உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எசு. பாசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம். எஸ். பாஸ்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம். எஸ். பாஸ்கர்
தர்மதுரையில் பாஸ்கர்
பிறப்புமுத்துப்பேட்டை சோமையா பாஸ்கர்
13 செப்டம்பர் 1957 (1957-09-13) (அகவை 68)
காடம்பாடி, மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987– நடப்பு
பெற்றோர்தந்தை : சோமையா தேவர்
தாயார் : சத்யபாமா
வாழ்க்கைத்
துணை
சீலா
பிள்ளைகள்2

முத்துப்பேட்டை சோமையா தேவர் பாசுகர் (M. S. Bhaskar) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவர் 1987-ஆம் ஆண்டு கதாசிரியரும், நடிகருமான விசுவின் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.[1][2]

துவக்க கால வாழ்கை

[தொகு]

இவர் அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் தற்போதைய திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடைச் சேர்ந்த சோமையா தேவர்–சத்யபாமா இணையரின் மகனாவார். இவரின் தந்தை சோமையா தேவர் அக்காலகட்டத்திலே பெரும் நிலக்கிழார் (ஜமீன்தார்) ஆவார். பாஸ்கர் நாகப்பட்டினம் அருகே உள்ள காடம்பாடியில் பிறந்து, அங்கேயே வளர்ந்தார். காடம்பாடியில் உள்ள தேசிய பள்ளியில் ஒன்பதாம் வகுப்புவரை படித்தார்.[3]

அக்காலகட்டத்தில் காடம்பாடிக்கு டி. கே. சண்முகம் குழுவினரின் நடகக் குழு நாடகம்போட வந்தது. டி. கே. சண்முகத்திற்கு சோமையா நன்கு பழக்கமானவர். அவர்கள் இராசராச சோழன் நடகத்தை போடும்போது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டிய நடிகை வரவில்லை. அப்போது பாஸ்கரின் அக்காள் ஹேமமாலினியை நடிக்கவைக்க முடிவு செய்தனர். காலையில் கொடுக்கபட்ட வசனங்களை மாலைக்குள் நன்கு மனப்பாடம் செய்து மாலை நடந்த நாடகத்தில் நன்கு நடித்து பாராட்டுகளைப் பெற்றார். இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டு நீங்கள் இங்கு இருப்பதைவிட சென்னைக்கு வருவது நல்லது என்று டி. கே. சண்முகம் சொன்னதன் பேரில் பாஸ்கரின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. கோபாலபுரம் பள்ளியில் தன் எஞ்சிய பள்ளிப்படிப்பை பாஸ்கர் முடித்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி, பி.காம் படித்தார்.

இவரின் முத்த அக்காள்கள் ஹேமாமாலினி சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தார். அப்போது அறிமுகமான செந்தாமரை ஹேமாமாலினியின் குரல் இனிமையைக் கேட்டு திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுக்க ஊக்குவித்தார். மேலும் சிட்டுக்குருவி படத்தில் பின்னணிக் குரல்கொடுக்க வாய்ப்பைப் பெற்றுத்தந்தார். பின்னர் சில்க் ஸ்மிதாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்து புகழ்பெற்றார். பாஸ்கரின் இரண்டாவது அக்கா தாரா வட இந்தியத் திரையில் மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராக உள்ளனர்.

நடிப்பு வாழ்கை

[தொகு]

அக்காள் ஹேமாமாலினி பின்னணிக் குரல் கொடுக்கச் செல்லும்போது அவருக்குத் துணையாக பாஸ்கரும் சென்று வருவார். அப்போது ஒருநாள் வழக்கமாக வரும் பின்னணிக் குரல் கலைஞர் வராத காரணத்தால் சிட்டுக்குருவி படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பை பாஸ்கர் பெற்றார்.

இவரின் தந்தை சோமையா தேவர் அப்போது அரசியல் செல்வாக்கு பெற்று இருந்ததால் அன்றைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களும், அரசியல் தலைவர்களுமான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் நட்பு வட்டாரத்தில் இருந்தார். அதை பார்த்து பழகிய மகன் பாஸ்கர் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது தீராத காதல் கொண்டு அவரை போல் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வர வேண்டும் என்று எண்ணத்தையும் பின்னாளில் 1980 காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் மீதான நடிப்பின் தாக்கமும் இவரை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்தது என கூறப்படுகிறது.

