யொகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யொகானி
படிமம்:Yohani1.jpg
தாய்மொழியில் பெயர்යොහානි
பிறப்புயொகானி திலோக்கா த சில்வா
30 சூலை 1993 (1993-07-30) (அகவை 28)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
கல்விவிசாக்கா வித்தியாலயம்
படித்த கல்வி நிறுவனங்கள்சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
பணி
  • பாடகி
  • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது

யொகானி திலோக்கா த சில்வா (Yohani Diloka de Silva , சிங்களம்: යොහානි දිලෝකා ද සිල්වා, பிறப்பு: 30 சூலை 1993), பொதுவாக யொகானி என அறியப்படுபவர் ஒரு இலங்கைப் பாடகியும் பாடலாசிரியரும் இசை வழங்குநரும் ஆவார். யூடியூப்பில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் ‘தெவியங்கே பாரே’ எனும் பாடலின் மூலம் நன்கறியப்படத் தொடங்கினார். பின்னர் மேலும் பாடல்களை வெளியிட்ட அவர் இலங்கையின் சொல்லிசை இளவரசி எனக் கூறுமளவுக்குப் புகழ் பெற்றார்.[1] அவரது "மெனிக்கே மகே ஹித்தே" என்ற பாடலின் மூலம் பல நாடுகளிலும் பிரபலமானார்.[2] யூடியூப்பில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட சந்தாதாரர்களைப் பெற்ற இலங்கையின் முதலாவது பாடகியும் அவரே.[3]

சர்ச்சை[தொகு]

யொகானியின் இலங்கை இராணுவ தொடர்பு சர்ச்சைக்குள்ளானது. யொகானியின் தந்தை முன்னாள் இலங்கை இராணுவம் மேஜர் ஜெனரல் பிரசன்னா டி சில்வாவின் ஆவார். அவர் மீது போர்க் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது. அப்படியிருக்கையில் யொகானி அவரை ஒரு 'ஹீரோ' என்று புகழ்ந்துள்ளார்.[4] மேலும் அவர் இராணுவ பல்கலைக்கழகம் ஒன்றில் படித்தார். மேலும், அவர் தமிழ் சினிமாவில் நுழைவதற்கு எதிர்வினைகள் ஏற்பட்டன. அது ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கி மீது விமர்சனத்தை கொண்டு வந்தது.[5][6]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யொகானி&oldid=3299162" இருந்து மீள்விக்கப்பட்டது