எச். எஸ். கன்னிங்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஹென்றி ஸ்டீவர்ட் கன்னிங்ஹாம்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1872–1877
முன்னவர் ஜான் டி. மைன்
பின்வந்தவர் பேட்ரிக் ஓ 'சல்லிவன்
தனிநபர் தகவல்
பிறப்பு 1832
இறப்பு 1920
படித்த கல்வி நிறுவனங்கள் London Borough of Harrow
Trinity College, Oxford
பணி வழக்கறிஞர்
தொழில் அரசு தலைமை வழக்கறிஞர்

சர் ஹென்றி ஸ்டீவர்ட் கன்னிங்ஹாம் (Sir Henry Stewart Cunningham) (1832-1920) என்பவர் ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் 1872 முதல் 1877 வரை மதராஸ் மாகாண மலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கன்னிங்ஹாம் 1832 ஆம் ஆண்டு ரெவ். ஜான் வில்லியம் கன்னிங்காம் என்பவரின் மகனாக பிறந்தார். கன்னிங்ஹாம் ஹாரோவில் கல்வி கற்றார். மேலும் ஆக்ஸ்போர்டின் டிரினிட்டி கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். இவர் 1859 இல் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார்.

தொழில்[தொகு]

வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட கன்னிங்ஹாம் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய இந்தியாவில் வழக்கறிஞர் தொழில் செய்தார். 1872 இல் சென்னை மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக உயர்ந்தார். 1877 ஆம் ஆண்டில், கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1877 முதல் 1887 வரை பணியாற்றினார். , 1876-78 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் காரணங்களை ஆராய 1878 ஆம் ஆண்டு இந்திய பஞ்ச ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இறப்பு[தொகு]

கன்னிங்ஹாம் 1920 இல் இறந்தார். முன்னதாக 1889 ஆம் ஆண்டு அவர் இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர் என கௌரவிக்கப்பட்டார் .

படைப்புகள்[தொகு]

 • தி க்ரோனிகல்ஸ் ஆஃப் டஸ்டிபூர், எ டெல் ஆப் மார்டன் ஆங்கிலோ-இந்தியன் சொசைட்டி, தொகுதி 1 [2]
 • தி க்ரோனிகல்ஸ் ஆஃப் டஸ்டிபூர், எ டெல் ஆப் மார்டன் ஆங்கிலோ-இந்தியன் சொசைட்டி, தொகுதி 2 [3]
 • தி ஹெரியட்ஸ் [4]
 • வேட் ஆண்ட் தாரெஸ் [5]
 • ஏர்ல் கேனிங் [6]
 • லேட் லாரல்ஸ் [7]

குறிப்புகள்[தொகு]

 1. Buckland, C. E. (1906). Dictionary of Indian Biography. London: Swan Sonnenschein & Co. பக். 81. https://archive.org/details/dictionaryindia00buckgoog. 
 2. Cunningham, Henry Stewart (1875). The Chronicles of Dustypore, a Tale of Modern Anglo-Indian Society. 1. London: Smith, Elder and Co.. https://archive.org/details/chroniclesofdust01cunn. 
 3. Cunningham, Henry Stewart (1875). The Chronicles of Dustypore, a Tale of Modern Anglo-Indian Society. 2. London: Smith, Elder and Co.. https://archive.org/details/chroniclesofdust02cunn. 
 4. Cunningham, Henry Stewart (1890). The Heriots. Macmillan & Co.. https://archive.org/details/heriotscunn00cunn. 
 5. Cunningham, Henry Stewart (1861). Wheat and Tares. London: Saunders, Otley & Co.. https://archive.org/details/wheatandtaresby00cunngoog. 
 6. Cunningham, Henry Stewart (1891). Earl Canning. https://archive.org/details/earlcanning00cunngoog. 
 7. Cunningham, Henry Stewart (1864). Late Laurels. London: Longman, Green, Longman, Robert & Green. https://archive.org/details/latelaurels00cunngoog. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._எஸ்._கன்னிங்காம்&oldid=3580984" இருந்து மீள்விக்கப்பட்டது