ஒக்கியம் மடுவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒக்கியம் மடுவு (ஆங்கில மொழி: Okkiyam Maduvu) என்பது 2.8 கி. மீ நீளம் கொண்டு சென்னையின் தென்புறநகர்ப் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கால்வாயாகும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலிருந்து கிடைக்கும் நீரை பக்கிங்காம் கால்வாயில் சேர்ப்பதே இந்த கால்வாயின் அமைப்பாகும்.

கால்வாயின் அமைப்பு[தொகு]

பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலிருந்து சிறு கால்வாயாக துவங்கும் இந்த கால்வாய் காரப்பாக்கத்தில் ராஜீவ் காந்தி சாலையை கடந்து ஈஞ்சம்பாக்கத்துக்கு அருகில் பக்கிங்காம் கால்வாயில் சேர்கிறது. சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பொழுது ஒக்கியம் மடுவுவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனினும் பக்கிங்காம் கால்வாய் ஏற்கனவே அடையார் நதியின் வெள்ளத்தால் முழுவதும் நிரம்பி ஓடியதால் ஒக்கியம் மடுவுவின் வெள்ளநீர் பக்கிங்காம் கால்வாயில் வடியமுடியாமல் சுற்றுப்புறப்பகுதிகளில் புகுந்து சேதப்படுத்தியது.

ஒக்கியம் மடுவு கடலுடன் இணைக்கும் கால்வாய் திட்டம்[தொகு]

வேளச்சேரி பகுதியும் பள்ளிக்கரணைப் பகுதியும் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் எல்லா காலங்களிலும் மழை பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளாகும். ஏற்கனவே இருக்கும் அமைப்பின்படி வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணைப் பகுதிகளில் இருக்கும் நீர் ஒக்கியம் மடுவு வழியாக வடிந்து பக்கிங்காம் கால்வாயில் மேலும் 16 கி. மீ பயணித்து முட்டுக்காட்டில் கடலில் கலக்கிறது. இதற்கு மாற்றாக ஒக்கியம் மடுவு கால்வாயை வெள்ளகாலங்களில் கடலில் நேரடியாக கலப்பதுபோல் ஒரு கால்வாய்த் திட்டம் 100 கோடி செலவில் தீட்டப்பட்டு பின் நிதிநிலை காரணங்களால் கைவிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்கியம்_மடுவு&oldid=2386347" இருந்து மீள்விக்கப்பட்டது