என். கே. தேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். கே. தேசம்
N. K. Desam
2021 இல் என். கே. தேசம்
2021 இல் என். கே. தேசம்
இயற்பெயர்
എൻ. കെ. ദേശം
பிறப்புஎன். குட்டிகிருஷ்ணா பிள்ளை
(1936-10-31)31 அக்டோபர் 1936
தேசோம், ஆலுவா, கொச்சி, இந்தியா
இறப்பு4 பெப்ரவரி 2024(2024-02-04) (அகவை 87)
கொத்தகுலங்கர, அங்கமலி, கேரளம், இந்தியா
தொழில்கவிஞர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்
மொழிமலையாளம்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்முத்ரா, கீதாஞ்சலி
குறிப்பிடத்தக்க விருதுகள்கேரள சாகித்திய அகாதமி விருது, ஓடக்குழல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி பரிசு
துணைவர்ஆர். லீலாவதி

என். குட்டிகிருஷ்ணா பிள்ளை (N. K. Desam, 31 அக்டோபர் 1936 – 4 பெப்பிரவரி 2024), என். கே. தேசம் என்று நன்கு அறியப்பட்ட தென்னிந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இந்திய மலையாளக் கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். 2009 இல், இவரது கவிதைத் தொகுப்பான முத்ரா கேரள சாகித்திய அகாதமி விருதை வென்றது. இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி படைப்பினை 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இந்நூல் கேரளாவின் கேந்திர சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்புப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

என். கே. தேசம் 1936 அக்டோபர் 31 அன்று ஆலுவா அருகிலுள்ள தேசோம் கிராமத்தில் பிறந்தார்.[1] ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அதிகாரியாக இருந்த இவர் 1996 இல் ஓய்வு பெற்றார். ஆர். லீலாவதியை மணந்து மூன்று குழந்தைகளைப் பெற்றார்.[2] பன்னிரண்டு வயதிலிருந்தே எழுதத் தொடங்கிய இவர், 10 இற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். இவரது முதல் தொகுப்பு அந்திமலரி என்பதாகும், இவர் அந்திமலரி தொகுப்பை 1973 இல் வெளியிட்டார். 2016 இல், இரவீந்திரநாத் தாகூரின் 'கீதாஞ்சலி' யை மலையாள மொழியில் மொழிபெயர்த்ததற்காக கேந்திர சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.[3]

என். கே. தேசம் 2024 பெப்பிரவரி 4 அன்று கொடுங்கல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 87. [4] மறுநாள் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதிச் சடங்கிற்கு உள்ளூர் காவற்காரர்களுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.[2]

படைப்புகள்[தொகு]

sampoorna krithikalude samaharam
இவரின் முழுப் படைப்புகள்
ஆண்டு தலைப்பு வெளியீட்டாளர் குறிப்புகள்
1973 அந்திமலரி எசு.பி.சி.எசு., கோட்டயம்
1975 கன்யாகிரிதயம் எசு.பி.சி.எசு., கோட்டயம்
1979 அப்பூபந்தாடி கேரள சாகித்திய அகாதமி, திருச்சூர்
1979 சொட்டையிலே சீலம் எசு.பி.சி.எசு., கோட்டயம்
1981 பவிழமல்லி எசு.பி.சி.எசு., கோட்டயம்
1984 உள்ளெகம் என்.பி.எசு., கோட்டயம்
1999 அன்பதொன்னக்சரளி எசு. டி. ரெட்டியார் & சன்சு, கொச்சி
2001 எலிமீசா எசு.பி.சி.எசு., கோட்டயம்
2003 காவியகெளி கிரீன் புக்சு, திருச்சூர்
2006 முத்ரா கரண்ட் புக்சு, கோட்டயம்
2006 மழதுளிகள் குருசேத்ரா பப்ளிகேசன்ஸ், கொச்சின்
2010 கீதாஞ்சலி கிரீன் புக்சு, திருச்சூர் கீதாஞ்சலியின் மொழிபெயர்ப்பு
2016 வைலோபிள்ளை கதகவிதகள் கிரீன் புக்சு, திருச்சூர்
2016 தேசிகம் வல்லத்தோல் வித்தியாபீடம், சுகபுரம்
என்.பி.எசு., கோட்டயம்
முழுப் பணிகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Dhanya Harikrishnan (2 August 2009). ദേശത്തിന്‍റെ കാവ്യലോകത്ത്‌ ഇത്തിരി നേരം [Interview with N. K. Desam]. Ezhuth (in மலையாளம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._தேசம்&oldid=3919033" இலிருந்து மீள்விக்கப்பட்டது