உள்ளடக்கத்துக்குச் செல்

சின்ன பாப்பா பெரிய பாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சின்னப் பாப்பா பெரியப் பாப்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சின்ன பாப்பா பெரிய பாப்பா
வகைநகைச்சுவை
எழுத்துராதிகா சரத்குமார் (1)
ராடான் மீடியாவொர்க்ஸ் (2-3)
வசனம்
கோபிநாத் (1-3)
திரைக்கதைஎஸ். என். சக்திவேல் (1)
கோபிநாத் (1-3)
இயக்கம்எஸ். என். சக்திவேல் (1)
சுகி மூர்த்தி
எம். ஏ. மணி (3)
படைப்பு இயக்குனர்ராதிகா சரத்குமார்
நடிப்பு
முகப்பு இசைதினா (1)
விஜய் ஆண்டனி (2-3)
முகப்பிசை"சின்ன பாப்பா பெரிய பாப்பா"
(பாடியவர்)
புஷ்பவனம் குப்புசாமி (1-2)
விஜய் ஆண்டனி (2-3)
காதல் மதி (பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்
  • 3
  • பருவம் 1 (அத்தியாயங்கள்: 65)
  • பருவம் 2 (அத்தியாயங்கள்: 218)
  • பருவம் 3 (அத்தியாயங்கள்: 174)
  • மொத்தம்: 455
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராதிகா சரத்குமார்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஒளிப்பதிவுபி.தர்மா
தொகுப்புகே.சத்தியபாலன் (3)
வி.முத்துகிருஷ்ணன் (3)
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தோராயமாக அங்கம் ஒன்று 45–50 நிமிடங்கள் (18.04.2015-25.06.2016)
தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
(02.07.2016-05.05.2018)
தயாரிப்பு நிறுவனங்கள்ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்(பருவம் 3)
15 நவம்பர் 2014 (2014-11-15) –
5 மே 2018 (2018-05-05)

சின்ன பாப்பா பெரிய பாப்பா என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புகழ் பெற்ற நகைச்சுவைத் தொடராகும். இந்த தொடர் 1994 ஆம் ஆண்டு 'டிடி மெட்ரோ' என்ற ஹிந்தி மொழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'து து மெயின் மெயின்' என்ற தொடரை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இது மாமியார் மருமகள் சண்டை சம்பந்தமான நகைச்சுவைத் தொடராகும். இந்த தொடரை ராடன் மீடியா நிறுவனம் சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார்.[1]

இந்த தொடர்களை இயக்குனர்கள் எஸ். என். சக்திவேல் மற்றும் சுகி மூர்த்தி போன்றவர்களை இயக்க, சிறீபிரியா, நளினி, நிரோஷா, தேவதர்சினி, எம். எசு. பாசுகர், சீமா, மோகன் ராமன், ஜாங்கிரி மதுமிதா, கல்பனா மற்றும் வி. ஜே. சித்ரா போன்ற பல தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த தொடர் ஐந்து பகுதிகளாக வார நாட்களில் ஒளிபரப்பாகி மொத்தம் 453 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

இத்தொடரில் சிறீபிரியா (1-2), கல்பனா (2), சீமா (3), நளினி (4-5) போன்றோர் சின்ன பாப்பாவாகவும் (மாமியார்), நிரோஷா (1-2), பல்லவி மேனன் (3), தேவதர்சினி (4), வி. ஜே. சித்ரா (5) போன்றோர் பெரிய பாப்பாவாகவும் (மருமகள்) மற்றும் எம். எசு. பாசுகர் பட்டாபியாகவும் நடித்துள்ளார்கள்.

இந்த தொடரின் ஐந்தாம் பகுதி நவம்பர் 15, 2014ஆம் ஆண்டு முதல் மே 5, 2018 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரில் சின்னபாப்பாவாக நளினியும் பெரியப்பாவாக சித்ராவும் கனகா என்ற புது புது காதபத்திராமாக நடிகை நிரோஷாவும் அவரின் மகளாக பப்பு என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர்.

கதாபாத்திரங்கள்

[தொகு]

சின்னப்பாப்பா

[தொகு]
  • திமிர் மற்றும் பணத்தாசை பிடித்த மாமியார். குடும்பத்தையே அடக்கி ஆழ நினைப்பவள். வாசு தேவனின் மனைவி ஹரிஷின் தாய் மற்றும் பெரியப்பப்பாவின் மாமியார்.
    • சிறீபிரியா - பருவம் 1 (அத்தியாயங்கள்: 1-65), பருவம் 2 (அத்தியாயங்கள்: 1-51)
    • கல்பனா - பருவம் 2(அத்தியாயங்கள்: 52-104)
  • பழனியின் மூத்த மனைவி, சித்தமபுரத்தின் தாய்.
    • சீமா - பருவம் 2 (அத்தியாயங்கள்: 105-160)
  • பழனியின் இரண்டாவது மனைவி, சித்தமபரத்தின் தாய். (சித்தாதெரு சின்னப்பாப்பா)
    • நளினி - பருவம் 2 (அத்தியாயங்கள்: 161-218)
  • பெரியப்பப்பா மற்றும் பாப்புவின் மாமியார், கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் மற்றும் தேஜாவின் தாய்.
    • நளினி - பருவம் 3 (அத்தியாயங்கள்: 1-174)

