ஆண்டி வைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டி வைன்
பிறப்பு26 ஏப்ரல் 1944 (1944-04-26) (அகவை 79)
சுவான்சீ, வேல்ஸ், ஐக்கிய இராச்சியம்
பிறப்பிடம்இங்கிலாந்து
இசை வடிவங்கள்கிராமிய ராக்
தொழில்(கள்)பாடுதல்
இசைக்கருவி(கள்)கித்தார்
இசைத்துறையில்1960s – தற்போது வரை
இணையதளம்andyvine.com

ஆண்டி வைன் ( Andy Vine ) வான்கூவரைச் சேர்ந்த வெல்ஷ் இனத்தைச் சேர்ந்த கனடாவின் நாட்டுப்புற இசைக்கலைஞர் ஆவார்.

இசைப் பணி[தொகு]

ஆண்டியின் இசை பாணி "கடல் நாட்டுப்புறம் என்றும், பழைய கால ராக் மற்றும் செல்டிக்" என்றும் விவரிக்கப்படுகிறது. [1] இவர் "மேக்கிங் வேவ்ஸ்" என்ற தனது முதல் இசைத் தொகுப்பை 2005 இல் வெளியிட்டார். இந்தத் தொகுப்பின் ஒரு பாடல் ("வுமன் ஆஃப் லாப்ரடோர்") கனடாவின் லாப்ரடோரில் எழுத்தாளாரான எலிசபெத் கவுடியால் ஈர்க்கப்பட்டு கனடாவின் பாடல் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [2] [3] 2007 இல் ஆண்டி "எக்ஸ்க்யூஸ் மீ யுவர் பிளானட் இஸ் பர்னிங்" என்ற பாடலை எழுதினார். ஆண்டி வைன் இப்போது ஓய்வு பெற்று, கனடாவின் கார்டசு தீவில் வசிக்கிறார். அங்கு இவர் உள்ளூர் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இவரது பல பதிவுகளை சவுண்ட்கிளௌட் என்ற ஜெர்மன் இசை நிறுவனத்தில் கேட்கலாம். [4]

குடும்பம்[தொகு]

ஆண்டிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆண்டி விவாகரத்து பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Harvey, Tim (2007-03-29). "Family of Troubadours Coming to Galiano". Archived from the original on 2011-10-01.
  2. Vine, Andy. "Woman of Labrador". Archived from the original on March 3, 2016.
  3. Mullan, Martin (September 2007). "A passion for performing – Local folk musician Andy Vine". The KCC Neighbour: 14. http://www.cedarcottage.org/docs/kccpaper_07_sep.pdf. பார்த்த நாள்: 2009-04-30. 
  4. "House Carpenter". Soundcloud.com. Andy Vine. பார்க்கப்பட்ட நாள் November 21, 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_வைன்&oldid=3903683" இலிருந்து மீள்விக்கப்பட்டது