மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்[1] ( Advocate General) (அ) உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் என்பவர் இந்திய வழக்குரைஞர் கழகம் சட்டப்படி ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 165 இன் பிரிவின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்குரைஞர் நியமிக்கப்படவேண்டும். இவர் அந்தந்த மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இவரே மாநில அரசு சார்பில் வழக்குகளில் வாதாடுவார் மற்றும் அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார். உயர்நீதிமன்ற நீதிபதியாக தகுதியுடைய சட்ட வல்லுநர்கள் மட்டுமே இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]