எம். ஏ. பேபி
எம்.ஏ. பேபி M. A. Baby | |
---|---|
எம்.ஏ. பேபி | |
பொதுவுடைமைக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 ஏப்ரல் 2015 | |
சட்டப் பேரவை | |
பதவியில் 2006–2016 | |
முன்னையவர் | கடவூர் சிவதாசன் |
பின்னவர் | ஜெ. மெர்சிகுட்டி அம்மா |
தொகுதி | குந்தாரா |
கல்வி அமைச்சர், கேரளா | |
பதவியில் 2006–2011 | |
முன்னையவர் | ஈ. டி. மொகமது பஷீர் |
பின்னவர் | பி.கே. அப்து ராப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஏப்ரல் 1954 |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | பெட்டி இலூயிசு |
இணையத்தளம் | http://www.cpim.org/leadership |
மரியம் அலெக்சாண்டர் பேபி ('Mariam Alexander Baby) ஓர் இந்திய அரசியல்வாதியும் கேரளாவைச் சேர்ந்த இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினரும் ஆவார். [1] 2012 ஆம் ஆண்டு கேரளாவின் கோழிக்கோட்டில் நடைபெற்ற 20 ஆவது பொதுக் கூட்டத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] .
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பி.எம். அலெக்சாண்டர் மற்றும் லில்லி அலெக்சாண்டர் தம்பதியருக்கு ஏப்ரல் 5, 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பிராக்குளத்தில் மரியம் அலெக்சாண்டர் பேபி பிறந்தார். பிராக்குளம் கீழ்நிலைப் பள்ளியிலும், பிராக்குளம் என்எசுஎசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் தான் அரசியலில் முதன்முதலில் அறிமுகமானார். அடிப்படைப் பள்ளிப் படிப்பை முடித்த பேபி, மேல் படிப்புக்காக கொல்லம் எசு.என் கல்லூரிக்குச் சென்றார். பின்னர், இக்கல்லூரியிலேயே அரசியல் அறிவியலில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார், ஆனால் அவசர காலத்தின் போது சிறையில் இருந்ததால் இவரால் இறுதியாண்டு தேர்வு எழுத முடியவில்லை. [1]
பேபி பெட்டி லூயிசை மணந்தார் இவர்களுக்கு அசோக் பெட்டி நெல்சன் என்ற மகன் உள்ளார். [1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]எம்.ஏ பேபி பிராக்குளத்தில் உள்ள என்எசுஎசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது , இந்திய மாணவர் கூட்டமைப்புக்கு முன்னோடியாக இருந்த கேரள மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார். இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய சனநாயக இளைஞர் கூட்டமைப்பு, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) ஆகியவற்றில் பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார். தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராக உள்ளார். [1] 2006-2011 காலகட்டத்தில் கேரளாவில் கல்வி அமைச்சராக இருந்தார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் புரட்சிகர சோசலிசக் கட்சியின் என்.கே.பிரேமச்சந்திரனை எதிர்த்து கொல்லத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "KERALA NIYAMASABHA - M.A.BABY". State of Kerala (in ஆங்கிலம்). Archived from the original on 2017-12-18. பார்க்கப்பட்ட நாள் 2017-12-18.
- ↑ "Leadership". Communist Party of India (Marxist) (in ஆங்கிலம்). Archived from the original on 2017-12-18. பார்க்கப்பட்ட நாள் 2017-08-19.
புற இணைப்புகள்
[தொகு]- Website பரணிடப்பட்டது 2023-01-10 at the வந்தவழி இயந்திரம்