உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழு சாமுராய்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழு வீரர்கள்
இயக்கம்அகிரா குரோசாவா
தயாரிப்புசொஜிரோ மொடோகி
கதைஅகிரா குரோசாவா
ஷினோபு ஹஷிமோட்டோ
ஹிடியோ ஓகுனி
இசைபுமியோ ஹயசகா
நடிப்புதகாசி சிமுரா
டோஷிரோ மிபூன்
ஒளிப்பதிவுஅசகசு நகை
படத்தொகுப்புஅகிரா குரோசாவா
கலையகம்டோஹோ கலையகம்
விநியோகம்டோஹோ (ஜப்பான்)
கொலம்பியா பிக்சர்ஸ் (ஐக்கிய அமெரிக்கா)
வெளியீடுஏப்ரல் 26, 1954 (1954-04-26)
ஓட்டம்207 நிமிடங்கள்
நாடுஜப்பான்
மொழிஜப்பானிய மொழி
ஆக்கச்செலவு$500,000

ஏழு வீரர்கள் (Seven Samurai, ஜப்பானிய மொழி: 七人の侍)[1] திரைப்படம் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவா இயக்கிய ஜப்பானிய மொழித் திரைப்படம் ஆகும். இத் திரைப்படம் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியானது. இத்திரைப்படத்தின் கதை 1578 ஆம் ஆண்டு நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருந்தது. தனது விளை நிலங்களின் அறுவடைப் பயிர்களைக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற விவசாயிகள் ஏழு வீரர்களை நியமித்து கொள்ளையர்களுடன் சண்டையிடுவதைப் பற்றிய கதை இது. இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளராகவும் இணைக் கதாசிரியராகவும் அகிரா குரோசாவா இருந்தார். இதுவரை எடுக்கப்பட்டத் திரைப்படங்களிலேயே மிகச்சிறந்த படங்களுள் இத்திரைப்படமும் ஒன்று.[2] மேலும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஜப்பானியமொழித் திரைப்படம் இது ஆகும். 1982 ஆம் ஆண்டின் தேர்வின்படி இத்திரைப்படம் முதல் மூன்று இடங்களுள் ஒன்றாகத் தேர்வாகியது. மேலும் இயக்குனர்களின் சிறந்த 10 திரைப்படங்களுள் ஒன்றாக 1992 மற்றும் 2002 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.[3] ஒரு குழுவை கொண்டு ஒரு இலக்கை அடையும் யுக்தி இந்த திரைபடத்தின் மூலம் இதன் பின் வந்த பல படங்களில் கைஆளப்பட்டது.ஹிந்தி திரைப்படம் சோலே(SHOLAY)

கதைச் சுருக்கம்

[தொகு]

ஒரு கிராமத்தைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர் கும்பல் ஒன்று அதன் அருகில் வந்தபின்னர், மிக அண்மையில்தான் அந்தக் கிராமத்தைக் கொள்ளையடித்தோம் அறுவடை முடிந்ததும் மீண்டும் வந்து கிராமத்தைக் கொள்ளையடிப்போம் என்று முடிவெடுக்கின்றனர். கொள்ளையர்களுக்கிடையினால உரையாடலை ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்கும் ஒரு குடியானவன் கிராமத்திற்கு விரைந்து சென்று தகவலை அறியத்தருகின்றான். கிராமத்தவர்கள் தங்களுக்கிடையில் கூட்டம் போட்டு என்ன செய்வது என்று ஆலோசிக்கின்றனர். இதே வேளையில் கிராமத்தின் மூத்த குடியானவர் ஒருவரான கிசாகு கிராமத்தவர்கள் நகரிற்குச் சென்று சாமுராய்களை கூலிக்கு அமர்த்தி தங்கள் கிராமத்தைக் காக்கவேண்டும் என்று கூறுகின்றார். ஆயினும் சாமுராய்களுக்குக் கொடுக்க உணவைத் தவிர கிராமத்தவர்களிடம் எதுவும் இருக்க வில்லை. ஆகவே கிராமத்தின் மூத்தவர், பசியோடு இருக்கும் சாமுராய்களைக் கண்டுபிடித்துக் கொண்டுவாருங்கள் என்று கூறுகின்றார். நகரிற்குச் சென்று சோற்றைக் கூலியாகக்கொடுத்து சாமுராய்களை வாடகைக்கு அமர்த்தும் செயல் அவ்வளவாக வெற்றியளிக்கவில்லை.

