உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தங்கி

ஆள்கூறுகள்: 15°01′N 75°57′E / 15.02°N 75.95°E / 15.02; 75.95
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தங்கி
Uttangi
கிராமம்
உத்தங்கி Uttangi is located in கருநாடகம்
உத்தங்கி Uttangi
உத்தங்கி
Uttangi
இந்தியாவின் கர்நாடகாவில் அமைவிடம்
உத்தங்கி Uttangi is located in இந்தியா
உத்தங்கி Uttangi
உத்தங்கி
Uttangi
உத்தங்கி
Uttangi (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°01′N 75°57′E / 15.02°N 75.95°E / 15.02; 75.95
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்விஜயநகரம் (கர்நாடகம்)
வட்டம் (தாலுகா)அதகல்லி
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்5,401
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.என்-கேஏ
வாகனப் பதிவுகேஏ
இணையதளம்karnataka.gov.in

உத்தங்கி (Uttangi) இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.. [1] [2] இது கர்நாடகாவின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள அதகல்லி தாலுக்காவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல்

[தொகு]

கர்நாடகாவின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள அதகல்லி தாலுகாவில் மொத்தம் 1144 குடும்பங்கள் வசிக்கும் பெரிய கிராமம் உத்தங்கியாகும்.. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தங்கி கிராமத்தில் 5,666 பேர் இருந்தனர். இதில் 2,891 பேர் ஆண்கள் மற்றும் 2,775 பேர் பெண்கள் ஆவர்.

உத்தங்கி கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அப்போது 621 ஆக இருந்தது. இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 10.96 சதவீதம் ஆகும். உத்தங்கி கிராமத்தின் சராசரி பாலின விகிதமும் 960 ஆக இருந்தது. இது கர்நாடக மாநில சராசரியான 973 என்பதைவிடக் குறைவாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தங்கியின் குழந்தை பாலின விகிதம் 929 ஆகும், இது கர்நாடக சராசரியான 948 என்பதை விடக் குறைவு.

கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில், உத்தங்கி கிராமத்தில் கல்வியறிவு விகிதம் அதிகமாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில், உத்தங்கி கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 76.39 ஆகும். கர்நாடக மாநிலத்தின் எழுத்தறிவு 75.36 ஆகும். உத்தங்கியில் ஆண்களின் கல்வியறிவு 83.38 ஆகவும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 69.14 ஆகவும் இருந்தது.

இந்திய அரசியலமைப்பு மற்றும் பஞ்சாயதி அரசுச் சட்டத்தின்படி, உத்தங்கி கிராமம் கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ஒரு சர்பஞ்சு எனப்படும் கிராமத்தின் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
  • சன்னப்பா டேனியல் உத்தங்கி, ஓர் இந்திய எழுத்தாளர் [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India :". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Uttangi, Vijayanagara, Karnataka
  3. . 2004-07-09. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தங்கி&oldid=3864171" இலிருந்து மீள்விக்கப்பட்டது