எச். போனிபேசு பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். போனிபேசு பிரபு
பிறப்பு14 மே 1972 (1972-05-14) (அகவை 51)
பெங்களூர், கருநாடகா
இருப்பிடம்பெங்களூர்
வலைத்தளம்
www.stephanehoudet.com
விம்பிள்டன் - ஆண்கள் சக்கர நாற்காலி இரட்டையர் போட்டி

ஆரி போனிபேசு பிரபு ( Boniface Prabhu) இந்திய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சக்கர நாற்காலியில் டென்னிசு விளையாடும் ஓர் வீரராவார். இந்தியாவில் விளையாட்டின் முன்னோடிகளில் ஒருவராக திழ்கிறார்.[1][2] இவர், 1998இல் நடந்த உலகப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.[3] 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது குடிமை விருதான பத்மசிறீ வருது வழங்கப்பட்டது [4]

சுயசரிதை[தொகு]

இவர் ஆரி ஜே. பிரபு, பாத்திமா பிரபு ஆகியோருக்கு, 1972 மே 14 அன்று, தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரில், தனது இரு சகோதரர்களான ஜெர்ரி, ஜார்ஜ் ஆகியோருடன் ஒருசாதாரண குழந்தையாகப் பிறந்தார்.[5] நான்கு வயதில் இடுப்பில் ஏற்பட்ட இரு காயம் அவரது வாழ்நாள் முழுவதும் இவரை ஒரு நாற்காலியில் அமரவைத்தது. இருப்பினும், இவர் ஒரு சாதாரண பையனாக இவரது பெற்றோரால் வளர்க்கப்பட்டார். இவரை சாதாரண குழந்தைகளுக்கான நிறுவனங்களுக்கு அனுப்பினார். இது சிறுவயதில் இவருக்கு எந்தவொரு போட்டி நபரும் விரும்புவதைப் போல தனது வாழ்க்கையையும் எடுத்துச் செல்ல உதவியது.[1][6]

இவர், உடலாலும், அறிவு பூர்வமாகவும் இயலாத மக்களை ஊக்குவிப்பதும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதும் நோக்கமாகக் கொண்டு பெங்களூரை தளமாகக் கொண்ட போனிபேசு பிரபு சக்கர நாற்காலி டென்னிஸ் அகாதமி என்ற அறக்கட்டளையை நிறுவினார். [7] மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த அகாதமி இலவச விளையாட்டுப் பயிற்சியை வழங்குகிறது.[8]

இவர் காஷ்மீரிலுருந்து கன்னியாகுமரி வரையிலான 3,500 கி.மீ. தூரத்தை வாகனத்தில் பயணம் செய்தார்.[9]

கிறிஸ்டினா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு சிமோன் தியா என்ற மகள் உள்ளார்.[5]

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

இவரது புகழ் சக்கர நாற்காலி டென்னிஸ் என்றாலும், இவர் மற்ற துறைகளிலும் சிறந்து விளங்கினார். சர்வதேச நிகழ்வுகளில், ஆறு பிரிவுகளில், 50 க்கும் மேற்பட்ட முறை இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சக்கர நாற்காலி டென்னிஸ் தவிர தடகளம், குண்டு எறிதல், பூப்பந்து, ஈட்டி எறிதல், மேசைப் பந்ட்ய்ஹாட்டம், குறி பார்த்து சுடுதல் , வெட்டெறிதல் ஆகியவை இதில் அடங்கும்.[1][3] 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் உலக சக்கர நாற்காலி விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச விளையாட்டுகளில் இவர் நுழைந்தார். அதில் இவர் குண்டு எறிதலில் தங்கப் பதக்கத்தையும், வட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1998 இணை ஒலிம்பிக் உலகப் போட்டிகளில் இவர் இந்த சாதனையை மீண்டும் செய்தார். ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டெறிதல் ஆகியவற்றில் பங்கேற்றார்.[10] சர்வதேச இணை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியராக இருந்தார்.[11]

டென்னிஸ் வாழ்க்கை[தொகு]