திருடனிடம் இருந்து சிறுவன் ஒருவனை மீட்கும் நிகழ்வின் கிராமத்தவருடன் நண்பராகும் கம்பெய் எனும் சாமுராய் கிராமத்தவரிற்கு உதவி செய்ய முடிவு செய்கின்றார். இதே வேளை கம்பெயின் திறமைகளைக் கண்டு ஒரு இளம் சாமுராயான கட்ஷூசிரோ என்பவர் தன்னை கம்பெயின் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி பணிக்கின்றார். கம்பெய் அவரின் பழைய நண்பரான ஷிசிரோஜூயையும் கிராத்தவரிற்கு உதவ தன்னுடன் இணைத்துக்கொள்கினாறார். மேலும் கடுசுஷூரோவின் உதவியுடன் மேலும் மூன்று சாமுராய்களை இவர்கள் தங்களுடன் இணைத்துக்கொள்கின்றனர். கம்பெய் கிராமத்தைக் காக்க குறைந்தது ஏழு சாமுராய்கள் தேவை என்று நினைத்தாலும் அது வரை ஐந்து சாமுராய்களே இணைந்திருந்தனர். ஆறாவது சாமுராயாக கடுசுஷூரோவையும் இணைத்துக் கொண்டனர். கிக்குசியோ என்பவனை இவர்களை இணைத்துக்கொள்ள மறுத்து தம்மைத் தொடர அனுமதியாது சென்றாலும் அவன் இவர்களைத் தொடர்ந்தே சென்றான்.

இறுதியாக பயணமுடிவில் சாமுராய்கள் கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை அடைந்த சாமுராய்கள் தாங்கள் மிகவும் அன்னியமாக நடத்தப்படுவதை உணர்ந்தனர். சாமுராய்களை அரவணைக்காது கிராமத்தவர்கள் வீடுகளில் ஒளிந்துகொண்டனர். கிராமத்தவர்களும் சாமுராய்களும் இணைந்தால் மட்டுமே கிராமத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்த்த கிக்குசியோ பொய்யாக அவர்களைப் பயமுறுத்துகின்றான். இதனால் கிக்கிசியோ பால் விரும்பம் ஏற்பட்டு அவனை ஏழாவது சாமுராயாக தங்களுடன் இணைத்துக்கொள்கின்றனர். இதேவேளை கிராமத்தவர்களால் முன்பு கொலைசெய்யப்பட்ட ஒரு சாமுராயின் கவசங்களைக் கொண்டுவந்து அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் சாமுராய்களைக் கோபப்படுத்துகின்றான். ஆயினும் கிராமத்தவர்கள் முன்பு சாமுராய்களாலும் துன்புறுத்தப்பட்டமையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் எடுத்தியம்பியபின்னர் அவர்களின் கோபம் வெட்கமாக மாறியது.