பெரியப்பப்பா

[தொகு]
  • நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். மருமகளை அடிமை படுத்தும் மாமியாரை எதிர்ப்பவள். ஹரிஷின் மனைவி.
    • நிரோஷா - பருவம் 1 (அத்தியாயங்கள்: 1-65), பகுதி 2 (அத்தியாயங்கள்: 1-104)
  • சிதம்பரத்தின் மனைவி மற்றும் பிஸ்சாவின் தாய்.
    • பல்லவி மேனன் - பருவம் 2 (அத்தியாயங்கள்: 105-160)
  • மதுரையின் மனைவி.
  • சின்னப்பாப்பாவின் கணவனின் தங்கை மகள். பாலகிருஷ்ணனின் மனைவி.
    • சித்ரா - பருவம் 3 (அத்தியாயங்கள்: 1-174)

பட்டாபி

[தொகு]
  • பெரியப்பாவின் அக்கா கணவன். சின்னப்பாப்பாவின் தம்பி என்று சொல்லும் ஒரு அடிமை.

வாசுதேவன்

[தொகு]
  • சின்னப்ப்பாவின் கணவன் இவர் ஒரு நீதிபதி மனைவி சொல்லுக்கு மறு வார்த்தை சொல்லாதவர் மற்றும் மனைவிக்கு பயந்தவர்.

பழனி

[தொகு]
  • சின்னப்பாப்பா மற்றும் சித்தாதெரு சின்னப்பாப்பாவின் கணவன், சிதம்பரம் மற்றும் மதுரையின் தந்தை.

பாலகிருஷ்ணன் (பால்கி)

[தொகு]
  • சின்னப்பாப்பாவின் மூத்த மகன், பெரிய பாப்பாவின் கணவன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தேஜாவின் அண்ணன்.
    • வெற்றிவேலன் - பருவம் 3 (சில அத்தியாயங்களில்)

கோபாலகிருஷ்ணன்(கோகி)

[தொகு]
  • சின்னப்பாப்பாவின் இரண்டாவது மகன், பாலகிருஷ்ணனின் தம்பி, தேஜாவின் அண்ணன், பப்புவின் கணவன்.
    • குறிஞ்சி நாதன் - பருவம் 3

பப்பு

[தொகு]
  • சின்னப்பாப்பாவின் இரண்டாவது மருமகள், கோபாலகிருஷ்ணனின் மனைவி.

நடிகர்களின் தேர்வு

[தொகு]

இது ஒரு நகைச்சுவை தொடர். இந்த தொடரின் முதல் பருவத்தில் 1980 களில் புகழ் பெற்ற நடிகை சிறீபிரியா சின்னப்பபாவாக நடித்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தொலைக்காட்சி தொடர் இதுவாகும். பெரியப்பப்ப்பா கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நகைச்சுவை நடிகர் மதன் பாப் என்பவர் வாசு தேவன் என்ற கதாபாத்திரத்தில் சின்னப்பாப்பாவுக்கு ஜோடியாகவும் சுரேஷ் சக்கரவர்த்தி[2] என்பவர் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்தில் பெரியப்பாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த தொடரில் எம். எசு. பாசுகர் என்பவர் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் பகுதி 1 முதல் 4 வரையிலான தொடரில் நடித்துள்ளார்கள்.

இரண்டாம் பருவத்தில் முதலில் நடிகை சிறீபிரியா நடித்தார், 52 அத்தியாயங்களிருந்து நடிகை கல்பனா என்பவர் சின்னப்பாப்பா கதாபாத்திரத்தில் நடித்தார். பெரியப்பாவாக நிரோஷாவும் வாசு தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் ராமனும் மற்றும் ஹரிஷ் கதாபாத்திரத்தில் விஜய் சாரதி நடித்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பருவத்தில் சின்னப்பாப்பா கதாபாத்திரத்தில் நடிகை சீமா மற்றும் பெரியப்பப்பா கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி நடிகை பல்லவி மேனன் என்பவர் நடித்துள்ளார். இந்த தொடரில் புது கதாபாத்திரத்தில் பெரியப்பாவின் மகனாக பிச்சா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளார். சின்னப்பாப்பாவின் கணவன் கதாபாத்திரத்தில் வாசு விக்ரம் நடிக்க, பெரியப்பப்பாவின் கணவன் கதாபாத்திரத்தில் நடிகர் சாம்ஸ் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chinna Papa Periya Papa Promo 1". RadaanMedia. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "'பாட்டிகள் ஜாக்கிரதை' சுரேஷ் சக்ரவர்த்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?". www.dinamani.com. பார்க்கப்பட்ட நாள் 02nd January 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]