சர்வ மித்ரா சிக்ரி
சர்வ மித்ரா சிக்ரி | |
---|---|
13ஆவது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 22 சனவரி 1971 – 25 ஏப்ரல் 1973 | |
நியமிப்பு | வி. வி. கிரி |
முன்னையவர் | ஜெயந்திலால் சோட்டாலால் சாகா |
பின்னவர் | அஜித் நாத் ரே |
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் 3 பிப்ரவரி 1964 – 25 ஏப்ரல் 1973 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] கபீர்வாலா, பஞ்சாப் | 26 ஏப்ரல் 1908
இறப்பு | 24 செப்டம்பர் 1992 | (அகவை 84)
தேசியம் | இந்திய |
சர்வ மித்ரா சிக்ரி (Sarv Mittra Sikri) (26 ஏப்ரல் 1908 – 24 செப்டம்பர் 1992) என்பவர் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் 13வது தலைமை நீதிபதியாக 22 ஜனவரி 1971 முதல் 25 ஏப்ரல் 1973 அன்று ஓய்வு பெறும் வரை பணியாற்றியவர் ஆவார்.[2]
இவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 1930-ல் தனது பணியினைத் தொடங்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் 1949-ல் பஞ்சாபின் உதவி அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1951 முதல் 1964 வரை அரசு தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
பிப்ரவரி 1964-ல், இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் சனவரி 1971-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியானார். வழக்கறிஞர் பதவியிலிருந்து நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் முதல் நீதிபதியும், இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியும் இவரே ஆவார்.
கேசவாநந்த பாரதிக்கும் கேரள மாநிலத்திற்குமான வழக்கில் இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டைக் கோடிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் இவர் ஆவார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon'ble Mr. Justice S.M. Sikri". Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 2012-06-24.
- ↑ "Sarv Mittra Sikri". Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 2012-06-24.
- ↑ "Kesavananda Bharati ... vs State Of Kerala And Anr on 24 April, 1973". Indian Kanoon. Para 316. பார்க்கப்பட்ட நாள் 2012-06-24.