எலிசபெத் கவுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலிசபெத் கவுடி ( Elizabeth Goudie ) (என்கிற பிளேக்; ஏப்ரல் 20, 1902, மட் லேக், நியூஃபவுண்ட்லேண்ட் காலனி - ஜூன் 10, 1982 ஹேப்பி வேலி, லாப்ரடோர்) இனுவிட்டு இனத்தைச் சேர்ந்த கனடா எழுத்தாளர். இவர் எழுதிய ஒரே புத்தகமான வுமன் ஆஃப் லாப்ரடோர்[1](பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88778-116-0 ) என்பது 1973 இல் வெளியிடப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

எலிசபெத் பிளேக் என்ற பெயரில் ஏப்ரல் 20, 1902 இல், கனடாவின் கனடாவின் நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் பகுதியில் அமைந்துள்ள மட் லேக் என்னுமிடத்தில் சாரா மிச்செலின் மற்றும் ஜோசப் பிளேக் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது பெரிய அத்தை, லிடியா காம்ப்பெல், [2] ஸ்கெட்ச்ஸ் ஆஃப் லாப்ரடோர் லைஃப் என்ற புத்தகத்தை எழுதியவர். [3] (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-894294-27-0 ). அவர் லாப்ரடோரின் சிறந்த அறியப்பட்ட வரலாற்று நபர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவர். அன்புடன் "லிடியா அத்தை" என்று அழைக்கப்பட்டவர்.[4]

18 வயதில், எலிசபெத் ஒரு பொறியாளரான ஜிம் கவுடி என்பவரை மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு ஒன்பது குழந்தைகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான ஜோ, நாஸ்கௌபியின் (1975-85) சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மேலும், ஃபிராங்க் மூர்ஸ் மற்றும் பிரையன் பெக்ஃபோர்ட் ஆகிய இருவரின் நிர்வாகங்களில் பல துறைகளை நிர்வகித்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

1963 இல், எலிசபெத்தின் கணவர் இறந்தார். பின்னர் தனது வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை எழுத முடிவு செய்து அதை ஜூன் 1971 இல் முடித்தார்.

ஹேப்பி பள்ளத்தாக்கில் குடியிருந்த மெமோரியல் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் ஆராய்ச்சியாளர் டேவிட் சிம்மர்லி, எலிசபெத் கவுடியின் நினைவுக் குறிப்புகள் வெளியிடுவதை கேள்விப்பட்டு அதை வெளியிடுவதற்கு உதவ முன்வந்தார். மேலும் இரண்டு ஆண்டுகள் எலிசபெத்துடன் அதிக நேரம் செலவிட்டார். இந்த புத்தகம் ஜூலை 1973 இல் ஒட்டாவாவின் பீட்டர் மார்ட்டின் அசோசியேட்ஸ் என்ற பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. அசல் கையெழுத்துப் பிரதி நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் மெமோரியல் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் லாப்ரடோர் அறையில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளது. [5]

கௌரவங்கள்[தொகு]

1975 ஆம் ஆண்டில், இவரது வாழ்க்கை மற்றும் பணியை அங்கீகரிப்பதற்காக, மெமோரியல் பல்கலைக்கழகத்தில் இருந்து இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், ஹேப்பி வேலி-கூஸ் பேயில் உள்ள மாகாண அரசாங்க கட்டிடத்திற்கு இவரது பெயரிடப்பட்டது. [6]

வான்கூவரைச் சேர்ந்த ஆண்டி வைன் என்ற நாட்டுப்புற பாடகரால் வுமன் ஆஃப் லாப்ரடோர் என்ற பாடல் [7] 2005 இல் எழுதப்பட்டது.

ஷெர்ரி இசுமித் என்பவர் நடித்த "வுமன் ஆப் லாப்ரடார்; தி எலிசபெத் கவுடி ஸ்டோரி " என்ற நாடகம் இவரது புத்தகத்தை தழுவி உருவாக்கப்பட்டது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Woman of Labrador - Inuit Literatures ᐃᓄᐃᑦ ᐊᓪᓚᒍᓯᖏᑦ Littératures inuites". inuit.uqam.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
  2. "Campbell, Lydia - Inuit Literatures ᐃᓄᐃᑦ ᐊᓪᓚᒍᓯᖏᑦ Littératures inuites". inuit.uqam.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
  3. "Sketches of Labrador Life - Inuit Literatures ᐃᓄᐃᑦ ᐊᓪᓚᒍᓯᖏᑦ Littératures inuites". inuit.uqam.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
  4. Stopp, Marianne (June 27, 2011). "I, old Lydia Campbell": a Labrador Woman of National Historic Significance" (PDF). Memorial University. பார்க்கப்பட்ட நாள் March 29, 2013.
  5. Remembering Women of Labrador From the files of The Gazette August 25, 1994. text only version
  6. Webcam view from building
  7. Lyrics with midi
  8. Sherry Smith (I) IMDb bio பரணிடப்பட்டது 2006-03-07 at the வந்தவழி இயந்திரம் "Her one-woman show, Woman of Labrador; The Elizabeth Goudie Story, has been performed throughout Newfoundland and Labrador, Nova Scotia as well as Toronto."

ஆதாரங்கள்[தொகு]

  • Blake, Dale, Women of Labrador: realigning North from the site(s) of metissage., Essays on Canadian Writing, (September 22, 1996).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_கவுடி&oldid=3903656" இலிருந்து மீள்விக்கப்பட்டது