உயிர்கொல்லி மருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓரு பயிர் தெளிப்பான் உயிர்கொல்லி மருந்தினை வயலில் தூவும் காட்சி
A Lite-Trac four-wheeled self-propelled crop sprayer spraying pesticide on a field

உயிர்கொல்லி மருந்து அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை பீடைகளைக் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் (repelling) அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும்[1]. இவை ஒரு உயிர்க்கொல்லி வர்க்கத்தை சாரந்தாகும். பூச்சிக்கொல்லிகளும் ஒருவகைப் பீடைகொல்லிகளே. பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை தடுத்து, அழித்து அல்லது தணிமைப்படுத்துவதற்க்கான பொருட்களை கொன்டது. இவை நச்சுத் தன்மை வாய்ந்த சில வேதிப்பொருட்களாலானது. இது உயிர்களைக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்தவையாகும். இது வேளாண்மையில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

வரைவு[தொகு]

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உயிர்கொல்லி மருந்தினைப் பின்வருமாறு வரையறுக்கிறது:

உணவு, உணவு தானியம், ஏனைய விவசாய தயாரிப்புக்கள், மரம், மரம் சார்ந்த தயாரிப்புக்களின் தயாரிப்பு, பதப்படுத்துதல், சேமிப்பு, போக்குவரத்து, அல்லது விற்பனையில் குறுக்கிடும் தாவரங்கள், செடிகள், விலங்குகள் அல்லது தேவையற்ற இனங்கள், மனித அல்லது விலங்கு நோய்ப்பரப்புக்காரணிகளை அழிப்பதற்காகவும், தடைசெய்யவும் பயன்படுத்தப்படும் எந்த ஒரு பொருளும், கலவையும் உயிர்கொல்லி மருந்தாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. US Environmental (July 24, 2007), What is a pesticide? epa.gov. Retrieved on September 15, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்கொல்லி_மருந்து&oldid=1746216" இருந்து மீள்விக்கப்பட்டது