பேட்ரிக் ஓ 'சல்லிவன் (வழக்கறிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட்ரிக் ஓ 'சல்லிவன்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1877–1882
முன்னவர் எச். எஸ். கன்னிங்காம்
பின்வந்தவர் ஹேல் ஹோராஷியோ ஷெப்பார்ட்
தனிநபர் தகவல்
பிறப்பு 20 சனவரி 1835
இறப்பு 25 பெப்ரவரி 1887 (52 வயதில்)
பணி வழக்கறிஞர்
தொழில் அரசு தலைமை வழக்கறிஞர்

பேட்ரிக் ஓ 'சல்லிவன் (Patrick O' Sullivan) (20 சனவரி 1835 - 25 பெப்ரவரி 1887) என்பவர் ஐரிசு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார். இவர் மதராஸ் மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக 1877 முதல் 1882 வரையும், மதராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இங்கிலாந்தின் கிரேஸ் இன்னில் சட்டம் பயின்ற இவர், 1864 இல் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். [1]

இவர் இந்தியாவில் சிட்னி ஜேன் மூர் என்பவரை மணந்தார். இவர்களின் ஒரே மகனான, ஆர்தர், பிரித்தானிய இராணுவ அதிகாரியானார். ஆர்தர் 1914 கிறிஸ்துமஸ் சண்டையில் முக்கிய பங்கு வகித்தார். [2]

குறிப்புகள்[தொகு]