில் இருந்து விலகிச் செல்லும் காட்சி (ஓவியரின் கைவண்ணத்தில்) (animation)
கண்டுபிடிப்பு [1][2] and designation
கண்டுபிடித்தவர்(கள்) இராபர்ட் வெரிக்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் அலேக்கலா வான்காணகம், அவாய்
கண்டுபிடிப்பு நாள் 19 அக்டோபர் 2017
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் அவாய் மொழியில் சாரணம்[3]
வேறு பெயர்கள்[7]
 • 1I
 • 1I/ʻOumuamua
 • 1I/2017 U1 (ʻOumuamua)
 • A/2017 U1[4]
 • C/2017 U1[2]
 • P10Ee5V[5]
சிறு கோள்
பகுப்பு
விண்மீனிடைப் பொருள்[3]
மீவளைய சிறுகோள்[6]
காலகட்டம்2 நவம்பர் 2017 (JD 2458059.5)
சூரிய அண்மை நிலை 0.25534±0.00007 AU
அரைப்பேரச்சு −1.2798±0.0008 AU[Note 1]
மையத்தொலைத்தகவு 1.19951±0.00018
சராசரி சுற்றுப்பாதை வேகம் 26.33±0.01 கிமீ/செ (விண்மீனிடை)[8]
சராசரி பிறழ்வு 36.425°
சாய்வு 122.69°
Longitude of ascending node 24.599°
Argument of perihelion 241.70°
பரிமாணங்கள் 100–1,000 m
330–3,280 அடி long[9][10][11]
230 m × 35 m × 35 m
755 அடி × 115 அடி × 115 அடி[12][13]
(est. at albedo 0.10)[12][13]
சுழற்சிக் காலம் Tumbling (non-principal axis rotation)[14]
Reported values include: 8.10±0.02 h[15]
8.10±0.42 h[16]
6.96+1.45
−0.39
h[17]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.1 (spectral est.)[12]
0.06–0.08 (spectral est.)[16]
Spectral typeD?[12]
B–V = 0.7±0.06[12]
V-R = 0.45±0.05[12]
g-r = 0.47±0.04[16]
r-i = 0.36±0.16[16]
r-J = 1.20±0.11[16]
தோற்ற ஒளிர்மை 19.7 to >27.5[8][Note 2][18]
விண்மீன் ஒளிர்மை 22.08±0.445[6]

ஒமுவாமுவா (ʻOumuamua, /ˌməˈmə/ (கேட்க)) என்பது சூரியக் குடும்பத்தின் வழியாகச் சென்ற ஒரு விண்மீனிடைப் பொருளைக் குறிக்கும். இதனை 2017 அக்டோபர் 19-இல் இது சூரியனுக்குக் கிட்டவாகச் சென்ற 40-வது நாளில் கனடிய இயற்பியலாளர் இராபர்ட் வெரிக் என்பவர் அவாய், அலேக்காலா வான்காணகத்தில் கண்டுபிடித்தார். இதனை இவர் கண்டபோது, அது புவியில் இருந்து ஏறத்தாழ 33,000,000 கிமீ (21,000,000 மைல்; 0.22 வாஅ) தூரத்தில், சூரியனை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது.

கருஞ் சிவப்பு நிறம் கொண்ட இந்த விண்மீனிடைப் பொருளின் அளவு: 100 மீ–1,000 மீ × 35 மீ–167 மீ × 35 மீ–167 மீ ஆகும்.[9] எரி விண்மீனைப் போன்று வால் எதுவும் ஒமுவாமுவாவுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. (அப்படி இருந்திருந்தால் சூரியனுக்கு அருகில் போகும்போது அது தெரிந்திருக்கும்.)[19][20][21] இதில் மாழைப் பொருட்கள் மிகுதியான அளவில் இருக்குமெனத் தெரிகின்றது. இதன் இயக்கம் சீரான சுழற்சியாக இல்லாமல், புரளுகின்ற ஒரு பொருள்போல இயங்கியதாலும், மிக வேகமாக சூரியனைக் கடந்து சென்றதாலும், இது சூரிய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பொருள் போலத் தெரியவில்லை. எனவே, இது சூரியனைச் சுற்றி இயங்கும் ஒரு பொருளாக இருக்க வாய்ப்பில்லை. இது இறுதியாக சூரிய மண்டலத்தை விட்டு வெளியே சென்று, விண்மீனிடை வெளியில் உலாவும் என்று கருதலாம். மேலும், ஒமுவாமுவா எங்கு தோன்றியது, அங்கிருந்து சூரிய மண்டலத்திற்கு வர எத்தனை ஆண்டுகள் ஆயின என்பன ஒன்றும் தெரியவில்லை.

