எம். வைத்தியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வைத்தியநாதன்
M. Vaithianathan
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மார்ச்சு 2021
தொகுதிஇலாசுபேட்டை
பதவியில்
2011–2016
முன்னையவர்எம். ஓ. எச். எப். சாச்சகான்
பின்னவர்வி. பொ. சிவக்கொழுந்து
தொகுதிஇலாசுபேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (12 மார்ச்சு 2021-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
சுயெச்சை (2016-12 மார்ச்சு 2021)

எம். வைத்தியநாதன் (M. Vaithianathan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இலாசுபேட்டை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு புதுச்சேரி சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராக உள்ளார். முன்னதாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய என்ஆர் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு 10189 வாக்குகள் பெற்று 5432 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசு கட்சியின் வி.பி.சிவக்கொழுந்துவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[1] 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, இவருக்கு அகில இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது.[2][3] பின்னர் இவர் சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால் வி.பி.சிவக்கொழுந்துவிடம் தோல்வியடைந்து வாக்கு எண்ணிக்கையில் தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[4] 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வைத்தியநாதன் காங்கிரசு கட்சியில் இணைந்து மீண்டும் இலாசுபேட் டை தொகுதியில் போட்டியிட்டார், இந்த முறை புதுச்சேரி மாநில பாரதிய சனதா கட்சித் தலைவர் வி.சாமிநாதனை 5701 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2016 Election Results- Lawspet Constituency".
  2. "Vaithianathan unwilling to cede Lawspet constituency". The Hindu. 23 March 2016. https://www.thehindu.com/elections/puducherry2016/vaithianathan-unwilling-to-cede-lawspet-constituency/article8387853.ece. பார்த்த நாள்: 6 June 2020. 
  3. Prasad, S. (3 May 2016). "Lawspet set to witness intense battle - The Hindu". https://www.thehindu.com/news/cities/puducherry/lawspet-set-to-witness-intense-battle/article8550001.ece. 
  4. "Pondicherry Assembly Election Results in 2016".
  5. "Lawspet Election Result 2021 Live Updates:M Vaithianathan of INC Wins" (in en). www.news18.com. 2 May 2021. https://www.news18.com/news/politics/lawspet-election-result-2021-live-updates-lawspet-winner-loser-leading-trailing-mla-margin-3697049.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வைத்தியநாதன்&oldid=3823688" இலிருந்து மீள்விக்கப்பட்டது