ஐலவ்யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐலவ்யூ
பொதுப் பெயர்இலவு இலெற்றர்
வகைகணினிப் புழு
பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள்மைக்குரோசாபிட்டு விண்டோசு
எழுதப்பட்ட மொழிவி. பி. கிறிட்டு

ஐலவ்யூ (ILOVEYOU) அல்லது இலவு இலெற்றர் (Love Letter) என்பது கிறீன்விச்சு இடைநிலை நேரப்படி, 2000ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் அன்றும் அதன் பின்னரும் மில்லியன் கணக்கிலான விண்டோசுக் கணினிகளைத் தாக்கிய கணினிப் புழு ஆகும்.[1] இது "ILOVEYOU" என்ற தலைப்புடன் "LOVE-LETTER-FOR-YOU.txt.vbs" என்ற இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலால் பரவியது.[2] இவ்விணைப்பைத் திறக்கும்போது ஒரு விசுவல் பேசிக்கு நிரல் செயற்படத் தொடங்கும்.[3] இந்நிரல் கணினியில் படிமக் கோப்புகளை மேலெழுதி விடுவதுடன், விண்டோசு முகவரிப் புத்தகத்திலுள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் தனது படியை அனுப்பி விடும்.[2] மேலும், இது கடவுச்சொற்களைத் திருடும் மென்பொருளையும் தரவிறக்கம் செய்கின்றது.[1] இப்புழுவின் 82 வகைகளைக் கண்டறிந்துள்ளதாகச் சிமாண்டெக்கு கூறுகின்றது.[1]

தாக்கம்[தொகு]

இப்புழுவால் உலக அளவில் 5.5-8.7 பில்லியன் அமெரிக்கத் டெலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டது.[4] இதனை நீக்குவதற்கு 15 பில்லியன் அமெரிக்கத் தொலர் செலவாகியிருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது.[5] அத்துடன், இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினிகளின் பத்து விழுக்காட்டு அளவிலான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Eric Chien (12 மார்ச் 2002). "VBS.LoveLetter.Var". Symantec. http://www.symantec.com/security_response/writeup.jsp%3Fdocid%3D2000-121815-2258-99. பார்த்த நாள்: 16 ஆகத்து 2015. 
  2. 2.0 2.1 "VBS/Loveletter@MM". McAfee. http://www.mcafee.com/threat-intelligence/malware/default.aspx?id=98617. பார்த்த நாள்: 15 செப்டம்பர் 2015. 
  3. Deborah Galea (11 மே 2015). "The ILoveYou legacy--how malware has changed in the past 15 years". BetaNews. http://betanews.com/2015/05/11/the-iloveyou-legacy-how-malware-has-changed-in-the-past-15-years/. பார்த்த நாள்: 15 செப்டம்பர் 2015. 
  4. George Garza. "Top 10 worst computer viruses". Catalogs. http://www.catalogs.com/info/travel-vacations/top-10-worst-computer-viruses.html. பார்த்த நாள்: 16 ஆகத்து 2015. 
  5. Jason Buckland. "The 'love' bug". MSN Tech & Gadgets இம் மூலத்தில் இருந்து 2011-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111027131918/http://tech.ca.msn.com/photogallery.aspx?cp-documentid=27611570&page=1. பார்த்த நாள்: 5 ஏப்பிரல் 2014. 
  6. "Język angielski i niemiecki". Gazeta Edukacja: pp. 1. 2008 ஏப்பிரல் 19-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலவ்யூ&oldid=3576800" இருந்து மீள்விக்கப்பட்டது