உதயம்பேரூர் ஏகாதசி பெரும்திருக்கோயில் கோயில்
Appearance
உதயம்பேரூர் ஏகாதசி பெரும்திருக்கோயில் கோயில் இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உதயம்பேரூர் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலாகும். பழமையான இந்த இந்துக் கோயில்[1] கேரளாவின் கட்டிடக்கலை பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகு. நினைவுச்சின்ன கோபுரங்கள் மற்றும் சுற்று கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ள இக்கோயில் கேரளாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. கோயிலின் முக மண்டபமான முதல் அறை கேரள திராவிட கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டதாகும். முனிவர் பரசுராமர் இங்குள்ள மூலவரை சிலையை நிறுயதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SIVA TEMPLES". Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
- ↑ Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books