இவர் பின்னாளில் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி ஆகியவற்றால் பரவலாக அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[4] இவர் 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படங்கள்
இவர் நடித்த திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1987திருமதி ஒரு வெகுமதிகிருஷ்ணனுடன் படிக்கும் கல்லூரி மாணவர்
மக்கள் என் பக்கம்
காவலன் அவன் கோவலன்
1989அண்ணனுக்கு ஜே
1990சேலம் விஷ்ணுபேராசிரியர்
வேடிக்கை என் வாடிக்கை
1991ஞான பறவை
1992காவல் கீதம்பணப்பைத் திருடர்
முதல் குரல்
2001டும் டும் டும்மருத்துவர்
கோட்டை மாரியம்மன்போக்குவரத்துக் காவலர்
2002கன்னத்தில் முத்தமிட்டால்சங்கரலிங்கம்
தமிழன்நடத்துநர் கணேசன்
இவன்மீனா குமாரியின் தந்தை
ஜங்சன்சிவலிங்கம்
யுனிவர்சிட்டி
முத்தம்மாயா
2003மிலிட்டரிமுத்து
அன்பே அன்பேஇரம்யாவின் தந்தை
ஆஹா எத்தனை அழகு
இளசு புதுசு ரவுசுதீபக்கின் தந்தை
ரகசியமாய்
2004எங்கள் அண்ணாமணி
மச்சி
அழகிய தீயேஅண்ணாச்சி
கஜேந்திரா
போஸ்வெடிமுத்து
நெறஞ்ச மனசுநரியன்
அட்டகாசம்பாலியல் மருத்துவர்
2005திருப்பாச்சிதரகர்
சுக்ரன்நகைச்சுவை காவல் ஆய்வாளர்
அமுதேடுடு
நீயே நிஜம்பாதுகாலர்
சின்னா
சிவகாசி'வக்கீல்' வெங்கி
சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சிஅழகுசுந்தரம்
2006இதயத்திருடன்
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறதுமேலாளர்
திருப்பதிபி.ஏ. பிரம்மா
கேடிரகுவின் தந்தை
இளவட்டம்ஆசிரியர்
தர்மபுரிசண்முகம்
வரலாறுமனநலம் பாதிக்கப்பட்டவர்
2007வீராசாமிவழக்கறிஞர்
மொழிஞானப்பிரகாசம்
சிவாஜிP.S to chief secretary
கிரீடம்காவலர்
இனிமே நாங்கதான்விச்சு
திருத்தம்புண்ணியகோடி
அழகிய தமிழ்மகன்பயிற்சியாளர்
மச்சக்காரன்காவல் அதிகாரி
2008பழனி
பிரிவோம் சந்திப்போம்ஆறுமுகம்
சாது மிரண்டா- - -
அஞ்சாதேலோகநாதன்
வெள்ளித்திரைஇராம் கோபால் சர்மா
சந்தோஷ் சுப்பிரமணியம்கோத்த பெருமாள் (சருக்கு மரம்)
அறை எண் 305ல் கடவுள்சொட்டைகருவாபையா குட்டி மாடசாமி
இயக்கம்முத்துகுட்டி
அழைப்பிதழ்
தசாவதாரம்பிராடுவே குமார்
சுட்ட பழம்குமாரசாமி
குசேலன்குப்புசாமியின் உதவியாளர்
தனம்
சரோஜா
தீயவன்வேலு
திண்டுக்கல் சாரதிகவிஞர் - - -
பஞ்சாமிர்தம்திருப்பதி
2009காதல்னா சும்மா இல்லை
இன்னொருவன்வாலி
நாளை நமதேடிஜிபி புல்லையா
குரு என் ஆளுகோபால்
தோரணைதமிழரசனின் உதவியாளர்
மஞ்சள் வெயில்
மாசிலாமணி'கோமா' இராமசாமி
சிரித்தால் ரசிப்பேன்பூபதி பாண்டியன்
ஈசாதுரைசாமி
உன்னைப்போல் ஒருவன்பங்கசக்சா
சூரியன் சட்டக் கல்லூரிசாமா ஐயர்
2010தமிழ் படம்நகுல்
தம்பிக்கு இந்ம ஊரு
வீரசேகரன்
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்ஆத்திரிகேசா
கொல கொலயா முந்திரிக்காசந்தானம்
