எம். கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். கந்தசாமி (பிறப்பு 15 சூலை 1934) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் குளித்தலையினைச் சார்ந்த இவர் குளித்தலையிலுள்ள வாரியப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியிலும் கல்லூரிக் கல்வியினையும் பயின்றுள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குளித்தலை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக, 1967, மற்றும் 1971 ஆகிய ஆண்டுகள் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கந்தசாமி&oldid=3545806" இலிருந்து மீள்விக்கப்பட்டது