எச்மியாட்சின் பேராலயம்
எச்மியாட்சின் பேராலயம் | |
---|---|
![]() தென் கிழக்கிலிருந்து பேராலயம், 2010 | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | வாகர்சபாத், ஆர்மவிர் மாகாணம், ஆர்மீனியா |
புவியியல் ஆள்கூறுகள் | 40°09′42″N 44°17′28″E / 40.161769°N 44.291164°E |
சமயம் | ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை |
வழிபாட்டு முறை | ஆர்மீனியம் |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
தலைமை | எல்லா ஆர்மீனியர்களினதும் கத்தோலிக்கஸ் |
Official name: Cathedral and Churches of Echmiatsin and the Zvartnots Cathedral | |
வகை: | கலாச்சாரம் |
வரையறைகள்: | ii, iii |
கொடுக்கப்பட்ட நாள்: | 2000 (24 வது தொடர்) |
மேற்கோள் எண். | 1011 |
பிராந்தியம்: | மேற்கு ஆசியா |
எச்மியாட்சின் பேராலயம் (Etchmiadzin Cathedral; ஆர்மீனியம்: Էջմիածնի Մայր տաճար, Ēǰmiatsni Mayr tačar) என்பது ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையின் தாய்க் கோவில் ஆகும். இது ஆர்மீனியாவின் வாகர்சபாத் நகரில் அமைந்துள்ளது. பல அறிஞர்களின் கூற்றுப்படி, பண்டைய ஆர்மீனியாவில் இது முதலாவது பேராலயமும் (தேவாலயம் அல்ல)[1] உலகின் பழமையான பேராலயமும் ஆகும்.
அரசர் மூன்றாம் டிரிடோட்சினால் அரச சமயமாக கிறித்தவம் உள்வாங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரோகரியினால் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்ப நான்காம் நூற்றாண்டில் மூலக் கோயில் கட்டப்பட்டதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது.[2] பாகால் வழிபாட்டிலிருந்து கிறித்தவத்திற்கு மாறியதன் அடையாளமாக முன்னைய கோயிலுக்குப் பதிலாக இது உருவாகியது. பாரசீகப் படை எடுப்பினால் கடுமையாக பேராலயம் சேதப்பட்ட பின்பு தற்போதைய கட்டடத்தின் மையம் 483/4 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வகன் மமிகோனியனால் கட்டப்பட்டது. இதனுடைய அடித்தளம் முதல் ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி வரை, எச்மியாட்சின் எல்லா ஆர்மீனியக் கத்தோரிக்கசுக்களின் இருக்கையாகவும், ஆர்மீனியத் திருச்சபையின் மிகப் பெரும் தலைமையாகவும் இருந்தது.
அது தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்காதிருந்தாலும், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் பேராலயம் நடைமுறையில் கைவிடப்பட்டது. 1441 இல் இது மீளமைக்கப்பட்டு இன்று வரை அப்படியே உள்ளது.[3] பாரசீகத்தின் முதலாம் அப்பாசினால் எச்மியாட்சின் சூறையாடப்பட்டு, அங்கிருந்த புனிதப் பொருட்களும் கற்களும் எடுக்கப்பட்டு ஆர்மீனியர்களுக்கு அந்நிலத்தின் மீதிருந்த ஈடுபாட்டை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பேராலயம் பல புனரமைப்புகளுக்கு உள்ளானது. மணிக்கூண்டுகள் ஏழாம் நூற்றாண்டு அரைப்பகுதியின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டன. 1868 இல், பேராலய கிழக்கு முனையில் திருக்கல அறை கட்டப்பட்டது.[4] தற்போது, இது ஆர்மீனிய கட்டடக்கலையின் பல கால வகைகளை உள்வாங்கியுள்ளது. சோவியத் காலத்தில் நலிவுற்றிருந்த எச்மியாட்சின் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைவாசியில், சுதந்திர ஆர்மீனியாவின் கீழ் எழுச்சியுற்றது.[4]
உலக ஆர்மீனிய கிறித்தவர்களின் பிரதான புண்ணியத்தலமாக இருப்பதால் மாத்திரம் எச்மியாட்சின் ஆர்மீனியாவில் சமயத்துக்குரிய முக்கிய இடமாக அல்ல, மாறாக அது அரசியல், கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் மிக்கது.[5] ஒரு பிரதான புண்ணியத்தலமாகவும், அந்நாட்டின் அதிகம் பேரால் சென்று பார்க்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது.[6] சில முக்கியமான ஆரம்ப மத்திய கால கோயில்கள் அருகில் உள்ளதுடன், 2000 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இப்பேராலயத்தை உலகப் பாரம்பரியக் களமாகப் பட்டியலிட்டது.
