உள்ளடக்கத்துக்குச் செல்

எழுகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்கு எழுகோணம்
படம்
விளிம்புகள் மற்றும் உச்சிகள்7
சிலாஃப்லி குறியீடு{7}
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம்
சமச்சீர் குலம்இருமுகக் குலம் (D7)
உட்கோணம் (பாகை)°
பண்புகள்குவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது

வடிவவியலில் எழுகோணம் (heptagon) என்பது ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணமாகும். ஏழு பக்கங்களும் ஏழு கோணங்களும் சமமாக உள்ள எழுகோணம் ஒழுங்கு எழுகோணம் அல்லது சீர் எழுகோணம் எனப்படும். எழுகோணத்தின் பக்கங்கள் சந்திக்கும் கோணம் 5π/7 ரேடியன் அல்லது 128.5714286 பாகைகள் ஆகும். இதன் ஷ்லாஃப்லி குறியீடு {7}.

a -பக்க அளவுள்ள எழுகோணத்தின் பரப்பு:

வரைதல்

[தொகு]

கவராயம், அளவுகோல் கொண்டு தோராயமாக எழுகோணம் வரையும் முறையின் அசைப்படம்.

தோராயப்படுத்தல்

[தொகு]

நடைமுறைப் பயன்பாட்டுக்காக வரைதலில் 0.2% அளவு தோராயப்படுத்தப்பட்டுள்ளது. A சுற்றுவட்டத்தின் மீது அமையும் ஒரு புள்ளி. வில் BOC வரைந்தால், என்பது எழுகோணத்தின் தோராயமான பக்க நீளத்தினைத் தரும்.

மேலும் துல்லியமாக தோராயப்படுத்தல்

[தொகு]

பக்க அளவுடைய ஒரு ஒழுங்கு எழுகோணத்தை ஆரம் கொண்ட வட்டத்துக்குள் 0.00013% -க்கும் குறைவான பிழையுடன் வரைய முடியும்.

இத்தோராயப்படுத்தல் மூலம் இது சாத்தியமாகிறது.

நட்சத்திர எழுகோணங்கள்

[தொகு]

இரு நட்சத்திர எழுகோணங்கள் வரையலாம். இணைக்கும் இடைவெளியைக் கொண்டு இவ்விரு எழுகோணங்களின் ஷ்லாஃப்லி குறியீடுகள் {7/2} மற்றும் {7/3} ஆகும்.


ஒரு ஒழுங்கு எழுகோணத்துக்குள் (சிவப்பு) வரையப்பட்ட {7/2} (நீலம்) மற்றும் {7/3} (பச்சை) நட்சத்திர எழுகோணங்கள்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுகோணம்&oldid=3354951" இலிருந்து மீள்விக்கப்பட்டது