உள்ளடக்கத்துக்குச் செல்

இனுவிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனுவிட்டு
Inuit

பாரம்பரிய பனிச்சறுக்கு வண்டி, கேப் டோர்செட்
மொத்த மக்கள்தொகை
(150,000[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அலாசுக்கா, கிரீன்லாந்து, வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), நுனாட்சியாவுட்டு, நுனாவிக்கு, நுனாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, சைபீரியா
மொழி(கள்)
இனுவிட்டு மொழி, பல தேசிய மொழிகள்
சமயங்கள்
கிறித்தவம், சாமனியம், அனிமிசம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அலூவிட்டு மக்கள், சிரேனிக்கி எசுக்கிமோ, இனுப்பியாட்டு, யூப்பிக்கு மக்கள்

இனுவிட்டு (Inuit) என்பது (ஆங்கிலத்தில் எசுக்கிமோ என்றும் அழைக்கப்பட்டனர்), ஆர்க்டிக்கு வடமுனைப்பகுதியில் வாழும், பண்பாட்டளவில் மிக நெருக்கமான, பல தொல்குடி மக்களைக் குறிக்கும். இவர்கள் கனடா, தென்மார்க்கு, கிரீன்லாந்து, உருசியா, சைபீரியா, அமெரிக்காவின் அலாசுக்கா, கனடாவின் நுனாவுட்டு மாநிலம், கனடாவின் வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), கனடாவின் நியூபின்லாந்து லாபிரடோர் பகுதியில் உள்ள நுனாட்சியாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, கனடாவின் குபெக்கு மாநிலத்தின் வடபகுதியில் உள்ள நுனாவிக்கு ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[2] இனுவிட்டு (Inuit) என்றால் "மக்கள்" என்று அவர்கள் மொழியாகிய இனுக்டிடூட்டு (Inuktitut) மொழியில் பொருள். இனுக்கு (Inuk) என்பது இனுவிட்டு மக்களைச் சேர்ந்த ஒரு மாந்தரையும், இனுவிட்டு என்பது அம்மக்களைக் குறிக்கும் அச்சொல்லின் பன்மை வடிவம் என்றும் கூறுவர். இனுவிட்டு மக்களின் மொழி எசுக்கிமோ-அலூவிட்டு குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.[3].

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. Hessel, pg. 9
  2. "Welcome to the Inuit Circumpolar Council". Inuitcircumpolar.com. 2008-12-05. Retrieved 2011-01-24.
  3. "The Hunters of the Arctic". bambusspiele.de. Retrieved 2008-01-07.

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இனுவிட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனுவிட்டு&oldid=3903568" இலிருந்து மீள்விக்கப்பட்டது