உள்ளடக்கத்துக்குச் செல்

காமராஜ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமராஜ்
இயக்கம்ஏ. பாலகிருஷ்ணன்
தயாரிப்புரமணா கம்யூனிக்கேசன்ஸ்
கதைசேம்பர் ஜெயராஜ்,
ஜெ. பிரான்சிஸ் கிருபா
நடிப்புஜே.மகேந்திரன்.ரிச்சர்ட் மதுரம்,
ஆனந்தி ,
சாருஹாசன் ,
சம்பத்ராஜ் சுமந்த்
ஒளிப்பதிவுஎம்.எம் ரெங்கசாமி
படத்தொகுப்புஉதிரிப்பூக்கள் வி.டி.விஜயன்
விநியோகம்ரமணா கம்யூனிகேஷன்ஸ்
வெளியீடு13 பிப்ரவரி 2004
ஓட்டம்121 நிமிடங்கள்
மொழிதமிழ்

காமராஜ் (Kamaraj) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். தமிழக முதல் அமைச்சராகவும் அரசர்களை உருவாக்குபவர் என்ற பட்டத்தினையும் பெற்ற காமராஜரின் வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் வெளிவந்தது.[1]

வகை

[தொகு]

கதை

[தொகு]

கதை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய காலம், காமராஜின் குழந்தைப் பருவம், சத்தியமூர்த்தியின் செல்வாக்கு, ஒரு அரசியல்வாதியாக காமராஜின் வளர்ச்சி மற்றும் அவரது சிறை வாழ்க்கை ஆகியவற்றை சித்தரிக்கிறது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதி, வாலி மற்றும் இளையராஜா ஆகியோரது வரிகள் இடம்பெற்றன.

  • "வந்தே மாதரம்"
  • "நாடு பார்த்ததுண்டா"- வாலி
  • "ஊருக்கு உழைத்தவனே"
  • "செந்தமிழ் நாடெனும்" -சுப்பிரமணிய பாரதி
  • "காமராஜ் பேச்சு"

துணுக்குகள்

[தொகு]
  • 20 நாட்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் 50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.
  • இத்திரைப்படத்திற்கான இசையமைப்பினை நான்கு நாட்களில் முடித்திருந்தார் இளையராஜா.

விமர்சனம்

[தொகு]

இத்திரைப்படம் விருதுநகரில் உள்ள காமராஜரின் தங்கை மறைந்த .நாகம்மாளின் குடும்பத்தினர்களின் கருத்தையும் காமராஜருடன் அவரின் தங்கை மகன்களின் அனுபவங்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டதால் காமராஜரின் அரசியல் வாழ்க்கை தவிர அவருடைய தாய், தங்கை, தங்கை மகன்கள், மகள்கள், மருமகள்கள், தங்கை பேரன்மார்கள் என பெரிய குடும்பப் பின்னணி இப்படத்தில் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

இவற்றையும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. காமராஜ். மாலைமலர். சூலை 15, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமராஜ்_(திரைப்படம்)&oldid=3941034" இலிருந்து மீள்விக்கப்பட்டது