உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னஞ்சல் இணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிமெயிலில் மின்னஞ்சல் இணைப்பை இணைத்தல்

மின்னஞ்சல் இணைப்பு (Email Attachment) என்பது மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் கோப்பு ஆகும்.[1] எந்தவொரு மின்னஞ்சலுடனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை இணைப்பாக இணைத்து அனுப்பி வைக்க முடியும். கோப்புகளையும் படிமங்களையும் பகிர்வதற்குப் பொதுவாக இம்முறையே கையாளப்பட்டு வருகின்றது.

தற்காலப் பயன்பாடு[தொகு]

அளவு வரையறைகள்[தொகு]

சில மின்னஞ்சல் தரங்கள் அளவு வரையறைகளைக் குறிப்பிடுவதில்லை.[2] ஆனாலும் மின்னஞ்சல் பயனர்கள் தாங்கள் மிகப்பெரிய கோப்புகளை அனுப்ப முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இணையத்தினூடாக மின்னஞ்சலொன்றை அனுப்பும்போது அது பல்வேறு செய்திப் பரிமாற்று முகவர்களினூடாகவே பெறுநரை அடையும். மின்னஞ்சலைப் பெறுநருக்கு அனுப்பி வைக்கும் வரை செய்திப் பரிமாற்று முகவர்கள் செய்தியைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இதனாலேயே மிகப்பெரிய கோப்புகளை மின்னஞ்சலினூடாக அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அபாயகரமான கோப்பு வகைகள்[தொகு]

மின்னஞ்சல்கள் அபாயகரமான கோப்புகளையும் இணைப்பாகக் கொண்டிருக்க முடியும். மின்னஞ்சல் இணைப்பினூடாக நச்சுநிரல்களையும் பரப்ப முடியும். ஆகவே, மின்னஞ்சல் சேவையை வழங்கும் சில நிறுவனங்கள், பயனர் மின்னஞ்சலைத் தரவிறக்கம் செய்வதற்கு முன்னர் அதனைப் பரிசோதித்து நச்சுநிரல்கள் உள்ளனவா அல்லது இல்லையா என உறுதிப்படுத்துகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. மின்னஞ்சல் இணைப்பு (ஆங்கில மொழியில்)
  2. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] மின்னஞ்சல் இணைப்புகள் (ஆங்கில மொழியில்)
  3. இணைப்புகளை நச்சுநிரல் தடுப்பி பரிசோதிக்கின்றது (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னஞ்சல்_இணைப்பு&oldid=3412188" இலிருந்து மீள்விக்கப்பட்டது