ஏஜினா
ஏஜினா Αίγινα | |
---|---|
![]() ஏஜினாவின் கடற்பரப்பின் காட்சி | |
அமைவிடம் | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | அட்டிக்கா |
மண்டல அலகு: | தீவுகள் |
மேயர்: | Giannis Zorbas (independent) |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 13,056 |
- பரப்பளவு: | 87.41 km2 (34 sq mi) |
- அடர்த்தி: | 149 /km2 (387 /sq mi) |
சமூகம் | |
- மக்கள்தொகை: | Expression error: Unexpected number. |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
அஞ்சல் குறியீடு: | 180 10 |
தொலைபேசி: | 2297 |
வாகன உரிமப் பட்டை: | Υ |
வலைத்தளம் | |
Official Visitors Guide to Aegina |
ஏஜினா (Aegina, கிரேக்கம்: Αίγινα , ஐஜினா [ˈeʝina] ; பண்டைக் கிரேக்கம்: Αἴγῑνα ) என்பது கிரேக்கத்தைச் சேர்ந்த ஒரு தீவாகும். இது சரோனிக் வளைகுடாவில் உள்ள சரோனிக் தீவுகளில் ஒன்றாகும். இது பைரேயசிலிருந்து 27 கிமீ (17 மைல்) தொலைவில் உள்ளது. இந்தத் தீவில் பிறந்த அதன் மன்னரான நாயகன் ஏகசின் தாயான ஏஜினாவின் பெயரிலிருந்து இத்தீவு அதன் பெயரைப் பெற்றது.
நிர்வாகம்[தொகு]
நகராட்சி[தொகு]
ஏஜினா நகராட்சியானது தன் பரப்பிற்குள் ஏஜினா தீவு மற்றும் சில கடல் தீவுகளைக் கொண்டுள்ளது. மேலும் ஏஜினா தீவுகளின் பிராந்திய அலகு, அட்டிகா பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். நகராட்சியானது பின்வரும் ஐந்து கம்யூனிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது (அடைப்புக்குறிக்குள் 2011 இல் மக்கள் தொகை):[2]
- கிப்செலி (2124)
- மெசாக்ரோஸ் (1361)
- பெர்டிகா (823)
- வத்தி (1495)
பிராந்திய தலைநகரம் தீவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஏஜினா நகரம் ஆகும்.
மாகாணம்[தொகு]
ஏஜினா மாகாணம் ( கிரேக்கம்: Επαρχία Αίγινας ) பிரேயஸ் மாகாணத்தின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. அதன் பிரதேசம் தற்போதைய நகராட்சிகளான ஏஜினா மற்றும் அக்கிஸ்ட்ரியவைக் கொண்டிருந்தது .[3] இந்த மாகாணம் 2006 இல் கலைக்கப்பட்டது.
நிலவியல்[தொகு]
ஏஜினா தோராயமாக முக்கோண வடிவில் உள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக தோராயமாக 15 கிமீ (9.3 மைல்) மற்றும் வடக்கிலிருந்து தெற்காக 10 கிமீ (6.2 மைல்), 87.41 கிமீ2 (33.75 சதுர மைல்) நீளம் கொண்ட பகுதியாக உள்ளது.[4]
அணைந்த எரிமலை ஏஜினாவின் மூன்றில் இரண்டு பங்கு இடத்தைக் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் பாறைகள் நிறைந்தவை என்றாலும் வளமான சமவெளிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. அச்சமவெளிகளில் பருத்தி, கொடிகள், பாதாம், ஆலிவ், அத்தி போன்றவையும், தானிய பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. என்றாலும் இன்று (2000களில்) ஏஜினாவின் மிகவும் தனிச்சிறப்பான பயிராக பிஸ்தா உள்ளது. பொருளாதார ரீதியாக, கடற்பாசி மீன்வளம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தீவின் தெற்கு எரிமலை பகுதி கரடுமுரடான மற்றும் மலைப்பகுதியாக பெரும்பாலும் தரிசு நிலமாக உள்ளது. தீவின் மிக உயர்ந்த பகுதியாக தெற்கில் கூம்பு வடிவில் உள்ள ஓரோஸ் மலை (531 மீ) ஆகும். மேலும் பன்கெலினியன் மலைப்பகுதி இருபுறமும் குறுகிய வளமான பள்ளத்தாக்குகளுடன் வடக்கு நோக்கி நீண்டுள்ளது.
தீவின் கடற்கரைகள் பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளன. பைரேயசில் இருந்து ஹைட்ரோஃபோயில் படகுகள் வழியாக ஏஜினாவை நாற்பது நிமிடங்களில் அடையலாம். சாதாரண படகுகளில் சுமார் ஒரு மணி நேரத்தில் சென்றடையலாம். பெரியவர்களுக்கான பயணச் சீட்டுடி விலை 4-15 யூரோ கட்டணத்துக்குள் இருக்கும். ஏஜினா நகரத்திலிருந்து அஜியா மெரினா உள்ளிட்ட தீவு முழுவதும் உள்ள இடங்களுக்கு வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. கிழக்குக் கடற்கரையில் போர்ட்ஸ் என்ற மீன்பிடி கிராமம் ஒன்று உள்ளது.
காலநிலை[தொகு]
ஏஜினா வெப்பமான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பன் காலநிலை வகைப்பாடு : BSh). இது கிரேக்கத்தின் வறண்ட இடங்களில் ஒன்றாகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஏஜினா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 13.1 (55.6) |
14.6 (58.3) |
17.6 (63.7) |
19.6 (67.3) |
25.4 (77.7) |
30.6 (87.1) |
33 (91) |
33.5 (92.3) |
29.7 (85.5) |
25.7 (78.3) |
20.2 (68.4) |
16.4 (61.5) |
23.28 (73.91) |
தாழ் சராசரி °C (°F) | 8.1 (46.6) |
9.1 (48.4) |
11 (52) |
12.3 (54.1) |
16.4 (61.5) |
21.3 (70.3) |
23.8 (74.8) |
24.8 (76.6) |
22.5 (72.5) |
19 (66) |
15 (59) |
12.1 (53.8) |
16.28 (61.31) |
பொழிவு mm (inches) | 49.6 (1.953) |
36.1 (1.421) |
26.9 (1.059) |
49 (1.93) |
11.2 (0.441) |
12.7 (0.5) |
2.9 (0.114) |
9.7 (0.382) |
10.3 (0.406) |
21.1 (0.831) |
83.5 (3.287) |
75.5 (2.972) |
388.5 (15.295) |
ஆதாரம்: http://penteli.meteo.gr/stations/aegina/ (2019 & 2020 averages) |
குறிப்புகள்[தொகு]
- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Detailed census results 1991" (PDF). 3 March 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. (39 MB)
- ↑ "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. 21 September 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.