ஏ. சி. முரளி மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. சி. முரளி மோகன்
பிறப்புமுரளி மோகன்
சூன் 1, 1960(1960-06-01) [1]
இறப்பு25 சூன் 2014(2014-06-25) (அகவை 54)[2]
தமிழ்நாடு, சென்னை, புரசைவாக்கம்
இறப்பிற்கான
காரணம்
தூக்கிட்டுத் தற்கொலை
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991-2014
வாழ்க்கைத்
துணை
சுமதி
பிள்ளைகள்அபிசேக்

ஏ. சி முரளி மோகன் (A. C. Murali Mohan, 1960-25 சூன் 2014), முரளி மோகன் எனவும் அழைக்கப்படுபவர், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்-மற்றும் பிற மொழி தொலைக்ககாட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அதே போல் பல விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். ஹார்லிக்ஸின் பிரபல விளம்பரத்திற்காக இவர் குறிப்பிடப்பட்டார், பிரபலமாக ஹார்லிக்ஸ் மாமா என்று அழைக்கப்பட்டார், மேலும் பிரபலமான தொலைக்காட்சித் தொடரான தென்றலில் இலட்சுமணன் என்ற பாத்திரத்தில் நடித்தார்.[3][4]

1990 களின் முற்பகுதியில் இவர் தமிழ் திரைப் படங்களில் கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை சார்ந்த வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும், பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.

இறப்பு[தொகு]

இவர் 2014 சூன் 25 அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி சீதா ராணி, மகன் உமா சங்கர் ஆகியோர் உள்ளனர். [5]

பகுதி திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2000 ஹே ராம் தமிழ் பார்த்தசாரதி
2001 மின்னலே தமிழ்
2001 தவசி தமிழ்
2001 அள்ளித்தந்த வானம் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்
2003 பாய்ஸ் தமிழ்
2006 ரெண்டு தமிழ்
2007 சிவாஜி தமிழ் மருத்துவர்
2008 வேதா தமிழ்
2012 மயங்கினேன் தயங்கினேன் தமிழ்
2018 மூணாவது கண் தமிழ்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொடர் / நிகழ்ச்சி பாத்திரம் குறிப்புகள்
2010-12 தென்றல் இலட்சுமணன் சன் தொலைக்காட்சித் தொடர்
2013-14 வம்சம் செந்தில் ராஜா சன் தொலைக்காட்சித் தொடர்


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._முரளி_மோகன்&oldid=3684605" இருந்து மீள்விக்கப்பட்டது