பெயரிடுமுறை[தொகு]

நாம் அறிந்த வரையில், ஒமுவாமுவா ஒன்றுதான் சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருந்த வந்த ஒரு பொருள். இது ஒரு எரி விண்மீன் என்று கருதி C/2017 U1 என்ற பெயர் சூட்டப் பட்டது. பின் அது ஒரு நுண்கோள் (asteroid) என்று அறிந்த பிறகு, A/2017 U1 என்று பெயர் சூட்டப் பட்டது. அவாயி மொழியில் ஒமுவாமுவா (ʻoumuamua) என்றால் "தொலைவில் இருந்து வந்த முதல் தூதுவர்" என்று பொருள்படும்.[3][22] இந்த நுண்கோளுக்கு ராமா என்று வைக்கலாமா என்றும் கருதப்பட்டு, பின் கைவிடப்பட்டது.[23]

ஒமுவாமுவாவின் பாதை[தொகு]

ஒமுவாமுவாவைப் பற்றிய செய்திகள், விளக்கங்கள், தரவுகள் ஆகியன Pan-STARRS1, Canada-France-Hawaii, Gemini South (சிலி என்ற நாட்டில் உள்ளது) ஆகிய தொலைநோக்கிகள் வழியாகக் கிடைத்தன [24] இந்த நுண்கோள் வேகா (Vega) என்ற விண்மீன் உள்ள திசையில் இருந்து வந்ததுபோல் தெரிகின்றது.[25]

இதன் பாதை மிகைவளையப் (hyperbolic ) பாதையாக இருக்கலாம். இதன் விரைவு 26.33 km/s என்று கணக்கிடப்பட்டுள்ளது. சூரியனின் புவிஈர்ப்பு விசையினால் இந்தக் கல்லின் விரைவு 87.71 km/s (315,800 km/h) வரை அதிகமாயிற்று [Note 3].

ஒமுவாமுவாவின் பிறப்பிடம்[தொகு]

ஒமுவாமுவா சூரியமண்டலத்தின் வழியாகச் செல்லும் அசைவுப் படம்

இது வேகா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்து இருக்குமேயானால், நம் சூரிய மண்டலம் வந்து சேர்ந்து அடைய இதற்கு 600,000 ஆண்டுகள் ஆகி இருக்கும். இதன் வேகத்தைப் பார்த்தால், நம் பால் வெளியில் பல இடங்களில் சுற்றி விட்டு, பின் நம் சூரிய மண்டலத்திற்குள் நுழைந்தது போல் தெரிகின்றது. பால் வெளியில் கோள் ஏதேனும் சிதைந்து அதிலிருந்து ஒமுவாமுவா வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.[26]

குறிப்புகள்[தொகு]