மதராசபட்டினம்வேங்கய்யப்பன்
இரண்டு முகம்
2011காவலன்சக்கரன்
பயணம் இருமொழித் திரைப்படம்
தம்பிக்கோட்டைவளையப்பட்டி
எத்தன்சுவாமி
தெய்வத்திருமகள்மூர்த்தி
மார்கண்டேயன்
புலிவேசம்செந்தில்
வேலாயுதம்வைதேகியின் தந்தை
2012ஒத்த வீடு
கொஞ்சும் மைனாக்களே
கிருஷ்ணவேணி பஞ்சாலை
தாண்டவம்தம்பி மாமா
திருத்தணிகண்ணாயிரம்
புதுமுகங்கள் தேவை
2013சந்தமாமாகிருஷ்ணமூர்த்தி
கருப்பம்பட்டிடான் சுடான்லி
சூது கவ்வும்ஞானோதயம்
நாகராஜ சோழன்கோத்த பெருமாள்
தீக்குளிக்கும் பச்சைமரம்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராபூச்சாண்டி
ரகளபுரம்வின்சென்ட்
சுட்ட கதைஒட்டகம்
ஆல் இன் ஆல் அழகு ராஜாதில்லானா திவ்யநாதன்
2014நேர் எதிர்நீராவி
நினைத்தது யாரோசிறப்புத் தோற்றம்
நினைவில் நின்றவள்
காதல் சொல்ல ஆசைஅஞ்சலியின் தந்தை
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
அரிமா நம்பிஎஸ். ஐ. ஆறுமுகம்
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
நீ நான் நிழல்தம்பியண்ணன்
குரு
மொசக்குட்டிமலயாளி
13 ஆம் பக்கம் பார்க்க
அழகிய பாண்டிபுரம்பாம்புக்குட்டி
வெள்ளக்கார துரைதஞ்சாவூர் மகாதேவன்
2015இவனுக்கு தண்ணில கண்டம்பொன்வண்டு
வை ராஜா வைகார்த்திக்கின் மாமா
உத்தம வில்லன்சோக்கு செட்டியார்
இந்தியா பாகிஸ்தான்மருதமுத்து
36 வயதினிலேசுடீபன்
டிமான்ட்டி காலணிசாமிநாதன்
விந்தைதமிழாய்ந்த நல்லோன்
திகர்தீப்பொறி தங்கப்பன்
காவல்குணசேகரன்
மூணே மூணு வார்த்தைஇராமன் இருமொழித் திரைப்படம்
பாபநாசம்சுளைமான் பாய்
ஆவி குமார்வெரி குட் சிவாசு
சவாலே சமாளிஇளங்கோ
யட்சன்
அபூர்வ மகான்
உப்பு கருவாடுநெய்தல் ஜெயராமன்
தங்கமகன்பிரகாஷ் குமாரின் உதவியாளர்
2016பெங்களூர் நாட்கள்கண்ணனின் தந்தை
சாகசம்சதானந்தம்
நையப்புடைசத்தியமூர்த்தி
நட்பதிகாரம் 79மகாவின் தந்தை
நாரதன்பாஸ்கர்
உன்னோடு கமாசுட்டர்
க க க போ(எகிப்திய கடவுள்)
வெள்ளிக்கிழமை 13ஆம் தேதிசரவணனின் நண்பர்
தர்மதுரைபரமன்
காகிதக் கப்பல்இரணகுப்தா
மீன் குழம்பும் மண் பானையும்டான்
கடவுள் இருக்கான் குமாருமைக்கேல் ஆசிர்வாதம்
கண்ணுல காச காட்டப்பாசின்னபையன்
மணல் கயிறு 2சோதிடர்
2017யாக்கைகதிரின் தந்தை
வைகை எக்ஸ்பிரஸ்கிங் கேசவன்
8 தோட்டாக்கள்கிருஷ்ணமூர்த்தி
பிருந்தாவனம்இலூயிசு
7 நாட்கள்பாஸ்கர்
மரகத நாணயம்பாண்டுரங்கன்
பீச்சாங்கைதமிழ்மகன்
சதுர அடி 3500சான் பீட்டர்
பணம் பதினொன்னும் செய்யும்காளிமுத்து
இப்படை வெல்லும்எஸ். தில்லைராஜன்
குரு உச்சத்துல இருக்காருஉத்தமன்
இந்திரஜித்சலீம்
திருட்டுப்பயலே 2
12-12-1950குமுதவள்ளியின் தந்தை
2018நிமிர்சதா
கேணி
சில சமயங்களில்இராகவன்
செம போத ஆகாதேகுஞ்சுண்ணி
தளரிமாரி
நோட்டாபாய்
காயங்குளம் கொச்சுண்ணிமுதலாளி மலையாளத் திரைப்படம்
காற்றின் மொழிநீலகண்டன்
