உள்ளடக்கத்துக்குச் செல்

எலன் ஜோ காக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ காக்ஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பேட்லி & இசுபென் நாடாளுமன்றத் தொகுதி
பதவியில்
8 மே 2015 – 16 சூன் 2016
முன்னையவர்மைக் வுட்
பின்னவர்வெற்றிடம்
பெரும்பான்மை6,057 (12.00%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எலன் ஜோன் லெட்பீட்டர்

(1974-06-22)22 சூன் 1974
பேட்லி, மேற்கு யார்க்சையர், இங்கிலாந்து
இறப்பு16 சூன் 2016(2016-06-16) (அகவை 41)
பிர்சுடால், மேற்கு யார்க்சையர், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிதொழிற்கட்சி
துணைவர்பிரெண்டன் காக்ஸ்
பிள்ளைகள்2
கல்விஎக்மோண்ட்வைக் கிராம்மர் பள்ளி
முன்னாள் கல்லூரிபெம்பிரோக் கல்லூரி, கேம்பிரிட்ச்
இணையத்தளம்jocox.co.uk

எலன் ஜோன் "ஜோ" காக்ஸ் (Helen Joanne Jo Cox[1] திருமணத்திற்கு முன்பு: லெட்பீட்டர்;[2] 22 சூன் 1974 – 16 சூன் 2016) ஐக்கிய இராச்சியத்தின் தொழிற்கட்சியைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பேட்லி & இசுபென் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 2015 பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கு யார்க்சையரின் பேட்லியில் பிறந்த காக்சு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் 1995இல் பட்டம் பெற்றார். அரசியல் உதவியாளராகவும் பின்னர் பன்னாட்டு மனிதநேய அறக்கட்டளை ஆக்சுபாமில் கொள்கை தலைவராகவும் பணியாற்றினார். 2015இல் பேட்லி & இசுபென் தொகுதியின் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் வுட் போட்டியிட விருப்பமில்லாததால் இவர் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதியை தக்கவைத்துக்கொள்வதில் தொழிற்கட்சிக்கு வெற்றித் தேடித் தந்த காக்சு சிரிய உள்நாட்டுப் போர் தொடர்பான இயக்கங்களில் பங்கெடுத்தார்; சிரியாவிற்கான நாடாளுமன்ற அனைத்துக்கட்சி நண்பர்கள் குழுவை நிறுவினார்.

சூன் 16, 2016 அன்று மேற்கு யார்க்சையரில் பிர்சுடல் என்றவிடத்தில் தனது தொகுதி மக்களின் குறைகேட்புக் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தபோது சுடப்பட்டார்; பல முறை கத்தியால் குத்தப்பட்டார். மோசமான நிலையிலிருந்த அவர் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக 52-அகவை- நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.[4]

இளமையும் கல்வியும்

[தொகு]

இங்கிலாந்தின் யார்க்சையரின் பேட்லியில் சூன் 22, 1974 அன்று பிறந்த காக்சு எக்மாண்ட்வைக்கில் வளர்ந்தார். அவரது அன்னை பள்ளியொன்றில் செயலராகப் பணியாற்றி வந்தார்; தந்தை பற்பசை, முடித்தெளிப்பு ஆலையில் பணிபுரிந்து வந்தார்.[5] எக்மாண்ட்வைக்கில் இருந்த இலக்கணப் பள்ளியில் கல்வியைத் துவங்கினார். பின்னர் கேம்பிரிட்ச்சின் பெம்புரோக் கல்லூரியில் சமூக, அரசியல் கல்வியில் 1995இல் பட்டம் பெற்றார்.[6][7][8][9][10] அவரது குடும்பத்தில் பல்கலைக்கழகம் சென்ற முதல் நபராக காக்சு இருந்தார்.[6] தவிரவும் இலண்டன் பொருளியல் பள்ளியிலும் படித்துள்ளார்.[6]

பணிவாழ்க்கை

[தொகு]

மறைவு

[தொகு]
தாக்குதலின்போது காக்சு உரையாடிய தொகுதி குறைகேட்புக் கூட்டம் நடந்த பிர்சுடல் நூலகம்

சூன் 16, 2016 அன்று பிர்சுடாலில் உள்ள நூலகத்தில் முன்கூட்டியே அறிவித்த மதியம் ஒரு மணிக்கு தொகுதி மக்கள் குறைக் கேட்பு கூட்டமொன்றில் (இங்கிலாந்தில் சர்ஜரி எனபர்) உரையாடிய பிறகு வெளியே வந்த காக்சை முதலில் சுட்டும் பின்னர் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது.[11][12]