சாமுராய்கள் கிராமத்தவர்களை யுத்தகலையில் பயிற்றுவிப்பதுடன் கிராமத்தைச்சுற்றிக் காவலரன்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தினர். இதேவேளை கட்ஷூசிரோ கிராமத்தவரான மன்சோவின் மகள் மீது காதல்வயப்படுகின்றார். ஆரம்பத்தில் மன்சோவின் மகள் சாமுராய்களினால் மானபங்கப்படுத்தப்படலாம் என்ற காரணத்தால் ஆண்பிள்ளைபோல சோடிக்கப்பட்டு நடமாடவிடப்பட்டாள். கொள்ளையர்கள் கொள்ளைக்கு மீளும் நேரம் நெருங்கும் போது தகவல் சேகரிக்க வந்த இரண்டு கொள்ளைக்காரர்கள் இவர்களால் வெற்றிகரமாக கொலை செய்யப்பட்டனர். அத்துடன் ஒரு கொள்ளைக்காரனை உயிருடனும் பிடித்தனர். இவன் இறக்க முன்னர் கொள்ளைக்காரர்களின் இருப்பிடத்தை அறிந்துகொள்கின்றனர். கொள்ளையர்களின் இருப்பிடத்தை ரிக்கிச்சி எனும் கிராம்மத்தவன் தலமையில் தாக்குதல் நடத்தியபோது ஹெய்ஹாச்சி எனும் சாமுராய் தன்னுயிரை நீத்தார். இந்தத் தாக்குதலின் விளைவாக இந்த கொள்ளையர்களின் கூடாரம் அழிக்கப்படுகின்றது. இதேவேளையில் எரியும் நெருப்பில் ஒரு பெண் திடீரென பாய்ந்து உயிரை மாய்க்கின்றார். பின்னர் இந்தப்பெண் கிராமத்தவன் ரிக்கிச்சியின் மனைவி என்றும் இவள் கொள்ளையரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டாள் என்றும் அறியப்படுகின்றது.

இறுதியில் கொள்ளையர்கள் கும்பல் கிராமத்தைத் தாக்கியது. ஆயினும் கிராமத்தைச்சுற்றி விரிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் மற்றும் அகழிகள் கொள்ளையர்களை பிரமிப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இதைக் கடந்து கிராமத்தில் புக முயன்ற பல கொள்ளையர்கள் கொல்லப்பட்டனர். கிராமத்தின் மூத்த குடியானவர் கிசாகு கிராமத்தின் புதிய பாதுகாப்பு வளையத்தினுள் வர மறுத்து கிராமத்தின் வெளி வட்டதினுள்ளேயே தங்கிவிடுகின்றார் தன் குடும்பத்துடன். இவரது வீடு முதலியவை கொள்ளையர்களின் கைவரிசைக்கு உள்ளாகின்றது. இவரைக் காப்பாற்ற இறுதி நேரத்தில் துனிவுடன் சென்றவரிடரிடம் கிசாகுவின் ஒரே பேரன்மட்டுமே கிடைக்கின்றார். இந்தச் சிறுவனைப் பார்க்கும் போது கிக்குசியோ எனும் சாமுராய்க்கு தன் இளமை நினைவிற்கு வருகின்றது.

கொள்ளையர்களிடன் சுடுதிறன் கொண்ட மூன்று மஸ்கட்கள் இருக்கின்றன. இவைமூலம் கிராமத்தவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்க கியூசோ எனும் சாமுராய் தனியாகச் சென்று கொள்ளையரிடம் இருந்து ஒரு மஸ்கட்டை மீட்டு வருகின்றார். இதனால் சிறுமையடைந்ததாக நினைக்கும் கிக்குசியோ தனியாகச் சென்னு மற்றுமொரு மஸ்கட்டை கொள்ளையரிடம் இருந்து மீட்டு வருகின்றான். இதே வேளை தனது காவலரனை விட்டுவெட்டு கிக்கிசியோ செல்கின்றான். இதனால் இந்த காவலரனில் நின்ற கிராமத்தவர்கள் தலைவர் இல்லாமல் நிக்கின்றனர். இதே வேளையில் இந்த காவலரணைத் தாக்கிய கொள்ளையர்கள் கிராமத்தவர் பலரைக் கொல்கின்றனர். இந்த காவலரன் வீழ்வதைத் தடுக்க கம்பெய் தன்னுடைய பிரதான காவலரனில் இருந்து சிலரை கொள்ளையரால் தாக்கப்பட்ட காவலரனிற்கு அனுப்புகின்றார். இதே வேளை பிரதான காவலரனை கொள்ளையர் கூட்டத்தலைவன் தாக்கினான். கொள்ளையர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைக்கப்பட்டவிட்ட நேரத்தில் இறுதி யுத்தத்திற்கு தயாராகுமாறு கம்பெய் தனது அணிக்கு பணிக்கின்றார். இதே வேளையில் தன் பிழையினால் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி கிக்கிசியோ வருத்துகின்றார். இத்தனையும் நடக்கும் வேளையில் கிராமத்தவன் மன்சோ தனது மகள் ஷினோவுடன் கிக்கிசியோவிற்கு இருந்த காதலை அறிந்து கடும்கோபம் கொள்கின்றான். ஆயினும் கிராமத்தவரும் சாமுராய்களும் இணைந்து இளையவர்களின் காதலைப் பிரிக்காது அவர்களை சேர்த்தவைக்குமாறு பணிக்கப்படுகின்றான்.

