உள்ளடக்கத்துக்குச் செல்

குஸ்தாவ் மாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஸ்தாவ் மாலர்
பிறப்பு7 சூலை 1860
Kaliště, Kaliště
இறப்பு18 மே 1911 (அகவை 50)
வியன்னா
பணிஇசை நடத்துநர், இசையமைப்பாளர்
சிறப்புப் பணிகள்See list of compositions by Gustav Mahler
பாணிமேல்நாட்டுச் செந்நெறி இசை, chamber music
வாழ்க்கைத்
துணை/கள்
Alma Mahler
இணையம்http://www.gustav-mahler.org
கையெழுத்து
குஸ்தாவ் மாலர், 1892

குஸ்தாவ் மாலர் (Gustav Mahler – 7 ஜூலை 1860 – 18 மே 1911), பொஹீமியாவில் பிறந்த ஆஸ்திரிய இசையமைப்பாளரும், இசை நடத்துனரும் ஆவார். இவர் தனது வாழ்நாளிலேயே ஒரு முன்னணிக் குழு இசை நடத்துனராகப் புகழ் பெற்றிருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் இவரது இசையை வியன்னாவில் இருந்த இசை நிறுவனம் முற்றாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இவர் பிந்திய புனைவிய இசையமைப்பாளர்களுள் முக்கியமானவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் பெரும்பாலும் சிம்பொனிகளையும், பாடல்களையுமே ஆக்கினார். எனினும் இவரது ஆக்கங்கள் பல்வேறு இசைவகைகளின் எல்லைகளில் அமைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

இளமைக்காலம்[தொகு]

குஸ்தாவ் மாலர், ஒரு ஜேர்மன் மொழி பேசும் அஸ்கெனாசிய யூதக் குடும்பம் ஒன்றில், கலிஸ்ட்டே (Kaliště) என்னும் இடத்தில் பிறந்தார். இது, அக்காலத்தில் ஆஸ்திரியப் பேரரசைச் சேர்ந்த பொஹீமியாவில் அடங்கியிருந்ததும், இன்று செக் குடியரசு நாட்டினுள் உள்ளதுமான ஒரு இடம் ஆகும். இவர் தனது தாய் தந்தையருக்குப் பிறந்த 14 பிள்ளைகளுள் இரண்டாமவர். எனினும், இவரது உடன் பிறந்தவர்களுள் அறுவர் மட்டுமே குழந்தைப் பருவத்தைத் தாண்டி உயிருடன் வாழ்ந்தனர். இவரது பெற்றோர் ஜிலாவா என்னும் இடத்துக்குக் குடி பெயர்ந்ததனால், குஸ்தாவ் தனது சிறு பராயத்தை ஜிலாவாவிலேயே கழித்தார். இசையில் இவருக்கிருந்த நாட்டத்தையும், திறமையையும் கவனித்த இவரது பெற்றோர் இவர் ஆறு வயதாக இருக்கும் போதே பியானோ கற்க ஒழுங்கு செய்தனர்.

1875ல், மாலருக்கு 15 வயதானபோது வியன்னா கான்சர்வேட்டரி எனப்பட்ட இசைக் கல்லூரியில் சேர்ந்து, ஜூலியஸ் எப்ஸ்டீன் என்பவரிடம் பியானோவும், ஒத்திசையை (harmony) ராபர்ட் ஃபூக்ஸ் என்பவரிடமும், இசையமைப்பை பிராண்ஸ் கிரண் என்பவரிடமும் கற்றார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் மாலர், வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே ஆன்டன் புரூக்னர் விரிவுரையாளராக இருந்தார். அங்கே மாலர், இசையுடன், வரலாறு, மெய்யியல் போன்றவற்றையும் கற்றார். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தபோதே இவர் இசை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவர் தனது முதல் இசையமைப்பு முயற்சியை ஆரம்பித்தார். இவரது ஆக்கம் புகழ் பெற்ற ஜொகான்னெஸ் பிராம்ஸ் என்பவரை நடுவராகக் கொண்ட போட்டியொன்றுக்கு அனுப்பப்பட்டதாயினும் பரிசு கிடைக்கவில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஸ்தாவ்_மாலர்&oldid=2733765" இலிருந்து மீள்விக்கப்பட்டது