எஸ். எம். எஸ் எம்டன் (1906)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Bundesarchiv DVM 10 Bild-23-61-13, Kleiner Kreuzer "SMS Emden I".jpg
வரலாறு KLM ensign
அமைத்தவர்: கைசர்லிக் வேர்ஃப்ட், (டான்ஜிக், போலந்து)
அமைப்பு ஆரம்பம்: ஏப்ரல் 06, 1906
அமைப்பு முடிவு: மே 26, 1908
சேவைக்கு விடப்பட்டது: ஜூலை 10, 1909
செலவு: 6,38 மில். ரைச்மார்க்ஸ்
முடிவு: மூழ்கடிக்கப்பட்டது
பொதுத் தகவல்கள்
Displacement: 3,364 தொன்கள்
நீளம்: 118 மீ
கதி: 43 கிமீ/மணி)
வீச்சம்: 3,700 மைல்கள்

எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் போலந்து நாட்டின் "டான்ஜிக்" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும்.

'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் "எம்டன்" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

சென்னையைத் தாக்கிய எம்டன்[தொகு]

1914 ஆகஸ்ட் இறுதியில் 'எம்டன்' சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர்த் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது.

1914 செப்டம்பர் 22 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. 'எம்ட'னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன.[1]

தமிழகத்தில் எம்டன் என்ற சொல்[தொகு]

அவன் சரியான எம்டனாக இருக்கான் அதாவது வருவதும் போவதும் தெரியாமல் இருக்கான் என்று பொருள் பட கூறுவார்கள். இச்சொற்றொடர் சென்னையை அடுத்து எம்டன் நாசகாரிக் கப்பல் திடீர் திடீர் என்று தோன்றி ஆங்கிலேயருக்கு போக்கு காட்டியதால் ஏற்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சென்னையில் குண்டுகளை வீசிய எம்டன் (ரகிமி)". 2006-12-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._எஸ்_எம்டன்_(1906)&oldid=3236544" இருந்து மீள்விக்கப்பட்டது