வரலாறு[தொகு]

அடித்தளமும் சொலலிலக்கணமும்[தொகு]
பாரம்பரியத்தின்படி, பேராலயம் 301 இற்கும் 303 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஆர்மீனியத் தலைநகராக இப்போதுள்ள வாகர்சபாத்தில் அரச மாளிகைக்கு அருகில், பாகாலின் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது.[7] மூன்றாம் டிரிடேட்சின் கீழ் இருந்த ஆர்மீனிய அரசு 301 இல் கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்றதன் மூலம், உலகின் முதலாவது கிறித்தவத்தை அரச சமயமாக ஏற்ற நாடாகியது. அகதான்கெலஸ் குறிப்பிட்ட (அண். 460) ஆர்மீனிய வரலாற்றுப்படி, ஆர்மீனியாவின் பாதுகாவலர் புனித கிரகரி இயேசு கிறித்து தங்க சுத்தியலால் உலகிற்கு அடிக்க வந்து, பேராலயம் அங்கு கட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அகக்காட்சியைக் கண்டார். அதுமுதல், அவர் கோயிலுக்கு எச்மியாட்சின் (Etchmiadzin; էջ ēĵ "வழித்தோன்றல்" + մի mi "ஒரே" + -ա- -a- + ծին tsin "இருந்தவர்") என்ற பெயரை அளித்தார்.[8] இது "ஒரே பேறாக இருந்தவர்" (கடவுளின் மகன்) என மொழிபெயர்க்கப்படுகிறது.[4][1] ஆயினும், எச்மியாட்சின் என்ற பெயர் 15 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்படவில்லை.[7] அதேநேரம், அரம்ப மூலங்கள் அது "வாகர்சபாத் பேராலயம்" என அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.[9][10]}} பரிசுத்த எச்மியாட்சின் பேராலயத் திருவிழா உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின் 64 நாட்கள் ஆர்மீனியத் திருச்சபையினால் கொண்டாடப்படுகிறது. இதன்போது "புனித கிரகரியின் அகக்காட்சியையும் பேராலய கட்டுமானம் பற்றியும் மூன்றாம் சகாக் எழுதியவை சிறப்பு பாடல்கள் பாடப்பட்டும்".[10]
உசாத்துணை[தொகு]
- குறிப்புகள்
- மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Wainwright, Geoffrey, தொகுப்பாசிரியர் (2005). The Oxford History of Christian Worship. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-513886-3. "In a vision, Gregory was shown to build the first church in the country, in Etchmiadzin..."
- ↑ Arakelian et al. 1984, ப. 571.
- ↑ Adalian 2010, ப. 128.
- ↑ 4.0 4.1 4.2 Robert H. Hewsen (2001). Armenia: A Historical Atlas. Chicago: University of Chicago Press. பக். 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-33228-4.
- ↑ Jaloyan, Vardan. "Էջմիածնի կաթողիկոսության հիմնադրման քաղաքական և աստվածաբանական հանգամանքները [Theological and political circumstances of the foundation of the Etchmiadzin Catholicosate"] (in hy). Religions in Armenia இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140411170630/http://www.religions.am/arm/articles/%D4%B7%D5%BB%D5%B4%D5%AB%D5%A1%D5%AE%D5%B6%D5%AB-%D5%AF%D5%A1%D5%A9%D5%B8%D5%B2%D5%AB%D5%AF%D5%B8%D5%BD%D5%B8%D6%82%D5%A9%D5%B5%D5%A1%D5%B6-%D5%B0%D5%AB%D5%B4%D5%B6%D5%A1%D5%A4%D6%80%D5%B4%D5%A1%D5%B6-%D6%84%D5%A1%D5%B2%D5%A1%D6%84%D5%A1%D5%AF%D5%A1%D5%B6-%D6%87-%D5%A1%D5%BD%D5%BF%D5%BE%D5%A1%D5%AE%D5%A1%D5%A2%D5%A1%D5%B6%D5%A1%D5%AF%D5%A1%D5%B6-%D5%B0%D5%A1%D5%B6%D5%A3%D5%A1%D5%B4%D5%A1%D5%B6%D6%84%D5%B6%D5%A5%D6%80%D5%A8/. பார்த்த நாள்: 11 April 2014.
- ↑ "The number of foreign tourists visiting Armenia expected to surge to one million". ARKA News Agency. 30 June 2014. http://arka.am/en/news/tourism/the_number_of_foreign_tourists_visiting_armenia_expected_to_surge_to_one_million/. "Foreign tourists usually visit the pagan temple of Garni, Geghard Monastery, Holy Etchmiadzin and Lake Sevan."
- ↑ 7.0 7.1
- hy:Ստեփան Մելիք-Բախշյան (2009) (in hy). Հայոց պաշտամունքային վայրեր [Armenian places of worship]. Yerevan State University Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-8084-1068-8.
- ↑ "Feast of the Cathedral of Holy Etchmiadzin". Araratian Patriarchal Diocese of the Armenian Holy Apostolic Church. http://www.araratian-tem.am/?page=holidays&id=1873#. பார்த்த நாள்: 14 November 2013.
- ↑ "Etchmiadzin". Armenian Studies Program California State University, Fresno இம் மூலத்தில் இருந்து 12 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140623214051/http://armenianstudies.csufresno.edu/iaa_architecture/etchmiadzin.htm.
- ↑ 10.0 10.1 "Տոն Կաթողիկե Սբ. Էջմիածնի [Feast of the Cathedral of Holy Etchmiadzin"] (in hy). Araratian Patriarchal Diocese இம் மூலத்தில் இருந்து 29 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140329220716/http://www.araratian-tem.am/?page=holidays&id=1873.
வெளி இணைப்புகள்[தொகு]
