உருமேனியா தேசிய காற்பந்து அணி
Appearance
கூட்டமைப்பு | உருமேனியா காற்பந்து கூட்டமைப்பு (FRF) | ||
---|---|---|---|
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | ||
தன்னக விளையாட்டரங்கம் | தேசிய அரங்கு | ||
பீஃபா குறியீடு | ROU | ||
பீஃபா தரவரிசை | 19 (5 மே 2016) | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 3 (செப்டம்பர் 1997) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 57 (பெப்ரவரி 2011, செப்டம்பர் 2012) | ||
எலோ தரவரிசை | 27 (9 செப்டம்பர் 2015) | ||
அதிகபட்ச எலோ | 5 (சூன் 1990) | ||
குறைந்தபட்ச எலோ | 42 (1949, 1960) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
யூகோஸ்லாவியா 1–2 உருமேனியா (பெல்கிறேட், யுகோசுலாவியா; 8 சூன் 1922) | |||
பெரும் வெற்றி | |||
உருமேனியா 9–0 பின்லாந்து (புக்கரெஸ்ட், உருமேனியா; 14 அக்டோபர் 1973) | |||
பெரும் தோல்வி | |||
அங்கேரி 9–0 உருமேனியா (புடாபெஸ்ட், அங்கேரி; 6 சூன் 1948) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1930 இல்) | ||
சிறந்த முடிவு | காலிறுதிகள், 1994 | ||
ஐரோப்பிய வாகையாளர் | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1984 இல்) | ||
சிறந்த முடிவு | காலிறுதிகள், 2000 |
உருமேனிய தேசிய காற்பந்து அணி (Romania national football team, Echipa națională de fotbal a României) என்பது உருமேனியாவின் தேசிய காற்பந்து அணியாகும். இது உருமேனிய கால்பந்து கூட்டமைப்பினால் நிருவகிக்கப்படுகிறது.
1930 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்து கொண்ட நான்கு ஐரோப்பிய அணிகளில் உருமேனியாவும் ஒன்று. ஏனையவை யுகோசிலாவியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகியனவாகும்.[1]
அதன் பின்னர், 1934, 1938, 1970, 1990, 1994, 1998 பீஃபா உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபற்றியது. 1994 போட்டிகளில் உருமேனிய அணி காலிறுதிப் போட்டியில் தென்னமெரிக்காவின் ஆர்செந்தீன அணியை வென்றது.[1]
2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் உருமேனியா காலிறுதிக்கு செருமனி, போர்த்துக்கல், இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் முன்னேறியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Freddi, Cris (2006). Complete Book of the World Cup 2006. London: Harper Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-722916-X. p. 7