ஏர் சீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏர் சீனா
中国国际航空公司
Zhōngguó Guójì Hángkōng Gōngsī
IATA ICAO அழைப்புக் குறியீடு
CA CCA AIR CHINA
நிறுவல்1988
மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
 • அங்க்‌ஷோ சியோஷன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
 • சோங்கிங் ஜியாங்பே பன்னாட்டு வானூர்தி நிலையம்
 • தியான்ஜின் பின்ஹைய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
 • உஹான் தியான்ஹே பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்பீனிக்சு மைல்சு
கூட்டணிஇசுடார் அல்லையன்சு
கிளை நிறுவனங்கள்
 • ஏர் சீனா சரக்கு
 • ஏர் மக்காவு
 • பெய்ஜிங் ஏர்லைன்சு
 • டாலியன் ஏர்லைன்சு
 • ஷான்டோங் ஏர்லைன்சு
 • சென்ஞ்சென் ஏர்லைன்சு
 • திபெத் ஏர்லைன்சு
வானூர்தி எண்ணிக்கை293 (+250 orders)
சேரிடங்கள்185
தாய் நிறுவனம்சீன தேசிய வான்பயண நிறுவனம்
தலைமையிடம்பெய்ஜிங் தியான்ஷு வானூர்திநிலையத் தொழிலக மண்டலம்
சுன்யீ மாவட்டம், பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
முக்கிய நபர்கள்வாங் சாங்ஷுன், தலைவர்
கய் ஜியாங்ஜின், குடியரசுத் தலைவர்
வலைத்தளம்airchina.com

ஏர் சீனா நிறுவனம் (Air China Limited, SEHK: 0753) ({{zh|s=中国国际航空公司|t=中國國際航空公司|p=Zhōngguó Guójì Hángkōng Gōngsī, சுருக்கமாக 国航) சீன மக்கள் குடியரசின் முதன்மை வான்பயணச் சேவையாளரும் தேசிய விமானசேவை நிறுவனமும் ஆகும். இதன் தலைமையகம் பெய்ஜிங்கின் சுன்யீ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஏர் சீனாவின் வான்பயணச் சேவைகள் பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. உலகின் மிகக் கூடுதலான வானூர்தித் தொகுதியைக் கொண்ட நிறுவனங்களில் பத்தாவதாக உள்ளது. கொண்டுசென்ற பயணியர்களின்படியான தரவரிசையில் இதன் முதன்மை போட்டியாளர்களாக உள்ள சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பின்தங்கி உள்ளது.

இந்த நிறுவனத்தின் சின்னமான கலைமயமான பீனிக்சு வடிவத்தை முன்னாள் தேசியத் தலைவரான டங் சியாவுபிங் உருவாக்கினார். மேலும் பீனிக்சு சின்னம் “VIP” என்பதன் கலைமயமான பெயர்ப்பாக அமைந்துள்ளது. ஏர் சீனா ஸ்டார் அல்லையன்சின் உறுப்பினராகும்.

2010இல் ஏர் சீனா 60 மில்லியன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதன் நிகர இலாபமாக 12 பில்லியன் யுவான் (USD $1.83 பில்லியன்) ஆக இருந்தது.[1]

சேருமிடங்கள்[தொகு]

  பெருநிலச் சீனா
  ஏர் சீனா சேருமிடங்கள்
  முந்தைய சேருமிடங்கள்

ஏர் சீனாவின் வழித்தடங்கள் அதன் முதன்மை மைய முனையமான பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஆசியா முழுமையும் மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்கா வரை பரந்துள்ளது. மேலும் தற்போது இது ஆசிய, ஆத்திரேலிய மற்றும் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க அளவிலான இடங்களுக்கு சேவை புரிகிறது.

2006ஆம் ஆண்டில் திசம்பர் 10 முதல் தென் அமெரிக்க சேருமிடங்களுக்கும் சேவை வழங்கத் தொடங்கி உள்ளது. மத்ரித் வழியாக குவாருலோசு பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு ஏர் சீனா இயக்கும் வான்வழித் தடமே இந்த நிறுவனம் இயக்கும் மிக நீண்ட நேரடி சேவை ஆகும்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஏர் சீனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நிறுவன நிலவரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_சீனா&oldid=3791545" இலிருந்து மீள்விக்கப்பட்டது