ஐரோவாசிய நெடும்பாறைத் தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ptyonoprogne|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஐரோவாசிய நெடும்பாறைத் தகைவிலான்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ptyonoprogne
இனம்:
இருசொற் பெயரீடு
Ptyonoprogne rupestris
(Scopoli, 1769)
       Breeding range
       Resident year-round
       Non-breeding range
வேறு பெயர்கள்

Hirundo rupestris

ஐரோவாசிய நெடும்பாறைத் தகைவிலான் ( Ptyonoprogne rupestris ) என்பது தகைவிலான் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இது சுமார் 14 cm (5.5 அங்) நீளம் இருக்கும். இதன் மேல்பகுதி சாம்பல்-பழுப்பு நிறமாகவும், கீழ்ப்பகுதிகள் வெளிறி இருக்கும். இதன் வால் குறுகியதாகவும், சதுரமாகவும், அதன் பெரும்பாலான இறகுகளில் தனித்துவமான வெள்ளை திட்டுகள் இருக்கும். இது தெற்கு ஐரோப்பா, வடமேற்கு ஆபிரிக்கா மற்றும் பலேர்க்டிக் முழுவதும் மலைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் பேரினத்தில் உள்ள மற்ற மூன்று இனங்களில் இருந்து இதை அடையாளம் காண குழப்பம் நேரலாம், ஆனால் பிரகாசமான வால் புள்ளிகள் மற்றும் இறகில் உள்ள மாறுபாடுகள் சற்று பெரியதாக உடல் அளவு ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. இதில் பல பறவைகள் ஐரோப்பாவிலேயே ஆண்டு முழுவதும் வசிக்கின்றன. ஆனால் வடக்கில் சில பகுதிகளிலும், பெரும்பாலான ஆசியப் பகுதிகளிலும் இனப்பெருக்கம் செய்பவை குளிர்காலத்தில் வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு அல்லது இந்தியா போன்ற பகுதிகளுக்கு வலசை போகின்றன.

ஐரோவாசிய நெடும்பாறைத் தகைவிலான்கள் செங்குத்துப்பாறையை ஒட்டிய பகுதியில் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் கூடு கட்டுகிறது. இது மென்மையான இறகுகள் மற்றும் காய்ந்த புற்களை உட்புறமாக கொண்டு புறணியில் சேறால் அமைக்கபட்ட கூட்டை உருவாக்குகிறது. கூடுகள் பெரும்பாலும் தனியாக இருக்கும், இருப்பினும் சில ஜோடிகள் தோதான இடங்களில் அருகருகே இனப்பெருக்கம் செய்யக்கூடும். கூட்டில் இரண்டு முதல் ஐந்து முட்டைகளை இடும். முட்டைகள் பழுப்புப் புள்ளிகளைக் கொண்டதாக வெள்ளை நிறத்தில் இருக்கும். முட்டை பெண் பறவைகளால் முதன்மையாக அடைகாக்கப்படுகின்றன. குஞ்சுகளுக்கு பெற்றோர் இருவரும் உணவளிக்கிறன. இது பாறை முகடுகளுக்கு அருகில் அல்லது நீரோடைகள் மற்றும் ஆல்பைன் புல்வெளிகளுக்கு அருகில் பறக்கும் போது இதன் அலகினால் பிடிக்கும் பலவிதமான பூச்சிகளை உண்ணும். இப்பறவைகளை கொன்றுண்ணிப் பறவைகள் அல்லது காக்கைக் குடும்பப் பறவைகள் வேட்டையாடி உண்ணும். இதன் பெரிய, விரிந்த வாழிட வரம்பு மற்றும் பெருமளவிலான எண்ணிக்கை போன்றவற்றால் இந்த இனம் குறித்த குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Ptyonoprogne rupestris". IUCN Red List of Threatened Species 2017: e.T22712216A118840565. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22712216A118840565.en. https://www.iucnredlist.org/species/22712216/118840565. பார்த்த நாள்: 19 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ptyonoprogne rupestris
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: