உரிமைப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உரிமைப் போர்
இயக்கம்இராஜ இராஜேந்திரன்
தயாரிப்புசிவ பாலாஜி
கதைஇராஜ இராஜேந்திரன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புஎன். சந்திரன்
கலையகம்தீபா லட்ணுமி சினி ஆர்ட்ஸ்
வெளியீடுஅக்டோபர் 19, 1998 (1998-10-19)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உரிமைப் போர் (Urimai Por) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் குற்றத் திரைப்படம் ஆகும். ராஜ ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனந்தராஜ், மன்சூர் அலி கான், பொன்னம்பலம், அஜய் ரத்னம், வினு சக்ரவர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். சிவா பாலாஜி தயாரித்த இப்படத்ததிற்கு, தேவா இசை அமைத்தார். படம் 1998 அக்டோபர் 19 அன்று பல தீபாவளி திரைப்படங்களில் ஒன்றாக வெளியானது. [1] [2] [3]

கதை[தொகு]

கடன் சுறா பாலுவும் ( மன்சூர் அலி கான் ) அவனது கூட்டத்தினரும் கடன் பெற்ற தம்பதியிடம் கடன் பணத்தை வசூலிக்க வருவதுடன் படம் தொடங்குகிறது. தங்களிடம் பணம் இல்லை என்று தம்பதியினர் கூறுகிறார்கள். எனவே பாலு அந்த மனிதனைக் கொன்றுவிடுகிறான். மேலும் அவர்களது வீட்டில் இருந்த பெண்ணை (வர்ஷா) கொடூரமாக கற்பழிக்கின்றான். பின்னர் அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று ஒரு காவலரின் துப்பாக்கி முனைக் கத்தியில் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். பின்னர் நேர்மையான உதவி காவல் ஆணையர் ராஜா யேசு முகமது ( அருண் பாண்டியன் ) கற்பழித்த பாலுவை பிடித்து கைது செய்கிறார். சில மணி நேரங்களில் ராஜா யேசு முகமதுவுக்கு அவரது மேலதிகாரிகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் பாலுவை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுக்கிறனர். பாலுவின் வழக்கறிஞர்கள் அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கின்றனர். ராஜா யேசு முகமதுவை பழிவாங்குவதாக பாலு சபதம் செய்கிறான். பாலு, மார்த்தாண்டன் ( பொன்னம்பலம் ), ஜே.கே பி ( ஆனந்தராஜ் ) ஆகிய சகோதரர்கள் குற்றங்களைப் புரிவதை வாடிக்கையாக கொண்டவர்கள். இவர்களில் அண்ணனான ஜே.கே பி அவர்களில் மிகவும் ஆபத்தானவன். இந்த நிலையில் இவர்களுக்கும் ராஜா யேசு முகமதுவுக்கும் ஏற்படும் மோதல் என்ன ஆகிறது என்பதே கதையின் அடுத்தடுத்த பகுதிகளாகும்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

திரைப்பட பின்னணி இசை மற்றும் பாடல் ஆகியவற்றுக்கு திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையமைத்தார். 1998 இல் வெளியான இந்த பட்த்தின் இசைப்பதிவில், காளிதாசன், பொன்னியின் செல்வன், அன்பு தீபன், சிவானந்தன் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன. [4] [5]

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் வரிகள் காலம்
1 'ஆரம்பம் நல்லாயிருக்கு' தேவா அன்பு தீபன் 4:39
2 'ஈரோடு சாந்தாயிலே' முரளி, சுவர்ணலதா பொன்னியின் செல்வன் 4:45
3 'சொட்டு சொட்டு மழைத்துளி' ஸ்வர்ணலதா 5:18
4 'இளங்காளி தேவியம்மா' சித்ரா காளிதாசன் 5:26
5 'கருமேகம் மழையாட்சு' கிருஷ்ணராஜ் சிவானந்தன் 5:26

குறிப்புகள்[தொகு]

  1. "Urimaipore (1998) Tamil Movie". spicyonion.com.
  2. "Filmography of urimaipporr". cinesouth.com. மூல முகவரியிலிருந்து 16 January 2005 அன்று பரணிடப்பட்டது.
  3. "Find Tamil Movie Urimaipore". jointscene.com. மூல முகவரியிலிருந்து 14 September 2011 அன்று பரணிடப்பட்டது.
  4. "Deva: Urimaipore (Original Motion Picture Soundtrack)". Deezer.
  5. "Urimaipore - Deva". saavn.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமைப்_போர்&oldid=3106682" இருந்து மீள்விக்கப்பட்டது