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின்படி, அவர் மீது மூன்று முறை சுடப்பட்டது; பலமுறை குத்தப்பட்டது. தாக்குதவதற்கு முன்பாக குற்றவாளி "முதலில் பிரித்தானியா" எனக் கூவியதாகக் கூறப்படுவதை காவல்துறை விசாரித்து வருகின்றது;[11][12][13] குறைந்தது ஒரு நேரில் கண்ட சாட்சி இதனை மறுத்துள்ளார்.[14] இங்கிலாந்தின் வலதுசாரி கட்சியான பிரித்தானியா முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.[15][16]

இந்தத் தாக்குதலுக்கு நான்கு மணி நேரம் கழித்து மேற்கு யார்க்சையர் காவல்துறை காக்சு லீட்சு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவித்தனர்.[12][17] இவ்வாறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வன்முறையால் இறப்பது கடந்த கால்நூற்றாண்டில் இதுவே முதல் முறையாகும்.[18] இதற்கு முன்னர் 1990இல் இயான் கோ ஐரியக் குடியரசுப் படையால் கொலை செய்யப்பட்டார்.[19][20] 2010இல் நாடாளுமன்ற உறுப்பினர் இசுடீபன் டிம்சு ரோஷனாரா சௌத்திரியால் குத்தப்பட்டதை அடுத்து முதல் தீவிரத் தாக்குதலும் இதுவே ஆகும்.[21][22]

காக்சின் கொலைக்கு தொடர்புடையவராக 52 அகவையிலுள்ள நபரொருவரை காவல்துறை கைது செய்துள்ளது.[11][23]

காக்சின் கணவர், பிரெண்டன், "அவரது மரணத்திற்கு காரணமான காழ்ப்புணர்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.[24]

