ஒத்தின்னியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒத்தின்னியம் (சிம்ஃபனி, symphony) ஒரு இசைத் தொகுப்பு (musical composition) வகை. பொதுவாக இது சேர்ந்திசை (orchestra) நிகழ்ச்சிகளுக்கான ஒரு ஆக்கமாக அமைக்கப்படும். வழக்கமாக இது 3 அல்லது 4 பகுதிகளைக் கொண்ட நீளமான ஆக்கமாக இருக்கும். முதல் பகுதி வேகமான நடையில் அமைந்திருக்கும். இரண்டாம் பகுதி மெதுவான நடையில் அமைந்திருக்கலாம். இவ்வாறே மூன்றாம், நான்காம் பகுதிகளும் அவற்றுக்குரிய தனித்துவமான முறையில் ஆக்கப்படுகின்றன. ஒத்தின்னியம் எழுதுவதற்குப் பல முறைகள் இருந்தாலும், ஒத்தின்னியத்தின் தந்தை எனக் கருதப்படும் ஜோசப் ஹேடன் என்பவர் முன் குறிப்பிட்ட வடிவில் ஒத்தின்னிய ஆக்கங்களை எழுதியதால் பின்வந்த இசையமைப்பாளர் பலரும் அவரைப் பின்பற்றியே எழுதி வருகின்றனர்.

ஜோசப் ஹேடன், வூல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், ஃபீலிக்ஸ் மெண்டல்சன், ராபர்ட் சூமான், ஆன்டன் புரூக்னர், ஜொகான்னெஸ் பிராம்ஸ், பியோட்டர் சைகோவ்ஸ்கி, குஸ்தாவ் மாலர், ஜான் சிபெலியஸ் போன்றோர் மிகவும் பெயர் பெற்ற இசையமைப்பாளர்கள் ஆவர்.

ஒலிப்பதிவு எடுத்துக்காட்டு[தொகு]

கீழே பீத்தோவனின் ஒத்தின்னியம் எண்-5 (Symphony 5) என்னும் புகழ்பெற்ற இசையின் நான்கு பகுதி இசைவிரிவுகளையும்(மூவ்மெண்ட்) கேட்கலாம்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்தின்னியம்&oldid=2229427" இருந்து மீள்விக்கப்பட்டது