 1. Objects on hyperbolic trajectories have negative semimajor axis, giving them a positive orbital energy.
 2. Range at which the object is expected to be observable. Brightness peaked at 19.7 mag on 18 October 2017, and fades below 27.5 mag (the limit of ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி for fast-moving objects) around 1 January 2018. By late 2019, it should dim to 34 mag.
 3. The solar escape velocity from Earth's orbit (1 AU from the Sun) is 42.1 km/s. For comparison, even 1P/Halley moves at 41.5 km/s when 1 AU from the Sun, according to the formula v = 42.1219 1/r − 0.5/a, where r is the distance from the Sun, and a is the major semi-axis. Near-Earth asteroid 2062 Aten only moves at 29 km/s when 1 AU from the Sun because of the much smaller major semi-axis.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Small Asteroid or Comet 'Visits' from Beyond the Solar System". நாசா. 26 October 2017. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
 2. 2.0 2.1 "MPEC 2017-U181: COMET C/2017 U1 (PANSTARRS)". Minor Planet Center. உலகளாவிய வானியல் ஒன்றியம். 25 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017. (CK17U010)
 3. 3.0 3.1 3.2 "MPEC 2017-V17 : New Designation Scheme for Interstellar Objects". Minor Planet Center. International Astronomical Union. 6 November 2017. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
 4. "MPEC 2017-U183: A/2017 U1". Minor Planet Center. International Astronomical Union. 25 October 2017. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017. (AK17U010)
 5. Antier, K. "A/2017 U1, first interstellar asteroid ever detected!". International Meteor Organization. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
 6. 6.0 6.1 6.2 "JPL Small-Body Database Browser: ʻOumuamua (A/2017 U1)". JPL Small-Body Database. Jet Propulsion Laboratory. Archived from the original on 22 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2017.
  JPL 1 (Solution date: 2017-Oct-24)
  JPL 10 (Solution date: 2017-Nov-03)
  JPL 14 (Solution date: 2017-Nov-21)
 7. [1]
 8. 8.0 8.1 "Pseudo-MPEC for A/2017 U1 (FAQ File)". Bill Gray of Project Pluto. 26 October 2017. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017. (Orbital elements)
 9. 9.0 9.1 Cofield, Calia (14 November 2018). "NASA Learns More About Interstellar Visitor 'Oumuamua". நாசா. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
 10. Watzke, Megan (20 October 2018). "Spitzer Observations of Interstellar Object ʻOumuamua". SciTechDaily.com. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
 11. Harvard-Smithsonian Center for Astrophysics (22 October 2018). "ʻOumuamua one year later". Phys.org. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
 12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 Jewitt, D.; Luu, J.; Rajagopal, J.; Kotulla, R.; Ridgway, S.; Liu, W.; Augusteijn, T. (30 November 2017). "Interstellar Interloper 1I/2017 U1: Observations from the NOT and WIYN Telescopes". The Astrophysical Journal Letters 850 (2): L36. doi:10.3847/2041-8213/aa9b2f. Bibcode: 2017ApJ...850L..36J. 
 13. 13.0 13.1 National Optical Astronomy Observatory(15 November 2017). "A Familiar-Looking Messenger from Another Solar System". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-16. பார்க்கப்பட்ட நாள் 2018-11-17.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 14. Fraser, W.C.; Pravec, P.; Fitzsimmons, A.; Lacerda, P.; Bannister, M.T.; Snodgrass, C.; Smolić, I. (9 February 2018). "The tumbling rotational state of 1I/‘Oumuamua". Nature Astronomy 2 (5): 383–386. doi:10.1038/s41550-018-0398-z. Bibcode: 2018NatAs...2..383F. https://pure.qub.ac.uk/portal/en/publications/the-tumbling-rotational-state-of-1ioumuamua(cbcc0793-72c1-4f42-b78a-5bcdeff6274c).html. 
 15. Bolin, B.T. et al. (2017). "APO Time Resolved Color Photometry of Highly-Elongated Interstellar Object 1I/ʻOumuamua". The Astrophysical Journal 852 (1): L2. doi:10.3847/2041-8213/aaa0c9. Bibcode: 2018ApJ...852L...2B. 
 16. 16.0 16.1 16.2 16.3 16.4 Bannister, M.T.; Schwamb, M.E. (2017). "Col-OSSOS: Colors of the Interstellar Planetesimal 1I/2017 U1 in Context with the Solar System". The Astrophysical Journal 851 (2): L38. doi:10.3847/2041-8213/aaa07c. Bibcode: 2017ApJ...851L..38B. "As its albedo is unknown, we do not describe 1I/‘Oumuamua as consistent with Tholen (1984) P type.". 
 17. Feng, F.; Jones, H.R.A. (23 November 2017). "ʻOumuamua as a messenger from the Local Association". The Astrophysical Journal 852 (2): L27. doi:10.3847/2041-8213/aaa404. Bibcode: 2018ApJ...852L..27F. 
 18. Meech, Karen; et al. (8 November 2017). "Proposal 15405 – Which way home? Finding the origin of our Solar System's first interstellar visitor" (PDF). STScI – Space Telescope Science Institute. பார்க்கப்பட்ட நாள் 15 November 2017.
 19. Williams, Matt (31 October 2018). "Could Oumuamua Be an Extra-Terrestrial Solar Sail?". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 2 November 2018.
 20. Baily, Shmuel; Loeb, Abraham (1 November 2018). "Could Solar Radiation Explain ʻOumuamua's Peculiar Acceleration?". arXiv:1810.11490v2 [astro-ph.EP]. 
 21. Loeb, Abraham (26 September 2018). "How to Search for Dead Cosmic Civilizations - If they're short-lived, we might be able to detect the relics and artifacts they left behind". சயன்டிஃபிக் அமெரிக்கன். பார்க்கப்பட்ட நாள் 2 November 2018.
 22. Kesh, Johnathan (8 November 2017). "Our Solar System's First Interstellar Asteroid is Named ʻOumuamua'". Outer Places. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 23. "The first visitor from another solar system has just been spotted: Rendezvous with Rama?". The Economist. 2 November 2017.
 24. David Morrison (astrophysicist) (March–April 2018). "Interstellar Visitor: The Strange Asteroid from a Faraway System". Skeptical Inquirer 42 (2): 5–6. 
 25. Wenz, John (22 November 2017). "The first discovered interstellar asteroid is a quarter-mile long red beast". Astronomy.
 26. Ćuk, Matija (19 December 2017). "1I/ʻOumuamua as a Tidal Disruption Fragment From a Binary Star System". The Astrophysical Journal 852 (1): L15. doi:10.3847/2041-8213/aaa3db. Bibcode: 2018ApJ...852L..15C. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
commons:Category:1I/ʻOumuamua
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒமுவாமுவா&oldid=3731130" இலிருந்து மீள்விக்கப்பட்டது