உமரா சின்கவன்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமரா சின்கவன்சா
தாய்மொழியில் பெயர்උමාරා සිංහවංශ
பிறப்புஉமரா சின்கவன்சா
14 மார்ச்சு 1989 (1989-03-14) (அகவை 35)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
கல்விமுஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு
பணி
  • பாடகர்r
  • பாடலாசிரியர்
  • தயாரிப்பாளர்
  • ஒலிப்பதிவுப் பொறியாளர்
வாழ்க்கைத்
துணை
ரிஸ்கி பாமி
பிள்ளைகள்1
உறவினர்கள்உமரியா சின்கவன்சா (சகோதரி)
ருக்மணி தேவி (நடிகை) (அத்தைப் பாட்டி)
உமரா சின்கவன்சா
இசை வடிவங்கள்
இசைத்துறையில்1999–தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்பத்தியா மற்றும் சந்துஷ், ரந்திர் விட்டனா, உமரியா, அசாந்தி டி அல்விசு

உமாரா சின்கவன்சா ( Umara Sinhawansa; பிறப்பு 14 மார்ச் 1989), இலங்கையைச் சேர்ந்த ஓர் பாடகரும், பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் மற்றும் ஒலிப்பதிவுப் பொறியியலாளரும் ஆவார். இலங்கையின் பரப்பிசை, ரிதம் அண்ட் புளூஸ் மற்றும் ஜாஸ் வகைகளுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். [1] பதியா மற்றும் சந்துஷின் இசைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் முக்கியத்துவம் பெற்ற சின்கவன்சா, பின்னர் தனிப்பாடலுக்கு மாறினார்.

ஆரம்பகால வாழ்க்கை.[தொகு]

உமாரா சின்கவன்சா தொழில்முறை இசைக்கலைஞர்களான தோனி சின்கவன்சா மற்றும் ஆயிசா சின்கவன்சா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[2] இவரது பெற்றோர் இவரை ஜாஸ் மற்றும் ஹிப் ஹாப் முதல் பாரம்பரிய இசை மற்றும் ஆர்&பி வரை அனைத்து வகையான இசையையும் வெளிப்படுத்த அனுமதித்தனர். இவருக்கு உமரியா சின்கவன்சா என்ற ஒரு சகோதரியும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர். உமாரா, கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். மூன்று சர்வதேச பாடல் போட்டிகளில்[3] இலங்கையை இவரது சகோதரி உமரியாவும் 2011 கிரிமியா இசைப் போட்டிகளில் உலகெங்கிலும் உள்ள பாடகர்களுடன் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை வென்றனர். மேலும் இலங்கையின் அகில இலங்கை பாடும் போட்டியில் முதல் பரிசையும் வென்றனர்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர் தனது முதல் தொழில்முறை பதிவை தனது 10 வயதில் தனது சகோதரி உமரியாவுடன் இணைந்து மேற்கொண்டார். மேலும் 13 வயதில் தனது முதல் பொது நிகழ்ச்சியையும் நிகழ்த்தினார். பின்னர் உமரா இரட்டையர்களான பதியா மற்றும் சந்துஷ் என்ற பாடகர்களுடன் இணைந்து பணியாற்றினார். மேலும் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இவர் ஒலிப்பதிவு பொறியாளராக நியமிக்கப்பட்டார். உமாரா நான்கரை ஆக்டேவ்களின் குரல் வரம்பைக் கொண்டுள்ளார்.[4]

ஆங்காங் குடிபெயர்தல்[தொகு]

ரிசிகி பாக்மியுடன் திருமணம் செய்து கொண்ட பிறகு, இவர் ஆங்காங்கிற்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் திலான் லையின் கீழ் ஜாஸ் இசையில் தேர்ச்சி பெற்றார். ஆங்காங்கில் 6 ஆண்டுகள் பணியாற்றியபோது, இவர் சீனாவிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மேலும் தனது புரோடியசு என்ற இசைக்குழுவுடன் இணைந்து பாடி இலங்கை பாடகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில் அங்காங்கிலிருந்து திரும்பிய பின்னர், இவர் உமரா மியூசிக் ஸ்டுடியோ என்ற இசை அகாதமியைத் தொடங்கினார்.[5] இது அனைத்து வயது மாணவர்களுக்கும் இசை மற்றும் குரல் பயிற்சியை வழங்குகிறது.[1][6]

தேசிய கீதம் சர்ச்சை[தொகு]

30,2023 அன்று, ஆர். பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் [துடுப்பாட்டப் போட்டியின் தொடக்க விழாவில் சின்கவன்சா, பாடகர்களான யொகானி மற்றும் சித்ரால் சோமபாலா ஆகியோருடன் இணைந்து சிறீ லங்கா தாயே என்ற இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடினார்.[7] இது அசல் பாணியிலிருந்து மிகவும் விலகிச் சென்றது. "மாதா" (தாய்) என்ற வார்த்தையை "மகதா" (மிஸ்டர்) என்று மாற்றி, பாடல் வரிகளை சிதைத்ததாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.[8] சிலர் இவரது பாடும் பாணியை மேற்கத்தியமயமாக்கப்பட்டதாக விமர்சித்தனர்.

சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து வேற்பாட்டைக் கொண்டிருந்தது.[9] கீதத்தை "களங்கப்படுத்தியதற்காக" பலர் இவரை கடுமையாக விமர்சித்தாலும்,[10] பாடகர் அசாந்தி டி அல்விசு மற்றும் சமகி ஜன பலவேகயா கட்சி உறுப்பினர் சமாத்கா ரத்நாயக்க[11] போன்ற பொது நபர்கள் உட்பட பலர் இவரை பாதுகாக்க வந்தனர். [12] புத்த சசானா மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்தின் அரசியல்வாதிகள் இந்த நிகழ்வை அரசியலமைப்பிற்கு முரணானது என்று கண்டித்தனர்.[13]

31,2023 அன்று, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகா எழுதிய வர்த்தமானி ஒன்றை வெளியிட்டது. அதில் தேசிய கீதம் சிதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடங்கப்படும் என்று கூறியிருந்தது.[14]

[15] ஆகஸ்ட் [16] 2 அன்று, சின்கவன்சா சமூக ஊடகங்களில் , "நான் என் தாய்நாட்டை நேசிக்கிறேன். தேசிய கீதத்தின் வார்த்தைகளை சிதைக்கும் நோக்கம் எனக்கு இல்லை, எந்த வகையான தவறான விளக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனது மக்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். எனவே, எனது செயல்திறனால் பாதிக்கப்பட்ட/புண்படுத்தப்பட்ட எவருக்கும் எனது இதயப்பூர்வமான மற்றும் உண்மையான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மன்னிப்பு கோரினார்.[17][18]

விருதுகள் மற்றும் சாதனைகள்[தொகு]

  • கஜகஸ்த்தான் மற்றும் சீனாவில் நடைபெற்ற இரண்டு சர்வதேச பாடல் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
  • உக்ரைனில் (2011) நடைபெற்ற கிரிமியா இசை விழாவில் தனது சகோதரி உமரியாவுடன் இணைந்து பாடி வெண்கல விருதை வென்றார்.
  • சர்வதேச கலைஞர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து பணியாற்றிய இலங்கையின் மிக இளைய பெண் கலைஞர் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Umara born to sing". Sunday Observer (in ஆங்கிலம்). 4 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  2. "INSIDE STORY". LIVING (in அமெரிக்க ஆங்கிலம்). 22 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  3. Pilapitiya, Sureshni. "Voice for all seasons". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  4. "Umara Sinhawansa | An Exceptional Icon in the World of Music". theentrepreneur.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  5. "Over 40 young artists spotlighted at the One Mic concert organised by Umara Music Studio". Sri Lanka News – BusinessNews.lk (in அமெரிக்க ஆங்கிலம்). 8 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  6. WIJEKOON, Channa Bandara. "Turning point for Channa". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
  7. UMARA | උමාරා [@umara_music] (30 July 2023). "Honoured to sing the National Anthem Live this evening at the @lplt20 @officialslc opening ceremony.🇱🇰". via இன்ஸ்ட்டாகிராம். Retrieved on 1 August 2023.
  8. Samarawickrama, Chaturanga Pradeep (1 August 2023). "National Anthem distortion at LPL opening stirs controversy Legal action contemplated". Daily Mirror. Retrieved on 1 August 2023.
  9. Rutnam, Easwaran (31 July 2023). "Social media at war over Umara and Sri Lanka National anthem". Colombo Gazette. Retrieved on 1 August 2023.
  10. (31 July 2023). "A Heedless Disgrace: Condemning the National Anthem Remix Fiasco". Sri Lanka Guardian. Retrieved on 1 August 2023.
  11. Chamathka Ratnayake [@Chamthka_0815] (31 July 2023). "I can’t help but think that all the unnecessary backlash again Umara’s rendition of the national anthem is because she took a principled stand to pull out of a concert.". via டுவிட்டர். Retrieved 1 August 2023.
  12. Samaraweera, Buddhika (31 July 2023). "National anthem: Singer’s slip of the tongue to face Govt.’s music". The Morning. Retrieved on 1 August 2023.
  13. Samaraweera, Buddhika (31 July 2023). "National anthem: Singer’s slip of the tongue to face Govt.’s music". The Morning. Retrieved on 1 August 2023.
  14. (31 July 2023). "Govt inquiry over Umara national anthem issue". Newswire. Retrieved on 1 August 2023.
  15. Umara Music (2 August 2023). No caption post. via முகநூல். Retrieved on 2 August 2023.
  16. UMARA | උමාරා [@umara_music] (2 August 2023). No caption post. via இன்ஸ்ட்டாகிராம். Retrieved on 2 August 2023.
  17. UMARA | උමාරා [@umara_music] (2 August 2023). No caption post. via இன்ஸ்ட்டாகிராம். Retrieved on 2 August 2023.
  18. Umara Music (2 August 2023). No caption post. via முகநூல். Retrieved on 2 August 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமரா_சின்கவன்சா&oldid=3907508" இலிருந்து மீள்விக்கப்பட்டது