உள்ளடக்கத்துக்குச் செல்

உதய் உமேஷ் லலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யு. யு. லலித்
இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில்
27 ஆகஸ்டு 2022 – 8 நவம்பர் 2022
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
முன்னையவர்என். வி. இரமணா
பின்னவர்தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 நவம்பர் 1957 (1957-11-09) (அகவை 67)

உதய் உமேஷ் லலித் அல்லது யு. யு. லலித் (Uday Umesh Lalit) (பிறப்பு: 9 நவம்பர் 1957) இந்திய உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக 27 ஆகஸ்டு 2022 முதல் 9 நவம்பர் 2022 வரை பணியாற்றினார். [1] உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என். வி. இரமணா 26 ஆகஸ்டு 2022 அன்றுடன் பணி ஓய்வு பெற்றார். உதய் உமேஷ் லலித், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதி ஆவார்.[2] லலித்துக்கு முன், நீதிபதி சிக்ரி 1964 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மன்றத்திலிருந்து நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.

பின்னணி

[தொகு]

இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணிபரிந்த உதய் உமேஷ் லலித், 13 ஆகஸ்டு 2014 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதிகள் தேர்வுக் குழு மூலம் நியமிக்கப்பட்டார்.[3][4][5]

வரலாறு

[தொகு]

நீதியரசர் யு. யு. லலித்த்தின் தந்தை யு. ஆர். லலித் மும்பை உயர் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகவும், பின்னர் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர். [6]

உதய் உமேஷ் லலித் சூன் 1983-இல் சட்டப் படிப்பை முடித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞ்ராக பதிவு செய்து கொண்டு பணியாற்றினார். உதய் உமேஷ் லலித் 1986 முதல் 1992 முடிய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் சோலி சொராப்ஜியுடன் பணிபுரிந்தார்.[7] 29 ஏப்ரல் 2004 அன்று யு. யு. லலித் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எனற தகுதியைப் பெற்றார்.

2011-ஆம் ஆண்டில் உதய் உமேஷ் லலித் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சி பி ஐயின் சிறப்பு வழக்கறிஞராக இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[8]

13 ஆகஸ்டு 2014 அன்று உதய் உமேஷ் லலித் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

அயோத்தி சிக்கலுக்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் உதய் உமேஷ் லலித் பணியாற்றினார். [9]

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக தேர்வு தேர்வு செய்யப்பட்டவர்.

உதய் உமேஷ் லலித் 13 ஆகஸ்டு 2014 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதிகள் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். இவர் 27 ஆகஸ்டு 2022 அன்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு
  2. >உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி உதய் உமேஷ் லலித்
  3. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி: யு.யு.லலித் பெயரை பரிந்துரைத்த ரமணா
  4. "SC judge appointment: Who is UU Lalit?". India Today. 11 July 2014. http://indiatoday.intoday.in/story/uu-lalit-name-cleared-by-supreme-court-collegium-for-being-a-judge/1/370824.html. 
  5. "Senior advocate Uday Lalit did not represent BJP leader Amit Shah in Sohrabuddin fake encounter case | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). dna. 14 July 2014. http://www.dnaindia.com/india/report-senior-advocate-uday-lalit-did-not-represent-bjp-leader-amit-shah-in-sohrabuddin-fake-encounter-case-2001957. 
  6. "All In The Family". Outlook India. 19 September 2016. https://www.outlookindia.com/magazine/story/all-in-the-family/297828. 
  7. J., Venkatesan (11 July 2014). "Collegium clears Uday Lalit for SC". The Hindu. http://www.thehindu.com/news/national/collegium-clears-uday-lalit-for-sc/article6198907.ece. 
  8. Singh, Sanjay K. (2011-04-12). "2G scam: SC orders Lalit be made prosecutor". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/2g-scam-sc-orders-lalit-be-made-prosecutor/articleshow/7954508.cms. 
  9. "Ayodhya case: SC to constitute fresh five-judge bench, Justice U U Lalit recuses.|" (in en-US). Business Standard. 10 January 2019. https://www.business-standard.com/article/pti-stories/ayodhya-case-sc-to-constitute-fresh-five-judge-bench-justice-u-u-lalit-recuses-119011000850_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்_உமேஷ்_லலித்&oldid=3874045" இலிருந்து மீள்விக்கப்பட்டது