காக்சின் மறைவிற்கு தொழிற்கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பைன் தெரிவித்த இரங்கலில் "வளரும் நாடுகளுக்கு ஆதரவும் மாந்த உரிமைகளை வலிமைப்படுத்தவும் எடுத்த நமது உறுதிமொழிகளை மெய்ப்படுத்த தமது வாழ்நாளை அர்ப்பணித்த" ஒருவராக விவரித்துள்ளார்.[25] ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் "தொகுதி மக்களின் நட்சத்திரமாகவும் நாடாளுமன்றத்தின் அனைவருக்கும் நட்சத்திரமாகவும்" விளங்கியதாக இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.[26]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "No. 61230". இலண்டன் கசெட். 18 May 2015.
  2. Carr, Tim; Dale, Iain; Waller, Robert (18 May 2015). The Politicos Guide to the New House of Commons 2015: Profiles of the New MPs and Analysis of the 2015 General Election Results (in ஆங்கிலம்). Biteback Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781849549240.
  3. "Batley & Spen Parliamentary constituency". BBC News. http://www.bbc.co.uk/news/politics/constituencies/E14000548. பார்த்த நாள்: 7 May 2015. 
  4. "Jo Cox MP dead after shooting attack". BBC News. 16 June 2016. http://www.bbc.co.uk/news/uk-england-36550304. பார்த்த நாள்: 16 June 2016. 
  5. "Jo Cox profile: The Yorkshire lass who achieved her 'dream' of representing her hometown in Westminster". The Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/2016/06/16/jo-cox-the-yorkshire-lass-who-achieved-her-dream-of-representing/. பார்த்த நாள்: 16 June 2016. 
  6. 6.0 6.1 6.2 "Jo Cox obituary: Proud Yorkshire lass who became local MP". BBC News. 16 June 2016. http://www.bbc.co.uk/news/uk-politics-36550919. பார்த்த நாள்: 16 June 2016. 
  7. ‘COX, Helen Joanne, (Jo)’, Who's Who 2016, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2016
  8. Martin, Shaw (12 May 2014). "Women's campaigner Jo Cox chosen as Labour candidate to fight next General Election in Batley & Spen". Huddersfield Daily Examiner இம் மூலத்தில் இருந்து 8 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160508155213/http://www.examiner.co.uk/news/west-yorkshire-news/womens-campaigner-jo-cox-chosen-7103901. 
  9. "Jo Cox". The Labour Party. பார்க்கப்பட்ட நாள் 8 October 2015.
  10. "'I've been in some horrific situations' – MP". Yorkshire Post. 26 December 2015 இம் மூலத்தில் இருந்து 16 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160616150150/http://www.yorkshirepost.co.uk/news/i-ve-been-in-some-horrific-situations-mp-1-7642788. பார்த்த நாள்: 1 June 2016. 
  11. 11.0 11.1 11.2 Boyle, Danny (16 June 2016). "Labour MP Jo Cox dies after being shot and stabbed in her constituency near Leeds". The Telegraph. http://www.telegraph.co.uk/news/2016/06/16/labour-mp-jo-cox-shot-in-leeds-witnesses-report/. பார்த்த நாள்: 16 June 2016. 
  12. 12.0 12.1 12.2 Booth, Robert; Dodd, Vikram; Parveen, Nazia (16 June 2016). "Labour MP Jo Cox has died after being shot and stabbed". The Guardian. https://www.theguardian.com/uk-news/2016/jun/16/labour-mp-jo-cox-shot-in-west-yorkshire. பார்த்த நாள்: 16 June 2016. 
  13. Kate Allen, Henry Mance & Andrew Bounds (16 June 2016). "British MP Jo Cox shot and killed". Financial Times. https://next.ft.com/content/53ac09fe-33c3-11e6-ad39-3fee5ffe5b5b. பார்த்த நாள்: 16 June 2016. (subscription required)
  14. "'Jo Cox Witness says he never heard "Britain First"'". Youtube. 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  15. Hartley-Parkinson, Richard (16 June 2016). "MP Jo Cox shot outside Birstall library by man shouting 'Britain First'". Metro. http://metro.co.uk/2016/06/16/batley-and-spen-mp-shot-in-birstall-5948867/. பார்த்த நாள்: 16 June 2016. "Britain First obviously is NOT involved and would never encourage behaviour of this sort." 
  16. Boyle, Danny (16 June 2016). "Britain First party leader 'just as shocked as everyone else'". The Telegraph. http://www.telegraph.co.uk/news/2016/06/16/labour-mp-jo-cox-shot-in-leeds-witnesses-report/#update-20160616-1617. பார்த்த நாள்: 16 June 2016. "Jo Cox is obviously an MP campaigning to keep Britain in the EU so if it was shouted by the attacker it could have been a slogan rather than a reference to our party - we just don't know." 
  17. "Jo Cox MP dead after shooting attack". BBC News. 16 June 2016. http://www.bbc.co.uk/news/uk-england-36550304. பார்த்த நாள்: 16 June 2016. 
  18. Boyle, Danny; Akkoc, Raziye (17 June 2016). "Labour MP Jo Cox dies after being shot and stabbed as husband urges people to 'fight against the hate' that killed her". The Daily Telegraph. http://www.telegraph.co.uk/news/2016/06/16/labour-mp-jo-cox-shot-in-leeds-witnesses-report/. பார்த்த நாள்: 17 June 2016. 
  19. Calamur, Krishnadev; Vasilogambros, Matt (16 June 2016). "The Attack on a British MP". The Atlantic. http://www.theatlantic.com/news/archive/2016/06/uk-mp-jo-cox-attacked/487316/. பார்த்த நாள்: 16 June 2016. "As our colleague Matt Ford notes, Cox is the first MP to be assassinated in office since Ian Gow, a Conservative lawmaker who was killed in a car bombing by the Irish Republican Army in 1990." 
  20. Rentoul, John (16 June 2016). "Jo Cox Dead: A History of violence against MPs". Independent. http://www.independent.co.uk/news/uk/politics/jo-cox-dies-mp-politicians-attacks-violence-jo-cox-spencer-perceval-a7085911.html. பார்த்த நாள்: 16 June 2016. 
  21. Siddique, Haroon (16 June 2016). "Attack on Jo Cox is only the latest serious assault against an MP". The Guardian. https://www.theguardian.com/uk-news/2016/jun/16/jo-cox-attack-latest-serious-assault-mps. பார்த்த நாள்: 16 June 2016. 
  22. Nicks, Denver (16 June 2016). "Assassinated British MP Was a Vocal Humanitarian". Time. http://time.com/4371661/jo-cox-british-mp-attack-brexit/. பார்த்த நாள்: 16 June 2016. 
  23. Withnall, Adam (16 June 2016). "Jo Cox shot: Man arrested after Labour MP shot and stabbed in Birstall, West Yorkshire - latest updates". Independent இம் மூலத்தில் இருந்து 2 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170802083018/http://www.independent.co.uk/news/uk/crime/jo-cox-shot-live-latest-news-updates-birstall-shooting-stabbing-labour-mp-west-yorkshire-a7085561.html. பார்த்த நாள்: 16 June 2016. 
  24. "Jo Cox death: Husband leads tributes to shot MP". BBC News (BBC). 16 June 2016. http://www.bbc.co.uk/news/uk-england-leeds-36553308. பார்த்த நாள்: 16 June 2016. 
  25. John, Tara. "Tributes Pour In for Jo Cox Following British MP's Death". Time. http://time.com/4371826/jo-cox-british-mp-tributes/. பார்த்த நாள்: 16 June 2016. 
  26. "Jo Cox MP: 'We've lost a bright star' says Cameron". BBC News. http://www.bbc.co.uk/news/uk-36552678. பார்த்த நாள்: 16 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_ஜோ_காக்சு&oldid=3858717" இலிருந்து மீள்விக்கப்பட்டது