பட்டினப்பாக்கம்தீ தங்கவேல்
உத்தரவு மகாராஜாஇரவியின் தந்தை
துப்பாக்கி முனைஉய்யா
2019திருமணம்அருணாசலம்
அக்னி தேவிமணிமாறன்
குப்பத்து ராஜாஊர் நியாயம்
ஐயகோவெங்கட்ராமன்
ஏ1சரவணனின் தந்தை
கழுகு 2மாரி
பக்ரீத்வெட்டேரி நரியன் விருந்தினர் தோற்றம்
2020அசுவதம்மாமனோச்சின் தாத்தா தெலுங்குத் திரைப்படம்
ஓ மை கடவுளேஅனுவின் தந்தை
குட்டி தேவதை
புத்தம் புது காலைதாத்தா
2021மாறாஉசுமான் பாய்
சுல்தான்வழக்கறிஞர்
வணக்கம்டா மாப்ளகவுன்சிலர் புண்ணியகோட்டி
மலேசியா டூ அம்னீசியாமன்னார்குடி நாராயணன்
இருவர் உள்ளம்கார்த்திக்கின் மாமா
பிரண்ட்ஷிப்வழக்கறிஞர் சாணக்கியன்
பேய் மாமாசபாபதி
ஜெய் பீம்வழக்கறிஞர் சங்கரன்
[[சபாபதி (2021 திரைப்படம்)|]சபாபதி]கணபதி
பிளான் பண்ணி பண்ணனும்கேப்டன் கந்தசாமி / வழுக்கை கந்தசாமி (விகேஎஸ்)
மதுரை மணிகுறவரன்மணியின் மாமா
2022எதற்கும் துணிந்தவன்கருப்பையா
டாணாக்காரன்செல்லகண்ணு
பேட்டரிபுகழின் தாத்தா
ஓகே ஓக ஜீவிதம்வண்டி ஓட்டுநர்
2023கொடைஞானம்
குற்றம் புரிந்தால்ஜீவாவின் மாமா
எறும்புஆறுமுகம்
லாக்டவுன் டையரி
ரெட் சேண்டல்வுட்
த ரோடுசுப்பிரமணி
பார்க்கிங்இளம்பரிதி
பாட்டி சொல்லைத் தட்டாதேசக்தியின் தந்தை
மதிமாறன்சுந்தரம்
2024வடக்குப்பட்டி ராமசாமிமுனுசாமி
வெப்பம் குளிர் மழைதிரி ஐயா
பூமர் அங்கிள்சிறப்புத் தோற்றம்
டபுள் டக்கர்பிரம்மானந்தம்
ஒரு தவறு செய்தால்பரமேசுவரன்
ஒரு நொடிசேகரன்
அக்கரன்வீரபாண்டி
சாமானியன்மூக்கையா
போட்முத்தையா
ரகு தாத்தாரகோத்தமன்
பிரதர்புயூனிக்சு புஷ்பராஜா
எமக்கு தொழில் ரொமான்ஸ் daggerஅறிவிக்கப்படும்[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Talent bides its time". The Hindu. 13 November 2009. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/talent-bides-its-time/article3022151.ece.
  2. Suganth, M.. "There's no spontaneity in acting; every actor needs to do homework". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Theres-no-spontaneity-in-acting-every-actor-needs-to-do-homework/articleshow/48508566.cms.
  3. முதல் சம்பளம்... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1, எம். எஸ். பாஸ்கர், இந்து தமிழ் திசை, 6 அக்டோபர் 2025
  4. "The Hindu : Cinema Plus / Cinema : Talent bides its time". web.archive.org. 2009-12-03. Archived from the original on 2009-12-03. Retrieved 2022-09-22.
  5. "Ashok Selvan's Emakku Thozhil Romance To Release On This Date!". Times Now (in ஆங்கிலம்). 2024-10-11. Retrieved 2024-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எசு._பாசுகர்&oldid=4443854" இலிருந்து மீள்விக்கப்பட்டது