மறுநாள் மழைபெய்யும் வேளையில் கொள்ளையர்கள் கிராமத்தினுள் உள் நுழையவிடப்பட்டு மடக்கித்தாக்கப்படனர். இதில் கொள்ளையர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதேவேளை எஞ்சிய ஒரு மஸ்கட்டுடன் தப்பும் கொள்ளையர் கூட்டத்தலைவன் பெண்கள் தங்கிய கூடாரத்தினும் பதுங்குகின்றான். கியூசோ எனும் சாமுராயை தனது மஸ்கட்டினால் சுட்டும் கொலைசெய்கின்றான். தான் இரசித்த தலைவன் கியூசோ கொலை செய்யப்பட்டதைக் கிகிசியோ கடுக்கோபம் கொண்டு கொள்ளையர் கூட்டத் தலைவனை நோக்கிப் பாய்ந்தான். ஆயினும் கிக்கிசியோவின் மீதும் துப்பாக்கிச்சூடு வீழ்கின்றது. ஆயினும் நிலத்தில் சாயும் முன்னர் தன்னிடம் இறுதியாக இருந்த சக்தியைத் திரட்டிக்கொண்டு சென்று கொள்ளையர் கூட்டத்தலைவனை குத்திக்கொல்கின்றான். கம்பெய் மற்றும் சிசிரோசி ஆகியோர் இந்த யுத்தத்தில் தாம் வீர மரணம் எய்தலாம் என்று எண்ணினாலும் அது கைகூடவில்லை என்று பேசிக்கொள்கின்றனர். இறுதியாக யுத்தத்திலே தப்பிய மூன்று சாமுராய்களும் மீளவும் கிராமத்தவர்கள் பயிர்களை பயிரிடும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கின்றனர. இதனைப் பார்க்கும் அவர்கள் இந்த யுத்தத்தின் உண்மையான வெற்றியாளர்கள் கிராமத்தவர்களே என்பதை உணரும் வகையில் கருத்துத்தெரிவிக்கின்றனர்.

நடிகர்கள்

[தொகு]

ஏழு வீரர்கள்

[தொகு]
நடிகரின் பெயர் திரைப்படத்தில் பெயர்
தகாசி சிமுரா கம்பெய் சிமாடா (島田勘兵衛)
இசாவோ கிமுரா கட்சுஷிரோ ஒகமொடோ (岡本勝四郎)[4]
யொசியோ இனாபா கொரோபெய் கடயமா (片山五郎兵衛)
டைசுகே கடோ சிச்சிரோஜி (七郎次)
மினோரு சியாகி ஹெய்ஹாச்சி ஹயஷிடா (林田平八)
செயிஜி மியாகுசி கியூசோ (久蔵)
டோஷிரோ மிபூன் கிகுசியோ (菊千代)[5]

கிராமவாசிகள்

[தொகு]
நடிகரின் பெயர் திரைப்படத்தில் பெயர்
கொகுடென் கொடோ கிசாகு (儀作)
பொகுசென் ஹிடாரி யோஹெய் (与平)
கமடாரி புஜிவரா மன்சோ (万造)
கெயிகோ சுஷிமா ஷினோ (志乃)
யொசியோ சுசியா ரிகிசி (利吉)
யுகிகோ ஷிமாசகி ரிகிசியின் மனைவி
யொசியோ கொசுகி மொசுகே (茂助)

