உள்ளடக்கத்துக்குச் செல்

லிடியா காம்ப்பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிடியா காம்ப்பெல் ( Lydia Campbell ) என்கிற புரூக்ஸ் (நவம்பர் 1, 1818 – ஏப்ரல் 1905 [1] ), ஒரு இனுவிட்டு தாய்க்கும் மற்றும் ஆங்கிலேய தந்தைக்கும் பிறந்தார், [2] ஆரம்பகாலத்தில் கனடாவின் நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ள லாப்ரடோரில் நாட்குறிப்பாளராக இருந்தார். இவர் லாப்ரடோரின் சிறந்த அறியப்பட்ட வரலாற்று நபர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவர். மேலும், அன்புடன் "லிடியா அத்தை" என்று அழைக்கப்படுகிறார். [3]

வாழ்க்கை

[தொகு]

ஹட்சன் பே நிறுவனத்தில் பணிபுரிந்த இங்கிலாந்தைச் சேர்ந்த அம்ப்ரோசு புரூக்சு மற்றும் அவரது இனுவிட்டு மனைவி சூசன் ஆகியோருக்கு பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை தனது வீட்டிலேயே படித்தார். லிடியா இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார்: முதலில் 1834 இல் வில்லியம் அம்ப்ரோஸ் பிளேக்கு என்பவருடன் நடந்த திருமணம் மூலம் இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். பின்னர் டேனியல் கேம்ப்பெல் என்பவருடனான திருமணம் மூலம் எட்டு குழந்தைகள் இருந்தனர்.

நூல் வெளியீடு

[தொகு]

1894 இல், மத குருவான ஆர்தர் சார்லஸ் வாகோர்ன் என்பவரிடம் தனது சுயசரிதையை வெளியிடக் கேட்டுக் கொண்டார். இது செயின்ட் ஜான்ஸ் ஈவினிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையில் ஸ்கெட்சஸ் ஆப் லாப்ரடோர் லைப் என்ற தலைப்பில் வெளிவந்தது.

இவரது பெரிய மருமகள், எலிசபெத் கவுடி, 1973இல் வுமன் ஆஃப் லாப்ரடோர் என்ற நூலை எழுதினார். 2001 இல், இவரது மகன் தாமஸ் எல். பிளேக் (1935 இல் இறந்தார்) என்பவரால் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. [4]

இறப்பு

[தொகு]

லிடியா காம்ப்பெல் தனது 86 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Campbell, Lydia | Inuit Literatures ᐃᓄᐃᑦ ᐊᓪᓚᒍᓯᖏᑦ Littératures inuites". inuit.uqam.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-11-29.
  2. Canadian Women on the Move vol. 2.
  3. Stopp, Marianne (June 27, 2011). "I, old Lydia Campbell": a Labrador Woman of National Historic Significance" (PDF). Memorial University. பார்க்கப்பட்ட நாள் March 29, 2013.
  4. "Blake, Thomas L." International Laboratory for Research on Images of the North, Winter and the Arctic. Université du Québec à Montréal.

மேலும் படிக்க

[தொகு]
  • Lydia Campbell (biography), published by Université du Québec à Montréal
  • Thomas L. Blake (biography), published by Université du Québec à Montréal

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிடியா_காம்ப்பெல்&oldid=3903650" இலிருந்து மீள்விக்கப்பட்டது