உள்ளடக்கத்துக்குச் செல்

எச். வி. அண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். வி. அண்டே
H. V. Hande
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்
பதவியில்
1988–1989
முன்னையவர்நிலை நிறுவப்பட்டது
பின்னவர்இராம. வீரப்பன் மற்றும் இரா. நெடுஞ்செழியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 28, 1927 (1927-11-28) (அகவை 96)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
வேலைமருத்துவர், அரசியல்வாதி

எச். வி. அண்டே (H. V. Hande, பிறப்பு: நவம்பர் 28, 1927) ஒரு தமிழக மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார். 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பூங்கா நகர் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி வேட்பாளராக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவரது மூதாதையர்கள் மங்களூரில் இருந்த காரணத்தால் மங்களூரார் என்று அழைக்கப்படுகிறார்.[3]

1980ல் நடந்த தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக 699 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோற்றார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 9000 வாக்குகளைப் பெற்றார். 2004-ல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆனார்.[4]

இவர் ஓர் எழுத்தாளரும் ஆவார். இராமாயணம், டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிற தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1984 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள செனாய் நகரில் அவர் அண்டே மருத்துவமனையைத் திறந்தார்.[5]

வகித்த பதவிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  3. "Off the record - A Mangalorean in Chennai". Deccan Herald. 11 November 2012. http://www.deccanherald.com/content/291538/off-record.html. பார்த்த நாள்: 4-07-2013. 
  4. "MK stir not sincere, says Hande". The Hindu. 9 November 2004 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050113235211/http://www.hindu.com/2004/11/09/stories/2004110914490400.htm. பார்த்த நாள்: 4 July 2013. 
  5. "Hande Hospital". Medicards.in. Archived from the original on 2013-07-04. பார்க்கப்பட்ட நாள் 4-07-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. V, Narayana Murthy (6 March 2012). "MGR was instrumental in eradicating polio: Hande". Indian Express. http://newindianexpress.com/states/tamil_nadu/article341395.ece?service=print. பார்த்த நாள்: 4-07-2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._வி._அண்டே&oldid=3792922" இலிருந்து மீள்விக்கப்பட்டது