கொள்ளைக்காரர்கள்

[தொகு]
நடிகரின் பெயர் திரைப்படத்தில் அவருடைய பாத்திரம்
சின்பெய் தகாகி கொள்ளைக்காரர்களின் தலைவன்
சின் ஓடொமோ கொள்ளைக்காரர்களின் இரண்டாவது கட்டளையாளர்
டொஷியோ தகஹரா கைத்துப்பாக்கி வைத்துள்ள கொள்ளைக்காரன்
மசனொபு ஓகுபோ கூரையின் மேல் இருக்கும் கொள்ளைக்காரன்
ஹரு நகஜிமா

தொகுக்கப்பட்ட பதிப்பு மற்றும் டிவிடி வெளியீடுகள்

[தொகு]

ஏழு சாமுராய் நீண்ட படம் (மூன்று மணி நேரம், இருபத்தி ஏழு நிமிடங்கள் - 207 நிமிடங்கள் ). அமெரிக்க பார்வையாளர்கள் முழு படத்தை உட்கார்ந்து பார்க்க தயாராக இருக்க வேண்டும் என்று என அச்சம் அடைந்து அமெரிக்க விநியோகஸ்தர்கள் அதை திரையிடும் போது Toho ஸ்டுடியோஸ் முதலில் படத்தில் இருந்து ஐம்பது நிமிடங்கள் குறைந்தனர். மற்றும் பிரிட்டன் மறு-வெளியீட்டில்(1991) 190 நிமிடங்கள் காட்டப்பட்டது ,2002 ல் அமெரிக்காவில் கிட்டத்தட்ட முழு ( 203 நிமிடம்) பதிப்பு மீண்டும் வெளியிடப்பட்டது. படத்தின் டிவிடி பதிப்பு ஒரு வட்டில் படத்தின் முழு அசல் பதிப்பு (207 நிமிடங்கள்) கொண்டதே தற்போது கிடைக்கும் , மேட்மேன் என்டர்டெயின்மெண்ட் மூலம் முழு 207 நிமிடம் வெட்டு ஒரு பகுதியில் 4 டிவிடி அதன் Eastern Eye முத்திரையுடன் 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முழு நீள பதிப்பு ப்ளூ ரே பதிப்பு 2010 அக்டோபர் 19 ம் தேதி Criterion Collection மூலம் வெளியிடப்பட்டது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
வெனிஸ் திரைப்பட விழா (1954)
மைனிசி திரைப்பட விருது (1955)
  • வெற்றியாளர் - சிறந்த துணை நடிகர் - செயிஜி மியாகுசி
பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (1956)
  • பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த திரைப்படத்திற்கான BAFTA விருது
  • பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த வெளிநாட்டு நடிகருக்கான BAFTA விருது - டோஷிரோ மிபூன்
  • பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த வெளிநாட்டு நடிகருக்கான BAFTA விருது - தகாசி சிமுரா
அக்கடமி விருது (1957)[6]
  • பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த கலை இயக்கம், அமைப்பு அலங்காரம், கறுப்பு மற்றும் வெள்ளை - சோ மட்சுயமா
  • பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த ஆடை வடிவமைப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை - கோகெய் எகாசி
ஜஸ்ஸி விருது (1959)
  • வெற்றியாளர் - சிறந்த வெளிநாட்டு இயக்குநர் - அகிரா குரோசாவா
  • வெற்றியாளர் - சிறந்த வெளிநாட்டு நடிகர் - தகாசி சிமுரா

மேற்கோள்கள்

[தொகு]
  1. Because the Japanese language has no definite article, the question arises as to whether the proper English translation of the title is Seven Samurai or The Seven Samurai. While the former is the literal translation, either may be considered idiomatically correct.
  2. Fujiwara, Chris (2002-08-29). "Canon fodder - What it means to call Seven Samurai a great film". The Boston Phoenix.
  3. "The Sight & Sound Top Ten Poll 2002". பார்க்கப்பட்ட நாள் 2010-12-28.
  4. Toho Masterworks. Akira Kurosawa: It Is Wonderful to Create (DVD) (in Japanese).{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
  5. Heuberger, Sean. "The Campbellian and Musashian Samurai". Topics in Literature. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  6. "NY Times: Seven Samurai". NY Times. பார்க்கப்பட்ட நாள் 2008-12-22.

வெளி இணைப்புக்கள்

[தொகு]