இவர் சிறு வயதிலேயே டென்னிஸில் ஈர்க்கப்பட்டார். இவர் இவான் லென்டில், ஜான் மெக்கன்ரோ ஆகியோரின் ரசிகராக இருந்தார் . இங்கிலாந்தில் 1996 ஆம் ஆண்டு நடந்த உலக சக்கர நாற்காலி தடகளப் போட்டியில் பங்கேற்றபோது, இவர் சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டிற்கு வாய்ப்பளித்தார். மேலும் விரும்பினார். இந்தியா திரும்பியதும், கர்நாடக மாநில புல்வெளி டென்னிஸ் சங்கத்தை அணுகி, அவர்களின் மைதானங்களை பயிற்சிக்கு பயன்படுத்த அனுமதி பெற்றார். இவர் ஒரு உள்ளூர் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டு டென்னிசை வேகமாக கற்றுக் கொண்டவர். இரண்டு ஆண்டுகளில், இவர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

இவர் ஒற்றையர் பிரிவில் 17 மற்றும் இரட்டையர் பிரிவில் 19 வது இடத்தைப் பிடித்தார். இவர் 2011 இல் ஆசியாவில் மிக உயர்ந்த தரவரிசை வீரராக இருந்து வருகிறார்.[12] தற்போதைய உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும், இந்தியாவில் முதலிடத்திலும் இருகிறார்.[1] இவர் 11 தொழில் முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும், அனைத்து கிராண்ட் சுலாம் போட்டிகளின் இறுதிப் போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார்.[3]

விருதுகளும், அங்கீகாரங்களும்[தொகு]

இவர், சக்கர நாற்காலி விளையாட்டுகளுக்கான இந்தியாவின் விளம்பரத் தூதராக உள்ளார். பல வணிக தயாரிப்புகளுக்கான விளம்பரத் தூதராகவும் உள்ளார்.[1][3][15]

அர்ச்சுனா விருது சர்ச்சை[தொகு]

இந்த 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தின் இளைஞர் விவகாரங்களும் விளையாட்டு அமைச்சகமும், இவருக்கு விளையாட்டில் சிறந்து விளங்கிய இரண்டாவது மிக உயர்ந்த விருதான அர்ச்சுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. [16][17] இருப்பினும், விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, இவரது பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இது இரண்டு ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. 2007 இல், இது வெளிப்படையான அலட்சியம் என ஊடகங்களில் கருத்துக்களை வெளியானது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று இவர் ஆச்சரியப்பட்டார்.[18] இவர் இன்றுவரை இந்த விருதைப் பெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Mausumi Sucharita (17 January 2011). "The face on the moon". web article. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  2. "Blogspot". Google Blogspot. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Harry Boniface Prabhu - Daijiworld profile". Daiji Media Network. 25 January 2014. Archived from the original on 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  4. 4.0 4.1 "Padma Awards Announced". Circular. Press Information Bureau, Government of India. 25 January 2014. Archived from the original on 8 February 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
  5. 5.0 5.1 "What a Racket". Times of India. 6 July 2003. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  6. "CV". Pankhudi Foundation.org. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  7. "Harry Boniface Prabhu - Daijiworld profile". Daiji Media Network. 25 January 2014. Archived from the original on 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  8. Ruqya Khan and Chitra Ramaswamy (2005). "Boniface Prabhu: Determined to defeat disability". Talbronstein.org. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
  10. Ruqya Khan and Chitra Ramaswamy (2005). "Boniface Prabhu: Determined to defeat disability". Talbronstein.org. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. ND TV Correspondent (17 July 2011). "Can't disabled sportsmen be awarded?". ND TV. Archived from the original on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  12. "Harry Boniface Prabhu". Daiji World Daily. 1 January 2011. Archived from the original on 4 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Ekalavya". Deccan Herald. 2005. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  14. "Rajyotsava". Times of India. 31 October 2003. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
  15. "Pioneer Of Wheel Chair Tennis In India". Tennis Junction.com. 26 June 2011. Archived from the original on 3 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  16. ND TV Correspondent (17 July 2011). "Can't disabled sportsmen be awarded?". ND TV. Archived from the original on 3 September 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
  17. "Harry Boniface Prabhu". Daiji World Daily. 1 January 2011. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
  18. "MBA Club India". MBA Club India. 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._போனிபேசு_பிரபு&oldid=3928139" இலிருந்து மீள்விக்கப்பட்டது