உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit ( ILP) இந்தியக் குடிமக்கள், இந்தியவில் பாதுகாக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் போன்ற மாநிலங்களில் சுற்றுலா மற்றும் வேலை காரணமாக செல்பவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் எல்லைச் சோதனைச் சாவடிகளில் மற்றும் விமான நிலையங்களில் மாநிலத்தில் உள்நுழைவதற்கு அனுமதிச் சீட்டு வழங்குவர். இதன் அனுமதிக் காலம் ஏழு நாட்கள் வரை இருக்கும். தேவைப்பட்டால் 15 நாட்கள் வரை நீட்டிப்பர். இந்த அனுமதிச் சீட்டு லடாக் பகுதிகளுக்குப் பயணிக்கும், லடாக்கியர் அல்லாத அனைத்து மாநில இந்தியர்களுக்கும் பொருந்தும்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், வடகிழக்கு மாநிலங்கள் அல்லது லடாக் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசின் உள்நுழைவு அனுமதிச் சீட்டு பெறவேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் குறுகிய காலச் சுற்றுலாச் செல்வோருக்கும், அப்போது நீண்டகாலம் தங்கி பணிபுரிபவர்களுக்கும் இரண்டு வகையான நுழைவுச் சீட்டுக்கள் வழங்கப்படுகிறது.[1]

உள்நுழைவுச் சீட்டு பெற்றுச் செல்ல வேண்டிய மாநிலங்கள்[தொகு]

பின்னணி[தொகு]

பிரித்தானிய இந்திய ஆட்சியில், 1873-இல் தற்போதைய வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கியது. எனவே அப்பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பிற மாநிலங்களின் இந்தியக் குடிமக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அரசின் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது[12][13]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணப்புகள்[தொகு]