சிவகாசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகாசி
இயக்கம்பேரரசு
தயாரிப்புஏ.எம். ரத்னம்
கதைபேரரசு
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புவிஜய்
அசின்
பிரகாஷ் ராஜ்
கீதா
நயன்தாரா (சிறப்புத்தோற்றம்)
வையாபுரி
சிட்டி பாபு
எம். எசு. பாசுகர்
வெளியீடு2005
ஓட்டம்163 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூபா 10 கோடி($ 2.2 மில்லியன்)

சிவகாசி (Sivakasi) ஆம் ஆண்டு வெளிவந்த 2005 தமிழ்த் திரைப்படமாகும்.பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,அசின்,பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

மசாலாப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தங்கை மீது பாசம் உள்ளவரகாத் திகழும் சிவகாசி (விஜய்) தனது சிறுவயதிலேயே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே குடித்தனம் நடத்துகின்றார் சிவகாசி.ஒரு உணவு விடுதியை நடத்திவரும் சிவகாசி அங்கு வரும் ஹேமாவா விரும்பப்படுகின்றார்.எவ்வளவு எடுத்துக் கூறியும் ஹேமா தன் மனதை மாற்றிக்கொள்ளாது சிவகாசியுடனே தங்கியும் இருக்கின்றார்.பின்னர் தனது குடும்பக் கதையினை ஹேமாவிற்குக் கூறும் சிவகாசி தனது தங்கையினைப் பார்ப்பதற்காக ஹேமாவின் விருப்பத்தின்படி தங்கை வாழும் ஊருக்குச் செல்கின்றார்.அங்கு தனது தங்கையின் குடும்பம் சிவகாசியின் அண்ணனான உடயப்பாவினால் (பிரகாஷ் ராஜ்) நடுத்தெருவுக்குக் கொண்டுவரப்படுவதை அறியும் சிவகாசி தான் யார் என்பதன் உண்மையினை தெரிவிக்காத வண்ணம் அண்ணன் உடயப்பாவிடமிருந்து பல விடயங்களை அரங்கேற்றுகின்றார் சிவகாசி.இறுதியில் தன் அண்ணனுக்குப் போட்டியாக அரசியலில் போட்டியிடும் சிவகாசி அத்தேர்தலில் வெற்றியும் பெறுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துணுக்குகள்[தொகு]

  • ஆர்காட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி வக்கீல்களினைப் பற்றி தவறாகத் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதனால் நடிகர் விஜயை கைது செய்வதற்காக ஜூன் 10 2006 அன்று தீர்மாண்ம் கொண்டு வரப்பட்டது.மேலும் பல வக்கீல்கள் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து அவரது உருவப் பொம்மையினை எரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாசி_(திரைப்படம்)&oldid=3403059" இருந்து மீள்விக்கப்பட்டது