எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள்
இலத்தீன் அமெரிக்காவில் விடுதலைப் போர்கள் பகுதி
நாள் 1808–1833
இடம் எசுப்பானிய அமெரிக்கா
விடுதலைப் போராளிகள் வெற்றி அறிவிப்பு
எசுப்பானிய ஆட்சி முடிவுறல்.
நிலப்பகுதி
மாற்றங்கள்
எசுப்பானியா கூபாவையும் புவர்ட்டோ ரிக்காவையும் தக்க வைத்துக் கொண்டு அமெரிக்காக்களில் இருந்த அனைத்து ஆட்புலங்களையும் இழத்தல்
பிரிவினர்
எசுப்பானிய அரசர்:
எசுப்பானிய அமெரிக்காவிலிருந்த விடுதலையாளர்கள்:
1820க்குப் பிறகு:
படைப் பிரிவுகள்
அரச நம்பிக்கையாளர்கள்:
நாட்டுப் பற்றாளர்கள்:
 • வடக்குப் படை (ஐக்கிய மாகாணங்கள்)
 • ஆந்தீசு படை
 • ஐக்கிய படை (அர்கெந்தீனா-சிலி)
 • பெரும் கொலம்பியாவின் படை.
 • மூன்று பொறுப்புறுதிகள் படை
 • மெக்சிக்கோவின் முகுடி மக்கள்
 • பிரித்தானிய லீஜியன்கள்[3]
 • பிறர் (வெளிநாட்டு தன்னார்வலர்கள்)
இழப்புகள்
மொத்த உயிரிழப்பு:
600.000

எசுப்பானிய அமெரிக்காவில் தன்னாட்சி முன்னேற்றம்
  வழமையான எசுப்பானிய சட்டத்தின் கீழான அரசு
  உச்சமைய இராணுவக் குழுவிற்கு விசுவாசமானவை
  அமெரிக்க இராணுவக் குழு அல்லது கிளர்ச்சியாளர்கள்
  தன்னாட்சி நாடு அறிவிப்பு அல்லது நிறுவல்
  மூவலந்தீவில் பிரான்சின் கட்டுப்பாடு உச்சத்தில் இருந்தபோது

எசுப்பானிய அமெரிக்காவில் விடுதலைப் போர்கள் (Spanish American wars of independence) 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நெப்போலியப் போரின் போது பிரான்சு எசுப்பானியாவில் படையெடுத்த பிறகு, எசுப்பானிய அமெரிக்காவில் எசுப்பானியப் பேரரசிற்கு எதிராக தொடுக்கப்பட்ட பல போர்களைக் குறிப்பதாகும். இந்தச் சண்டைகள் 1809இல் துவங்கின; பிரான்சின் தாக்குதலின்போது சட்டமன்ற, செயலாக்க அதிகாரங்களை எடுத்துக்கொண்ட உச்ச மைய இராணுவக் குழுவிற்கு எதிராக சுக்கிசாக்காவிலும் கித்தோவிலும் ஆளுநருக்கு மாற்றாக உருவான ஆட்சிக்குழுக்கள் முதல் இயக்கமாக இருந்தன. 1810இல் மைய இராணுவக் குழு பிரான்சிடம் வீழ்ந்தபோது அமெரிக்காகளில் இருந்த எசுப்பானிய ஆட்புலங்களில் பல புதிய உள்ளக ஆட்சிக் குழுக்கள் தோன்றின. இந்த ஆட்சிக்குழுக்களுக்கும் எசுப்பானியாவிற்கும் இடையேயான சண்டைகளின் விளைவாக புதிய தன்னாட்சி நாடுகள் உருவாயின. தெற்கில் அர்கெந்தீனா, சிலியிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை இந்த சுதந்திர நாடுகள் உருவாயின. கூபாவும் புவர்ட்டோ ரிக்கோவும் எசுப்பானியாவின் ஆட்சியில் 1898இல் எசுப்பானிய அமெரிக்கப் போர் வரை நீடித்தன.

மேற்சான்றுகள்[தொகு]

 1. Garret, David T (2003). "Los incas borbónicos: la elite indígena cuzqueña en vísperas de Tupac Amaru". Revista Andina 36. பன்னாட்டுத் தர தொடர் எண்:0259-9600. http://revistandina.perucultural.org.pe/textos/garret.doc. பார்த்த நாள்: 2016-06-01.  See also: [1]
 2. சிஸ்பிளாட்டினாவின் மீதான முதல் தாக்குதலை போர்த்துக்கேய படைகள் 1811இல் நடத்தின; எசுப்பானியாவிற்கும் போர்த்திக்கலிற்கும் இடையே பிணக்கிலிருந்த பந்தா ஓரியன்டலை தங்கள் வசப்படுத்தவே இந்த தாக்குதல் நடந்தது; புவனெசு ஐரிசிலிருந்து தன்னாட்சி அரசுக்கு எதிராக அல்ல.
 3. வெனிசுவேலா, கொலம்பியப் படைகளின் அலகுகள் ஐரிய, பிரித்தானிய தன்னார்வலர்களுடன்; அல்லது இலத்தீன் அமெரிக்க கொடியின் கீழான கூலிப்படைகள்.